சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
சமீபத்தில் ட்ரெண்டில் இருக்கும் குட்டி வடிவேலு எனும் சஞ்சய்♥️சோபியை ஓட்டாத ஆளே இல்லை. வாட்சப்,முகப்புத்தகம், யூ ட்யூப்னு எங்கு பார்த்தாலும் ட்ரோல்ஸ் தான் அவர்களின் எண்ணமும் ட்ரெண்டிங் ஆவது தான், அவர்கள் மட்டுமல்ல ரீல்ஸ்,டிக் டாக் செய்பவர்கள் அனைவருக்கும் தான் ட்ரெண்ட்ஆக வேண்டும் என்பது தானே விருப்பம்,அனைவருக்கும் தன்னை பலருக்கும் தெரிய வேண்டும்,பாராட்ட வேண்டும் என்பது தானே ஆசையும் கூட. மற்றவர்கள் போல் இவ்விடயத்தை சிரித்து விட்டு கடந்து செல்ல முடியவில்லை, ஒரு விதமான கோபவும்,கேள்விகளும் எழுகிறது! என் பார்வை சரியானதா என தெரியவில்லை,அதுமட்டுமில்லாமல் முக்கால்வாசி பேருக்கு எதிரான,முரணான கருத்தாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். 17 வயது சிறுவன் 2k கிட் சஞ்சய்,சோபி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு பாராட்டி பேசி வந்து தன் காதலை அப்பெண்ணிடம் சோபியிடம் வெளிப்படுத்தியுள்ளார் ,அவருக்கும் பிடித்து போகவே ஓகேசொல்லியுள்ளார். பெற்றோர்களிடம் இதை தெரிவிக்க அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.இக்கால பெற்றோர் என்பதால் சாதாரணமாக எடுத்து கொண்டுள்ளனர் என நினைக்கிறேன். சஞ...