முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

குறைவான விலையில் இவ்வளவு சுவையான உணவுகளா?

சாயுங்காலம் ஆனால் போதும் ஏதாச்சும் திங்கனும்னு வாய் நமநமன்னும்,வயிறு கபகபன்னு இருக்கும்போது திடிரென இந்த கடை,சாரி சாரி கடையல்ல என் சொர்க்கம் நியாபகம் வர "**த்தா தாம்பரத்துல எறக்குடா என்பது போல க்ரோம்பேட்ல எறக்குடானு இறக்கியாச்சு"...

இதுல நகைச்சுவை என்னன்னா காலைல இருந்து கண்டன்ட் கிடைக்காம யோசிச்சிட்டு இருந்தேன்,நாங்க போன கடை கிட்ட ஓரு சண்டை அதை ஒட்டு கேட்டு ஒரு தத்துவத்தை அடிச்சு விடலாம்னு கூட தோணுச்சு நமக்கு எதுக்கு வம்பு "இருக்கிற இடம் தெரியாம இருந்தடனும்" அதனால் தான் இருக்கும் இடமே தெரியாமல் நல்லா தின்னிட்டு, ரசிச்சு ருசிச்சாச்சு....

சரிப்பா இந்த கதையெல்லாம் எனக்கெதுக்கு மூடிட்டு சொல்ல வந்ததை சொல்லிட்டு கிளம்பு அதானே!!!!
கூல் மக்கா,கொஞ்சம் இன்ட்ரோ முக்கியம் மாப்பி...

நான் கல்லூரி படித்த நாட்களில் ஸ்விகியில் வேலை பார்த்த போது பழக்கமான உடன் பிறவா சகோதரர் ஒருவர் இக்கடையை அறிமுகப்படுத்தினார்,சத்தியமா சொல்றேன் அங்க அந்த விலைக்கு சாப்பிட்ட ஐஸ் க்ரீமின் ருசி பல வருடங்களாக நாக்கில் நாட்டியமாடி இன்னும் வேண்டுமென கேட்டுக்கொண்டே இருந்தது...

ஆனால் கடையின் பெயரோ,இடமோ நினைவிலில்லை,சமீபத்தில் பல வருடங்கள் கழித்து நண்பரும், சகோதரருமான கார்த்தி அறிமுகமானார். அவருடன் இக்கடைக்கு அன்று சென்றது இன்று இதுவே வாடிக்கையாகி விட்டது....

இக்கடையை பற்றி கூறவேண்டுமெனில் பழமையான,பரம்பரையான,பாரம்பரியமான கடை, இங்கு எந்நேரம் சென்றாலும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

இங்கு இனிப்பு வகைகள் (பால்கோவா, ஜாங்கிரி,மைசூர் பா) ,கார வகைகள் (முறுக்கு,மிக்ஸர், காராசேவ்),கேக்ஸ்,பிரேஷ் க்ரீம் கேக்ஸ், பாதாம் ஜூஸ்,சாண்ட்விச்,பர்கர்,பிட்சா ,பப்ஸ் என இருந்தாலும்......

இங்கு வரும் முக்கால்வாசி பேருக்கு பிடித்தது கோன் ஐஸ்கிரீம் தான்,வெறும் 15 ரூபாய் தான் ,ஒவ்வொரு நாள் ஒவ்வொரு flavour, இரண்டு flavour மிக்சிங் அல்லது தனியாக ஒரே flavour ஆக வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் ,choco dip வேண்டுமென்றால் கூடுதலாக 5 ரூபாய் ,20 ரூபாயில் அட்டகாசமான சுவையில் நாவில் கரைந்து நின்னு பேசும் இந்த ஐஸ்க்ரீம்..!

இதிலும் சிறப்பு 25 ரூபாய் கொடுத்தால் brownie with ice cream ,brownie அதன்மேல் ஐஸ்கிரீம் அதன் மேல் choco  போடுவார்கள், அது உருகி brownieயும் ஐஸ்க்ரீமும்  சேர்த்து சாப்பிடிடும்போது அடடட.....!
 என்ன ருசி 300 ரூபாய் கொடுத்து உண்ணும் சுவையாவ்  வெறும் 25 ரூபாயில் கிடைத்தது...

பப்ஸ் நல்லா இருக்கும் 10 முதல் 15 ரூபாய் தான்,பர்கர் சொல்ற அளவுக்கு பெருசா இல்ல பட் ஓகே,மற்றவையேல்லாம் நல்லா தான் இருக்கு.....

எல்லாமே இவர்களின் சொந்த தயரிப்பு, சுத்தமும், சுவையும் நிச்சயம் கிடைக்கும் ..

சோ அந்த பக்கம் போனாலும் போகலைனாலும் ஒரு முறை போய்ட்டு சாப்பிடுங்க,சாப்பிட்டு அதே தெருவில் இருக்கும் புட்டு கடைக்கு சென்று வீட்டிற்கு வாங்கி செல்லுங்கள் இப்போது நாடு சர்க்கரை,நெய் சேர்த்து மிக்சியில் மிக்ஸ் செய்து கொடுக்கின்றனர் சுவை தரம் ,உடல் ஆரோக்கியம் அக்கடையைப் பற்றி நம் வலைதளத்தில் வெளிவந்த பதிவின் சுட்டியை இங்கே இணைக்கிறேன்..

இடியாப்பம் புட்டு கடை
http://ashokkumarsudarsanam.blogspot.com/2021/01/blog-post_16.html

S.V SWEETS AND BAKERS,ICECREAMS
Lakshmi Nagar, Radha Nagar, Chromepet, Chennai, Tamil Nadu 600044
Mobile No : 098409 16058
Timings : 7.30Am To 9 Pm
Location :https://maps.app.goo.gl/oyoSkmkjq45zKgGYA

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

அயலி Webseries எப்படி உள்ளது? பெண்கள் படிக்க தடையா! பார்ப்போம் தரமான சம்பவம்😲🛑🙏

அயலி என்னதான் நல்ல படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தை எப்போது முடித்து அடுத்த சோலியை பார்க்கலாம்  என்று தான் எப்போதும் தோன்றும்.சில படங்கள் தான் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாமே, அடுத்த பாகம் எடுத்தால் நல்லாருக்கும் என தோன்றும். அதே போல் தான் அயலியும் மிகவும் பிடித்திருந்தது.முதல் இது படம் அல்ல சீரிஸ் எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் இல்லை சீரிஸ் பார்க்கும் பழக்கமும் இல்லை.  அயலி மொத்தம் 8 பாகம்,கிட்டததட்ட 4 மணிநேரத்திற்கு மேல். ஆனால் எந்த ஒரு நேரத்திலும் என்னடா எப்படா முடியும், என்ன இந்த காட்சி இப்படி இருக்கு  என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஹீரோ இல்லை,சண்டைக்காட்சி,காதல் ,நம்ம ஊர் திரைப்படங்களில்,நாடங்கங்களில் வருவது போல் தேவையில்லாத ஆணி பாடல்கள் இல்லை. முழு நேரமும் நம்ம சொந்த ஊர்களில் நாம் இருந்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஒவ்வொரு காட்சியும் நடிப்பாக இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது. அயலி - அந்த ஊருக்குள் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து ஓடி விட்டார்களாம் அதனால் அந்த ஊர் எரிந்து நாசமாகியது என சொல்கிறார...