முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

Club House பரிதாபங்கள் - படிக்க வேண்டிய பதிவு!!!!

Club house எனும் செயலி சமீபத்தில் ட்ரெண்டில் இருப்பது,மற்ற சமூக வலைதளங்கள் போல இதுவும் ஒன்று,என்ன? இதில் வெறும் ஆடியோ வடிவில் மட்டுமே பேச முடியும்,இப்போது மெஸ்ஸேஜ் செய்யும் வசதியும் கொண்டு வந்துள்ளனர்.

இவைப்பற்றி கேள்விப் பட்டும் தள்ளியே இருந்தேன்,சரி என்ன தான் இருக்குனு உள்ளே சென்றேன்.

ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை ஆனால் போகப் போக புரிந்தது. பலருக்கு இப்போது இதுவே பொழுது போக்காக இருப்பது தெரிடவந்தது. என் நண்பர்கள் சிலரும் ஒரு ரூமில் இணைந்து பாட்டு கேட்டுக் கொண்டே தன் வேலையை செய்வதினால் மனஅழுத்தம் குறைவது போல் ஒர் உணர்வு என பகிர்கின்றனர்.

நிறைய தலைப்புகள்,புதிய மனிதர்கள்,நிறைய பொழுபோக்கு ,சிறிதளவு கற்றல் எது வேண்டுமோ அதை தேர்வு செய்வது நம் கையில் உள்ளது.

எனக்கு சேமிப்பு,முதலீடு,இலக்கு பற்றி சில கிளப்பில் இணைந்தேன்,பின்பு தெரியாமல் ஏதோ ஒரு ரூமில் இணைந்துவிட்டேன் யாரோ ஒருவர் ஒரு பெண்ணை ஆடை அணிந்தது  பற்றி சொல்லி விட்டு ஓடி விட்டார் போல,அதன் பிறகு ஒரே கத்தல்,கதறல்,கோபம்,அழுகை அந்த இடமே ரத்த பூமியாக இருந்தது.பின்பு தான் தெரிந்தது எல்லா ரூமில் இதே போன்ற ஏதாவது கொளாறு செய்பவர்கள் வந்துவிட்டு, ஓடு விடுகிறார்கள்.

இன்னொரு ரூமில்  தன் அம்மாவை பற்றி இழிவாக பேசியதற்கு பெரிய சண்டை.டிக் டாக் செயலி போல் தனிப்பட்ட சண்டையாக மாறி வெட்டு குத்து நடந்தது போல் இதிலும் அப்படி ஆக நிறையவே வாய்ப்பிருக்கு.
இப்படி ஆகுதுன்னு தெரிஞ்சி எதுக்கு அங்க போகணும்? அது முழுக்க முழுக்க அன்னியர்கள் இருக்கும் இடம்,அவ்வளவு எளிதில் யாரையும் நம்பக் கூடாது!!

இதுபோன்ற சாக்கடை விஷயங்கள் நடக்கும் இடத்தில் தான் நிறைய நல்ல தலைப்பில் நிறைய கற்றலை கொடுக்கும் இடமாகவும் திகழ்கிறது,நாம் உபயோகிப்பதில் இருக்கிறது.

யார் இந்த club house உபயோகித்தாலும் நல்ல விடயத்திற்கு உபயோகிக்கலாமே,தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்கலாமே, அங்கு சண்டை போடுவது நம் வேலை அல்ல, நம் வேலையை பார்ப்போம்!

"மாப்ள ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு அங்க போனா அல்ட்றா ஸ்ட்ரெஸ் மொடுக்கு தள்ளிட்டாங்க மாப்ள🤣"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

அயலி Webseries எப்படி உள்ளது? பெண்கள் படிக்க தடையா! பார்ப்போம் தரமான சம்பவம்😲🛑🙏

அயலி என்னதான் நல்ல படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தை எப்போது முடித்து அடுத்த சோலியை பார்க்கலாம்  என்று தான் எப்போதும் தோன்றும்.சில படங்கள் தான் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாமே, அடுத்த பாகம் எடுத்தால் நல்லாருக்கும் என தோன்றும். அதே போல் தான் அயலியும் மிகவும் பிடித்திருந்தது.முதல் இது படம் அல்ல சீரிஸ் எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் இல்லை சீரிஸ் பார்க்கும் பழக்கமும் இல்லை.  அயலி மொத்தம் 8 பாகம்,கிட்டததட்ட 4 மணிநேரத்திற்கு மேல். ஆனால் எந்த ஒரு நேரத்திலும் என்னடா எப்படா முடியும், என்ன இந்த காட்சி இப்படி இருக்கு  என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஹீரோ இல்லை,சண்டைக்காட்சி,காதல் ,நம்ம ஊர் திரைப்படங்களில்,நாடங்கங்களில் வருவது போல் தேவையில்லாத ஆணி பாடல்கள் இல்லை. முழு நேரமும் நம்ம சொந்த ஊர்களில் நாம் இருந்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஒவ்வொரு காட்சியும் நடிப்பாக இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது. அயலி - அந்த ஊருக்குள் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து ஓடி விட்டார்களாம் அதனால் அந்த ஊர் எரிந்து நாசமாகியது என சொல்கிறார...