முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

thengai paal லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

இடியாப்பம்,புட்டை கொஞ்சம் வெட்டு..!

க்ரோம்பேட்டைகு ஒரு வேலையாக சகோவுடன் சென்றிருந்தேன் வாய் நமநமமென்றது சரி ஏதாச்சும் கொஞ்சமா உள்ள தள்ளுவோம்னு அங்கு இருக்கும் பேக்கரியை பார்த்தால் பொங்கலுக்கு பொங்கிட்டு போய்ட்டாங்க போல அதாங்க லீவு..🤪 சரின்னு வண்டியை நகர்த்திக்கொண்டே சென்றோம் பார்த்தால் புட்டு கடை ,புட்டு சாப்பிட்டு பல மாதங்கள் ஆனது சரி முயற்சி பண்ணுவோம்னு ஒரு கம்பு புட்டு, கடலை கறி சொன்னோம் ஒரு 5 நிமிஷம் சூடா தர்றோம்னு அமர சொன்னாங்க, கடையில் அவ்வளவு கூட்டம் இருக்காதா பின்ன?... மிகவும் ஆரோக்கியமான உணவுகள் சூடாக,சுவையாக அரிசியில் தயாரிக்கப்பட்ட கம்பு,சிவப்பு அரிசி,கேழ்வரகு,நெய்,தேன் மற்றும் சைட் டிஷ் ருசியான கடலை கறி, தேங்காய் பால்......உடன் நாட்டு சக்கரையும்... சூடாக பரிமாற  கம்பு புட்டு, தேங்காய் துருவல்கள் உடன் கடலை கறி அடடா....!!! பல வருடங்கள் கழித்து ஊரில் அத்தை செய்து கொடுக்கும் சுவையை கொடுத்ததுஅவ்வுணவு, அடுத்து நாட்டு சர்க்கரை, நெய் கலந்து புட்டிற்கு தொட்டு உண்டோம் தேவாமிர்தம் தான்... உடன் இருந்தவர் சொர்க்கத்தில் மூழ்கினார், இவ்வளவு வருடங்களில் இதுபோல் உண்டதில்லை அதுவும் நாட்டு சர்க்கரைக்கும் புட்டிற்கும் காம்ப...