முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

foodie லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

பாட் லக் போலாம் வாங்க?

பாட்லக்கா அப்படினா என்ன? சிலருக்கு தெரிந்தும், பலருக்கு தெரியாமலும் இருக்கலாம், பாட்லக் என்றால் கூட்டாஞ்சோறு என கூறலாம்.  அதாவது ஒரு குழுவாக ஒரு இடத்திலோ அல்லது ஒருவர் வீட்டிலோ ஒன்று கூடுவார்கள், ஒவ்வொருவரும் ஒரு உணவை செய்து கொண்டு வர வேண்டும் ,பலரும் ஒரே இடத்தில் பல வகையான உணவுகளை ருசிக்கவும்,ஒன்றாக மனிதர்களுடன் சிரித்து மகிழவும்,நம் அன்பை பகிரவும் பெறவும் இருக்கும்  ஒரு நிகழ்வு தான் பாட்லக்!!! சில  நாட்களுக்கு முன்பு நான் இருக்கும் குழுவில் பாட்லக்  செய்ய திட்டம் போட்டு இருந்தார்கள்,விருப்பமுள்ளவர்கள் இணையலாம் என கூற நானும் இணைந்தேன் (கடைசி நேரத்தில்) லிஸ்ட் போட்டோம் ,யார் யார் என்னென்ன உணவுகள் கொண்டு வருகிறோம் என அதற்கு ஒரு லிஸ்ட்...! எந்த பாட்லாக்காக இருந்தாலும் அதில் சோறு,பொரியல்,பிரியாணி,சப்பாத்தி,ஸ்னாக்ஸ்,இனிப்பு,காரம்,ஜூஸ் என  அனைத்தும் இடம் பெற்றால் சிறப்பு!! நான் சென்ற பிறகு ஒவ்வொருவராக வந்து இணைந்தார்கள்,அனைவரிடமும் பேசி மகிழ்ந்து கொண்டோம், பிரெட் அலவா செய்யவும்,சப்பாத்தி செய்யவும் உடனிருந்து லைட்டா உதவினோம். பின்பு...

குறைவான விலையில் இவ்வளவு சுவையான உணவுகளா?

சாயுங்காலம் ஆனால் போதும் ஏதாச்சும் திங்கனும்னு வாய் நமநமன்னும்,வயிறு கபகபன்னு இருக்கும்போது திடிரென இந்த கடை,சாரி சாரி கடையல்ல என் சொர்க்கம் நியாபகம் வர "**த்தா தாம்பரத்துல எறக்குடா என்பது போல க்ரோம்பேட்ல எறக்குடானு இறக்கியாச்சு"... இதுல நகைச்சுவை என்னன்னா காலைல இருந்து கண்டன்ட் கிடைக்காம யோசிச்சிட்டு இருந்தேன்,நாங்க போன கடை கிட்ட ஓரு சண்டை அதை ஒட்டு கேட்டு ஒரு தத்துவத்தை அடிச்சு விடலாம்னு கூட தோணுச்சு நமக்கு எதுக்கு வம்பு "இருக்கிற இடம் தெரியாம இருந்தடனும்" அதனால் தான் இருக்கும் இடமே தெரியாமல் நல்லா தின்னிட்டு, ரசிச்சு ருசிச்சாச்சு.... சரிப்பா இந்த கதையெல்லாம் எனக்கெதுக்கு மூடிட்டு சொல்ல வந்ததை சொல்லிட்டு கிளம்பு அதானே!!!! கூல் மக்கா,கொஞ்சம் இன்ட்ரோ முக்கியம் மாப்பி... நான் கல்லூரி படித்த நாட்களில் ஸ்விகியில் வேலை பார்த்த போது பழக்கமான உடன் பிறவா சகோதரர் ஒருவர் இக்கடையை அறிமுகப்படுத்தினார்,சத்தியமா சொல்றேன் அங்க அந்த விலைக்கு சாப்பிட்ட ஐஸ் க்ரீமின் ருசி பல வருடங்களாக நாக்கில் நாட்டியமாடி இன்னும் வேண்டுமென கேட்டுக்கொண்டே இருந்தது... ஆனால் கடையின் பெயரோ,இடமோ நினைவிலி...

இடியாப்பம்,புட்டை கொஞ்சம் வெட்டு..!

க்ரோம்பேட்டைகு ஒரு வேலையாக சகோவுடன் சென்றிருந்தேன் வாய் நமநமமென்றது சரி ஏதாச்சும் கொஞ்சமா உள்ள தள்ளுவோம்னு அங்கு இருக்கும் பேக்கரியை பார்த்தால் பொங்கலுக்கு பொங்கிட்டு போய்ட்டாங்க போல அதாங்க லீவு..🤪 சரின்னு வண்டியை நகர்த்திக்கொண்டே சென்றோம் பார்த்தால் புட்டு கடை ,புட்டு சாப்பிட்டு பல மாதங்கள் ஆனது சரி முயற்சி பண்ணுவோம்னு ஒரு கம்பு புட்டு, கடலை கறி சொன்னோம் ஒரு 5 நிமிஷம் சூடா தர்றோம்னு அமர சொன்னாங்க, கடையில் அவ்வளவு கூட்டம் இருக்காதா பின்ன?... மிகவும் ஆரோக்கியமான உணவுகள் சூடாக,சுவையாக அரிசியில் தயாரிக்கப்பட்ட கம்பு,சிவப்பு அரிசி,கேழ்வரகு,நெய்,தேன் மற்றும் சைட் டிஷ் ருசியான கடலை கறி, தேங்காய் பால்......உடன் நாட்டு சக்கரையும்... சூடாக பரிமாற  கம்பு புட்டு, தேங்காய் துருவல்கள் உடன் கடலை கறி அடடா....!!! பல வருடங்கள் கழித்து ஊரில் அத்தை செய்து கொடுக்கும் சுவையை கொடுத்ததுஅவ்வுணவு, அடுத்து நாட்டு சர்க்கரை, நெய் கலந்து புட்டிற்கு தொட்டு உண்டோம் தேவாமிர்தம் தான்... உடன் இருந்தவர் சொர்க்கத்தில் மூழ்கினார், இவ்வளவு வருடங்களில் இதுபோல் உண்டதில்லை அதுவும் நாட்டு சர்க்கரைக்கும் புட்டிற்கும் காம்ப...