முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

pongal special லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

பொங்கல் பயணம்

நேற்று இரவு வரை எந்த திட்டமும் இல்லை,வழக்கம்போல் ஓட்டம் முடித்து,கொஞ்சம் உடற்பயிற்சி செய்துவிட்டு வழக்கம் போல் என் வேலையை தொடரலாம் என்றிருந்தேன், ஆனால் நேற்று இரவு தான் நான் இருக்கும் சைக்ளிங் குழுவை பார்த்தேன் 100k காஞ்சிபுரம் பயணமென போட்டிருந்தார்கள்.. ஒரு பக்கம் முறையான பயிற்சி இல்லை,மறுபக்கம் என் மிதிவண்டி சரியான நிலையில் இல்லை,ஆனால் ஓட்டலாம் என்ற நிலையில் இருந்தது,ஆனால் ஒன்று மட்டுமே உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தது,  என் சொந்த ஊர் காஞ்சிபுரத்திற்கு மிதிவண்டி பயணம் செல்ல வேண்டுமென நெடுநாள் ஆசை,அதற்கு வாய்ப்பாக இன்றைய பயணத்தை பயன்படுத்திக்கொண்டேன். தேவையானவற்றை இரவே தயார் செய்துவிட்டு உறங்கினேன்,காலை 4.30க்கு எழுந்து 5 மணிக்கு தாம்பரம் பாலத்தை அடைந்தேன், அங்கிருந்து குழுவாக கிளம்பினோம், வானிலை அற்புதமாக இருந்தது,எல்லாம் பறக்க நான் மட்டும்  சுலபமான வேகத்தில் பயணித்தேன்,ஒரகடத்தில் ஓரு டீ ஸ்டாப், அங்கு கூடுவாஞ்சேரி சாப்டரில் மூன்று பேரை சந்தித்து ஸ்லாகித்து விட்டு பயணம் தொடர்ந்தோம், சரியாக 25வது கி.மீல் நிக்கி சகோவின் டயர் பஞ்சர்,ஓரமாக நின்று ஓட்டையை கண்டுபிடித...