முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

பொங்கல் பயணம்

நேற்று இரவு வரை எந்த திட்டமும் இல்லை,வழக்கம்போல் ஓட்டம் முடித்து,கொஞ்சம் உடற்பயிற்சி செய்துவிட்டு வழக்கம் போல் என் வேலையை தொடரலாம் என்றிருந்தேன், ஆனால் நேற்று இரவு தான் நான் இருக்கும் சைக்ளிங் குழுவை பார்த்தேன் 100k காஞ்சிபுரம் பயணமென போட்டிருந்தார்கள்..

ஒரு பக்கம் முறையான பயிற்சி இல்லை,மறுபக்கம் என் மிதிவண்டி சரியான நிலையில் இல்லை,ஆனால் ஓட்டலாம் என்ற நிலையில் இருந்தது,ஆனால் ஒன்று மட்டுமே உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தது,  என் சொந்த ஊர் காஞ்சிபுரத்திற்கு மிதிவண்டி பயணம் செல்ல வேண்டுமென நெடுநாள் ஆசை,அதற்கு வாய்ப்பாக இன்றைய பயணத்தை பயன்படுத்திக்கொண்டேன்.

தேவையானவற்றை இரவே தயார் செய்துவிட்டு உறங்கினேன்,காலை 4.30க்கு எழுந்து 5 மணிக்கு தாம்பரம் பாலத்தை அடைந்தேன், அங்கிருந்து குழுவாக கிளம்பினோம், வானிலை அற்புதமாக இருந்தது,எல்லாம் பறக்க நான் மட்டும்  சுலபமான வேகத்தில் பயணித்தேன்,ஒரகடத்தில் ஓரு டீ ஸ்டாப், அங்கு கூடுவாஞ்சேரி சாப்டரில் மூன்று பேரை சந்தித்து ஸ்லாகித்து விட்டு பயணம் தொடர்ந்தோம்,

சரியாக 25வது கி.மீல் நிக்கி சகோவின் டயர் பஞ்சர்,ஓரமாக நின்று ஓட்டையை கண்டுபிடித்து ஒரு வழியாக டயர் தயார், இதில் குறிப்பிட வேண்டிய விடயம், ஒருவர் முகத்திலும் மனதிலும் "அய்யோ லேட் ஆகிடுச்சு,சீக்கிரம் பண்ணுங்க" அது இதுன்னு சாதாரண மனிதர்கள் போல் யாரும் புலம்பவில்லை இதுதான் ஸ்போர்ட்ஸ்,முடிந்தளவு உதவியாய் இருந்தார்கள்...
 
நீங்க போய்கிட்டே இருங்க நாங்க வந்துடறோம்னு சொல்ல,நானும் பாலா சகோவும் கிளம்பினோம் அடுத்த 10 நிமிடத்தில் எங்களை பிடித்துவிட்டார்கள்,பின் எங்களுடன் பயணித்த இரு மருத்துவர்கள் 7.30 மணிக்கு நேரம் ஆகிவிட்டதென யடர்ன் அடித்து கிளம்பினார்கள்..

அடுத்து  8.30ற்கு காஞ்சிபுரம் சென்று கோவில் பார்த்து,அதனுடன் புகைப்படம் எடுத்து கொண்டு, உணவகம் சென்று ஒரு கட்டு கட்டினோம்..அங்கு  மேஜை சுத்தம் செய்யும் பாட்டி, "ராஜா என் வீட்டுக்கு வந்துடுயா,நான் உன்னை நல்லா பாத்துக்குறேன்,நீயும் என்னை பாத்துக்கொன்னு அன்பாக பேச ஒரு நிமிடம் மனம் என்னமோ செய்தது, அவன் ஓகே எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு நான் எப்படி வர முடியும்னு பாலா கேக்க,நீயும் வா ராஜானு பாட்டி சொல்ல' வரோம் பாட்டி உங்களை சந்தித்தில் மகிழ்ச்சினு சொல்லிவிட்டு துவங்கினோம்.

7 பேரில் 2 பேர் முன்பே டாட்டா காட்டிவிட்டார்கள் இப்போது 5ல் 3 பேர் நாங்கள் கிளம்புகிறோம்  என்று கிளம்பினார்கள், பாலா சகோவிற்கு கால் கொஞ்சம் பிடித்துக்கொண்டதால்பொறுமையாக கிளம்பி செல்லும் வழியில் காற்று நிறப்பிக்கொண்டு பயணித்தோம்..

ஒரு பக்கம் எதிர்காற்று,மறுபக்கம் வெய்யில் வைத்து செய்தது,அடுத்த நிறுத்தம் தர்பூசணி கடையில் பழம் சாப்பிட்டு, இலைப்பாறினோம்,

உரிமையாளரின் பெயர் நாராயணசுவாமி ,உடன் பிறந்தவர்கள் 8 பேர் இவர் தான் கடைசி,இப்போது உயிரோடு இருப்பவர்கள் 3 பேர் மட்டுமே,இவர் சகோக்கள் தாம்பரம் சந்தையில் கடை வைத்துள்ளார்கள் நான் தான் இப்படி இருக்கேன்னு என்ன பண்றதுன்னு தன் கஷ்டத்தை சொல்லிக்கொண்டு இருந்தார், நம்ம பசங்க ஒரு நாள் சோறு போட்டேன்னு சொல்லி காட்டிடக் கூடாதுனு தான் தனியாக இருக்கோம், என் பொண்டாட்டிகு சோறு போடணும்ல அதான் இந்த வியாபாரம்னு சொன்னார்,சரின்னு கிளம்பிட்டோம்,80வது கி. மீ மேல் சிரமமாக இருந்தது,இருந்தாலும் அழுத்தம் கொடுக்காமல் ஓட்டினோம்,ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்திக்கொண்டு தாம்பரம் வந்து சில்லுன்னு ஒரு பாதாம் அடிச்சி டாட்டா காட்டி விட்டு கிளம்பிட்டோம்...

வீட்டிற்கு வந்த உடனே குளியல்,உறக்கம் அடடா சொர்க்கம் டா..

ஆக மாட்டுப் பொங்கல் முடிந்தது,வாழ்த்துக்கள் மக்களே..

இன்றைய பயணத்தில் எதை எழுதுவது,எதை விடுவதென்று தெரியவில்லை, மொத்தமாக எழுதி இருக்கிறேன்..

WCCG குழுவிற்கு அன்பும் நன்றியும்,என் மண்ணிற்கு சென்று வந்ததில் பெரும் மகிழ்ச்சி..

பயணிப்போம்..!

கருத்துகள்

  1. Wow !!! Really awesome... Very honest and humble sharing. Keep writing

    பதிலளிநீக்கு
  2. Which is the best Hybrid Bike Budget 15 to 20k., Please Suggest me 🙏👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. You can check in decathlon sport's store, they have good bike in this amount and they will suggest which is suitable for you,
      Congratulations....!

      நீக்கு
  3. Which is the best Hybrid Bike Budget 15 to 20k., Please Suggest me 🙏👍

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

அன்பும் நன்றியும்♥️

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...