சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
#மனஅழுத்தம் !!!!
இது மற்ற வார்த்தைகளைப் போல் கடந்து விடும் ஓர் சாதாரண வார்த்தை அல்ல என்பது இதை வாசிக்கும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்,
இது ஓர் உணர்ச்சி,உணர்வு..!
இந்தப் பதிவைப் முழுமையாக படித்து விட்டு செல்ல உங்களுக்கு ஓர் வேண்டுகோளை விடுக்கிறேன், முழுமையாக படித்து உங்களுக்கு இதயத்திலிருந்து என்ன தோன்றுகிறதோ அதை என்னிடம் அல்லது நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்..
மனஅழுத்தம் இந்த வயதில் தான் வரவேண்டும் இப்போ தான் வரவேண்டும் என எந்த வித விதிகளும் இல்லை, யாராவது ஸ்ட்ரெஸ் என் கூறினால் "உனக்கென்ன வயசு ஆச்சு கல்யாணமா? குழந்தையா? குட்டியா? டேய் போடா இதெல்லாம் தாண்டி தான் நான் வந்துருக்கேன் ஓவறா பண்ணாத? ஸ்டேட்டஸ்ல ட்ரெயின் விடாதனு" நம்முடன் இருப்பவர்களுக்கு நாமே பலமுறை சொல்லிருப்போம், ஆனால் நீ இப்போ எப்படி பீல் பண்ற?உன் மனசுக்குள்ள என்ன ஓடுது?னு மனம் விட்டு கேட்க தான் பலர் இல்லை ஆனால்.....
உங்கள் கருத்தை அவர்களிடம் கூறுவதில் தவறேதும் இல்லை ஆனால் திணிக்க வேண்டாம்,கேளுங்க என்ன சொல்கிறார்களோ அதை கேளுங்க அதுவே மனசு
இலகுவாகினது போல் இருக்கும்..
அவர்களின் நடவடிக்கையை அவர்களுக்கு தெரியாமல் முடிந்தளவு கண்காணிக்க முயற்சி செய்வோம்,அவர்களின் நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிப்போம், மனஅழுத்தம் தான் தற்கொலைக்கு வழிவகுக்குகிறது என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை..
நம்மால் முடிந்த அளவு உடன் இருந்து அவர்களை இயல்பான மனநிலைக்கு கொண்டு வர முயற்சிப்போம், மனநலஆலோசகரிடம் கூட்டிச் செல்வோம், இது பைத்தியக்காரத் தானம் இல்லை, அவர்கள் உங்களை விட உங்கள் மனதை படிப்பவர்கள் தைரியாமாக அவர்களிடம் சென்றால் உங்களுக்கு அழுத்தம் குறைய வாய்ப்பும்,தீர்வும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்..!
அறிவியல் ரீதியில் சொன்னால் உங்கள் மூலையில் சுரக்கும் சில ஹார்மோன்கள் சரியாக சுரக்காமல் போனால் மனஅழுத்தம்,நேர்மறை எண்ணங்கள் ஏற்படும்..!
இந்த ஸ்ட்ரெஸ் ஏற்பட வானமோ,பூமியோ,நாயோ,பூனையோ அல்ல நானும் நீங்களும் போன்ற சகமனிதர்கள் தான் மற்றவர்களுக்கு மனஅழுத்தம் கொடுக்கிறோம்,மனிதனுக்கு மனிதன் தான் உதவனும்னு விஜய் சேதுபதி சொன்னது மாதிரி நிம்மிடம் இருப்பவர்களை மனஅழுத்தம் ஏற்படாமல் முடிந்தளவு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது நம் கடமை!!
சில நாட்கள்,வாரங்கள், மாதங்களாக பிரபலங்கள் இறந்து வரும் செய்தி சோகமானதுதான்,ஆனால் வருடம் முழுக்க லட்சக்கணக்கான தற்கொலைகள் நிகழ்கின்றன இதெல்லாம் நம் கண்களுக்குத் தெரிவதில்லை பிரபலங்கள் இறந்தால் அதைப் பகிர்ந்து மற்றவர் மனதிலும் அதை பதிவைத்து இது போன்ற எண்ணத்தை தூண்டி விடுகிறோம் என்பதே உண்மை..
எவ்ளோ பேருக்கு மனநல ஆலோசனை கூறும், counseling செய்யும் நபருக்கும் இந்த எண்ணங்கள் வருவது இயற்கை, இவர்கள் இதற்கு விதிவிலக்கல்ல..!
மனிதர்களாகிய நாம் தான் இதற்கு காரணம்,இதற்கு வழி?
வழியெல்லாம் பெருசா இல்ல சாக வேண்டும் என நினைத்தால் செத்து விடுவார்கள், ஆனால் நம்மால் முடிந்த அளவுற்கு அவர்களுக்கு உதவியாக இருப்போம்,ஆறுதலாக பேசுவோம், இப்போதும் சரி யார் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியாது அவர்களிடம் பேசுங்கள்..
"இறந்த பின் அழுது ஒரு பயனும் இல்லை"
இது உங்களுக்காக என் மனப்பூர்வமாக சொல்கி்றேன்
"உங்களுக்காக நான் இருக்கிறேன்,எப்போதும் இருப்பேன், நீங்களும் எனக்காக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்"
அசுரன் படத்தில் தனுஷ் வசனம் தான் நினைவுக்கு வருகிறது " போனவங்கள நினைச்சி இருக்கவங்களை விட்டுட கூடாது மச்சான்" போனவங்க போய்ட்டாங்க இருப்பவர்களை பார்த்துக்கொள்வோமே!
வாழ்வோம் ஒன்றாக வாழ்வோம்
Super 👍👍👍👍 Vera level... Naanu. Ine apdiye pannuven
பதிலளிநீக்குமகிழ்ச்சி❤
நீக்கு