முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

investment லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

இளைஞர்களே இப்போதே சேமிப்பை துவங்குங்கள் இல்லையெனில் வாழ்க்கை முழுக்க பணத்திற்காக போராட வேண்டி வரும்? செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?

உயிர் வாழ மூச்சுக் காத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பணம் . இளைஞர்கள் பணம் சம்பாதிப்பதிலும் செலவு செய்வதிலும்  காட்டுகின்ற ஆர்வத்தை சேமிப்பில் துளியும் காட்டுவதில்லை. பலரிடம் சேமிப்பை பற்றி பேசினாலோ கேட்டாலோ " அட போயா சம்பாதிக்கிறது எதுக்கு செலவு பண்ண தானே, எடுத்துட்டு போகும்போது ஒரு ரூபா கூட கொண்டு போக போறது இல்ல,இருக்கிறத வச்சிக்கிட்டு ஜாலியா வாழ்ந்துடனும்"னு கம்பி கட்டுகிற கதையெல்லாம் விடுவாங்க. இன்றைய மகிழ்வு எவ்வளவு முக்கியமோ அதை விட எதிர்காலத்தின் மகிழ்ச்சி நிறைந்த நிம்மதி அதை விட முக்கியம். சேமிப்பும் முதலீடும் செய்தால் மட்டுமே பிற்காலத்தில் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும், எந்த ஒரு அவசர ஆபத்திற்கு கூட நம் பணம் தான் உதவும்,இப்போது தெரியாது அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது அய்யொ பணம் கொஞ்சம் சேர்த்து வைத்திருந்தால் யூஸ் ஆகி இருக்கும்னு தோணும்". யாருக்கு எப்போ என்ன ஆகும்,திடீர்னு என்ன செலவு வரும்,எப்போ பொருளாதாரம் சரியும், வேலை போகும்னு தெரியாது". அதனால் இப்போதைக்கு "அவசரகால நிதி ( Emergency Fund) குறைந்தபட்சம் 3 மாதம் அதிகபட்சம் 6 ம...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...

சம்பளம் வந்த உடனே பணம் பறந்து விடுகிறதா?

பலரைப் பார்த்துள்ளேன் ஐந்து டிஜிட்டில் சம்பாதிக்கும் நபர்கள் சம்பளம் வந்த 10 முதல் 15 தேதிக்குள் பூஜ்ஜியத்தில் நிற்பார்கள், அவ்வளவு ஏன்?  5 தேதிக்குள் மொத்த பைசாவும் பறந்து மாதம் முழுக்க பத்து பைசாவுக்கு சிங்கி அடிக்க நேரிடும். எப்படா 1 ஆம் தேதி வரும், சம்பளம்  வரும்னு அதை நோக்கியே நம் பயணம் இருக்கும், திரும்ப அதே ஓட்டம் தான் வாழ்க்கை முழுக்க. ஆம்,சம்பளம் வந்த உடனே நம் சுய செலவுக்கோ,சேமிப்பிற்கோ ஒரு துளியேனும் எடுத்த வைக்க வில்லையெனில், வீட்டு வாடகை,EMI,மல்லிகை சாமான்,மருத்துவ செலவு,வீட்டு செலவு,வீட்டிற்கு பணம் கொடுப்பது என வெய்யிலில் கரையும் ஐஸ் கட்டியைப் போல் இருந்த இடமே தெரியாமல் உருகி விடும்.. Pay yourself first  என சொல்வார்கள்,அதாவது சம்பளம் வந்த  பிறகு நம் சேமிப்பிற்கோ,முதலீட்டிற்கோ ஒரு சிறு பகுதி ஒதுக்கி விட வேண்டும்,பின் மீதம் இருக்கும் பணத்தை வைத்து நம் அன்றாட வாழ்வை ஓட்ட முடியும்,ஏனெனில்  ஒதுக்கி வைத்த பணத்தை ஒதுக்கியதே நினைவில் இருக்காது,இது பழகியும் போகும்... எவ்வளவு செலவுகள்,கடன்கள் இருந்தாலும் இதை செய்வது தான் சரியென வல்லுனர்கள்  சொல்கிறார்கள்...

செலவுகளை குறைப்பது எப்படி?

பல மாதங்களாகவே தலைக்கவசத்தில் இருக்கும் கண்ணாடியை மாற்றவேண்டுமென்றிருந்தேன் முழுவதும் சேதமாகி கீறளுடன் இருந்ததால் சாலை தெளிவாக தெரிவதில்லை, மழை பெய்யும் வேளையில் முகத்தில் தண்ணீர் அதிகம் அடிக்கிறது,முக்கியமாக தூசிகள் முகத்தில் படாமலும்,பாதுகாப்புக்காகவும் இந்த கண்ணாடி உபயோகமாகிறது... அதனால் இன்று வண்டியின் சீட் தைக்கவேண்டுமென கடைக்கு சென்றேன் அப்படியே இதையும் மாற்றுவோம் என கேட்டேன் ஒரிஜினல் 200 ரூபாய், டூப்ளிகேட் 160 என்கிறார்கள் பணத்தில் பெரிதாக வித்தியாசம் இல்லை என்பதால் 200 ரூபாய் கொடுத்து மாற்றிவிட்டேன் அதில் வெளியே வந்த ரப்பரையும் கடைக்காரர் சரி செய்து கொடுத்துவிட்டார் பயணமும் தெளிவாக அற்புதமாக இருந்தது.. வீட்டிற்கு வந்து "அப்பா இங்க பாரு ஹெல்மெட் கண்ணாடி மாத்திட்டேன்னு சொன்னேன் !!" எதுக்கு டா புதுசே வாங்கி இருக்கலாம்லனு கேட்டார்? இல்லப்பா இதுல இது மட்டும்தான் பிரச்சனை மத்தபடி ஹெல்மெட் அருமையா இருக்குனு சொன்னேன் சரினு சொன்னார்.. Vega பிராண்ட்டில் இந்த மாடல் 1000ரூ ஆகிறது எதற்கு தேவையில்லாமல் புதிய தலைக்கவசம் இதை சரி செய்துவிட்டேன் அருமையாக இருக்கிறது... இதே  கதை தான் சீட...