சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
நம் அனைவர் வீட்டிலும் பொங்க வேண்டியது நாம் அல்ல, பொங்கல் மட்டுமே🙂.. சிலரெல்லாம் தன்னைத்தானே பீத்திக்கொள்வதுண்டு நான் பயங்கரமான கோபக்காரன்,எனக்கும் கோபம் வந்துச்சு அவ்ளோதான் என்னை யாராலயும் கட்டுப்படுத்த முடியாது" இப்படியெல்லாம் வெட்டி வீராப்பு காட்ட வேண்டியது,அவர்கள் சும்மா இருந்தாலும் உடன் இருக்கும் சொம்புகள் அவங்க ரொம்ப அமைதி ஆனா கோபம் வந்துச்சு செத்தோம்னு பயந்து சாவார்கள்... இதில் கொஞ்சம் உண்மையும் உண்டு கோபமே படாதவர்கள் ஒரு காரணத்திற்காக கோபப் பட்டால் அவர்களை கேட்டு தான் அவ்வுணர்ச்சி வெளிப்படும் மற்றவர்களுக்கு அப்போது தான் உண்மையான பயம் வரும் இவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் கோபம் வராது அப்படின்னா ஏதோ காரணம் இருக்குனு நினைச்சுக்குவாங்க... என் கல்லூரி பேராசிரியர் கூறியது இன்னும் நினைவில் உண்டு "கோபம் எனும் உணர்ச்சி உன்னைக்கேட்டு தான் வெளிப்பட வேண்டும், அப்படி இல்லையென்றால் அந்த உணர்ச்சி நம்மை கட்டுப்படுத்தும்... எளிமையாக கூற வேண்டுமென்றால் எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென கோபத்தை கக்குபவர்கள் ஒரு நகைச்சுவையான மனிதர் இதைக்கூட கையாளத் தெரியாத பக்குவம் இல்ல...