முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மிடில் கிளாஸ் சாமானியனின் வாழ்க்கை இவ்வளவு வலிகள் நிறைந்ததா?

இந்த மிடில் கிளாஸ்,ஹை கிளாஸ்,லோ கிளாஸ் எல்லாமே இச்சமுதாயம் உருவாக்கியது தான் ,அதுவும் பணத்தின் அடிப்படையில் மட்டும் இவை கணக்கிடப்பட்டு இவர்கள் லோ கிளாஸ்,இவர்கள் ஹை க்ளாஸ் என பெரும் பட்டத்தை கொடுக்கிறது இச்சமூகம்.சமூகம் கொடுக்கிறதோ இல்லையோ நாமே நம்மை இப்படி அழைத்துக்கொள்வோம். என்ன வாழ்க்கை டா இது!!!! ஒன்னு பணக்காரராக இருந்திடனும்,இல்ல லோ கிளாஸ்ஸா இருந்திடனும் ,இப்படி மிடில் கிளாசில் பிறந்து ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கிறோமே,ச்சே என்ன வாழ்க்கை டா இது....! ஆசைப்பட்ட பொருளையோ,உணவையோ நினைத்தவுடன் வாங்க முடியாது, வாடகை வீடு,வாங்கிய பொருளுக்கு மாதாமாதம் EMI, குடும்ப கடன்கள்,நெருக்கமானவர்களுக்கு ஒரு பொருளை கூட வாங்கிக்கொடுக்க முடியாத சூழல்,சம்பாதித்த பணம் எல்லாம் கடனுக்கும்,வீட்டிற்கும் போக ஆசைப்பட்ட இடத்திற்கு போகவோ,வேண்டியதை வாங்கவோ பணம் இல்லாமல் அம்மாதத்தை ஓட்டுவது,சரியான உடை கூட அணிய முடியாத அளவிற்கு வறுமை,நம்ம நிலைமை இப்படி ஆகிப்போச்சே,வாழ்க்கைல எப்படியாச்சும் மேல வந்துடனும்,நம்ம தூற்றியவர்கள் முன்பு வாழ்ந்து காட்டணும் ,வேற லெவல் வாழனும்னு வெளியில் கம்பீரமாக சற்றுக் கொண்டும் ஸ்டே...

குறைவான விலையில் இவ்வளவு சுவையான உணவுகளா?

சாயுங்காலம் ஆனால் போதும் ஏதாச்சும் திங்கனும்னு வாய் நமநமன்னும்,வயிறு கபகபன்னு இருக்கும்போது திடிரென இந்த கடை,சாரி சாரி கடையல்ல என் சொர்க்கம் நியாபகம் வர "**த்தா தாம்பரத்துல எறக்குடா என்பது போல க்ரோம்பேட்ல எறக்குடானு இறக்கியாச்சு"... இதுல நகைச்சுவை என்னன்னா காலைல இருந்து கண்டன்ட் கிடைக்காம யோசிச்சிட்டு இருந்தேன்,நாங்க போன கடை கிட்ட ஓரு சண்டை அதை ஒட்டு கேட்டு ஒரு தத்துவத்தை அடிச்சு விடலாம்னு கூட தோணுச்சு நமக்கு எதுக்கு வம்பு "இருக்கிற இடம் தெரியாம இருந்தடனும்" அதனால் தான் இருக்கும் இடமே தெரியாமல் நல்லா தின்னிட்டு, ரசிச்சு ருசிச்சாச்சு.... சரிப்பா இந்த கதையெல்லாம் எனக்கெதுக்கு மூடிட்டு சொல்ல வந்ததை சொல்லிட்டு கிளம்பு அதானே!!!! கூல் மக்கா,கொஞ்சம் இன்ட்ரோ முக்கியம் மாப்பி... நான் கல்லூரி படித்த நாட்களில் ஸ்விகியில் வேலை பார்த்த போது பழக்கமான உடன் பிறவா சகோதரர் ஒருவர் இக்கடையை அறிமுகப்படுத்தினார்,சத்தியமா சொல்றேன் அங்க அந்த விலைக்கு சாப்பிட்ட ஐஸ் க்ரீமின் ருசி பல வருடங்களாக நாக்கில் நாட்டியமாடி இன்னும் வேண்டுமென கேட்டுக்கொண்டே இருந்தது... ஆனால் கடையின் பெயரோ,இடமோ நினைவிலி...

வாகனங்களில் இருக்கும் பாகங்கள் இதற்கு தானா?

இரு சக்கர/கார்/மிதிவண்டி வாகனம், நடை/ஓட்டம் என நாம் அன்றாடம் செய்யும்\ உபயோகிக்கும் நமக்கு தான்  இப்பதிவு...! ● கண்ணாடி (Mirror) வண்டியில் இருபக்கமும் கண்ணாடி ( mirror) வைத்துக்கொள்ளுங்கள், பலர் அதை ஒரு இடையூறாக கருதி எடுத்து விடுகின்றனர், குறிப்பாக இளைஞர்கள் சந்து பொந்துகளில் புகுந்து போக  அதை கழட்டி வீசி விடுகின்றனர், நானே சிறுவயதில் முகம் பார்க்க தான் என நினைத்துள்ளேன் பிறகு தான் புரிந்தது,.. எந்த பக்கம் திரும்பினாலும் அதைப் பார்த்து வேறு  வாகனம் ஏதாவது வருகிறதா என பார்த்து வளைய வேண்டும் இல்லையெனில் பெரும் விபத்து ஏற்பட நேரிடும்.. ஆக கண்ணாடி வச்சிக்கோங்க பா.! ● குறிப்பீடு ( indicator)   ஒவ்வொரு முறை திரும்பும்போதும்/ வளையும்போதும் இந்த இண்டிகேட்டரை எந்தப் பக்கம் திரும்பி வேண்டுமோ அந்த பக்கம் ஆன் செய்து காட்டினாள் பின்னால் வருபவர்கள் உங்கள் வாகத்தில் ஒலிக்கும் ஒளியை/ஒலியை  பார்த்து, கேட்டு கவனமாக நகர்வார்கள்.. இதை  உங்கள் தெருவில் இருந்து முயற்சியுங்கள் அப்போது தான் அது ஒரு பழக்கமாக மாறும்.. மிதிவண்டி ஓட்டுபவர்கள் கையில் சைகை காட்டுங்கள் இல்லையெனில் ...

மனஅழுத்தமாக இருக்கிறதா? தற்கொலை எண்ணம் வருகிறதா?

#மனஅழுத்தம் !!!! இது மற்ற வார்த்தைகளைப் போல் கடந்து விடும் ஓர் சாதாரண  வார்த்தை அல்ல என்பது இதை வாசிக்கும் உங்களுக்குத் தெரிந்திருக்கும், இது ஓர் உணர்ச்சி,உணர்வு..! இந்தப் பதிவைப் முழுமையாக படித்து விட்டு செல்ல உங்களுக்கு ஓர் வேண்டுகோளை விடுக்கிறேன், முழுமையாக படித்து உங்களுக்கு இதயத்திலிருந்து என்ன தோன்றுகிறதோ அதை என்னிடம் அல்லது நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.. மனஅழுத்தம் இந்த வயதில் தான் வரவேண்டும் இப்போ தான் வரவேண்டும் என எந்த வித விதிகளும் இல்லை, யாராவது ஸ்ட்ரெஸ் என் கூறினால் "உனக்கென்ன வயசு ஆச்சு கல்யாணமா? குழந்தையா? குட்டியா? டேய் போடா இதெல்லாம் தாண்டி தான் நான் வந்துருக்கேன் ஓவறா பண்ணாத? ஸ்டேட்டஸ்ல ட்ரெயின் விடாதனு" நம்முடன் இருப்பவர்களுக்கு நாமே பலமுறை சொல்லிருப்போம், ஆனால்  நீ இப்போ எப்படி பீல் பண்ற?உன் மனசுக்குள்ள என்ன ஓடுது?னு மனம் விட்டு கேட்க   தான் பலர் இல்லை ஆனால்..... உங்கள் கருத்தை அவர்களிடம் கூறுவதில் தவறேதும் இல்லை ஆனால் திணிக்க வேண்டாம்,கேளுங்க என்ன சொல்கிறார்களோ அதை கேளுங்க அதுவே மனசு  இலகுவாகினது போல் இருக்கும்.. அவர...

பிள்ளைகள் செய்யும் குற்றத்திற்கு பெற்றோரின் வளர்ப்பா காரணம்?

பிள்ளைகள் ஊதாரித்தனமாக சுற்றிக்கொண்டும்,மது,மாது,பெண்களை பாலியல் தொந்தரவு செய்து கொண்டும், இருக்கும் தீய செயல்களை  எல்லாம் செய்யும் பிள்ளைகளை சமுதாயம் சொல்வது.. பெற்றவர்களின் வளர்ப்பு சரியில்லை! இதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை, ஒரு வயது வரை தான் குழந்தைகளுக்கு நாம் சொல்வது எல்லாம் ஓரளவுக்கு மண்டைக்குள் ஏறும் நீங்க என்ன தான் அருமையான போதனைகளை சொல்லி அற்புதமான வழியில் வளர்த்தாலும் அவர்கள் தடம் மாறி போனால் நாம்  பொறுப்பில்லை.. ஆம், நீங்கள் எப்படி வளர்த்தீர்கள் என்பதில் இல்லை ஒழுக்கம்,அவர்கள் எப்படி வளந்தார்கள் என்பதில் இருக்கிறது, அவர்கள் படிக்கும்,பார்க்கும் விடயங்கள் ,அவர்கள் சிந்தனைகள்,முக்கியமாக அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்கள்,நண்பர்கள் தான் இதற்கு காரணி.என்னதான் நாம் கட்டுக்கோப்பாக இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் என்ன செய்கிறார்களோ எப்படி இருக்கிறார்களோ நம்மை அறியாமலே அப்படி ஆகிவிடுவோம்.. நாமே நமக்கு ஓர் எல்லையை நிர்ணயித்துக் கொள்ளவில்லையெனில் தடம் மாறி போக வாய்ப்புகள் அதிகம், அவர்களை அவ்வளவு எளிதில் திருத்தி விட முடியாது பட்டு திருந்தினால் மட்டுமே ப...

பிராண்டட் பொருட்கள் உபயோகித்தால் தான் மதிப்பா?

சில நாட்களுக்கு முன்பு வார இறுதியென  நண்பன் வீட்டிற்கு புறப்படலாம் என கிளம்பினால் மழை,சரி கொஞ்சம் பொறுமையா ஆகட்டும் என காத்துக்கொண்டிருந்தேன்.. அந்த இடைவேளையில் என் ரெயின் கோட் தேடினேன் எங்கே வைத்தேன் என தெரியவில்லை பிறகு என் கப்போர்டில்  பார்த்தால் swiggy ரெயின் கோட் புதியதாக இருந்தது நான் கல்லூரி படிக்கும் காலத்தில் பகுதி நேரமாக Delivery Executive ஆக வேலை பார்த்தேன் அப்போது சில முறை மட்டுமே பயன்படுத்தியுள்ளேன்.. சரி இதை அணிந்து கொண்டு செல்வோம் என எடுத்தேன் ஆனால் உள்ளுக்குள்  ஒரு வித கூச்சம் இருந்தது, பின் "நான் தான் யார் என்ன பார்க்கிறார்கள் என்பதை    பற்றி கவலை கொள்ள மாட்டேன்"பிறகு இதில் என்ன  இந்த கூச்சமும்,வெட்கமும்.. மிஞ்சிப் போனால் சிலர் சிரிப்பார்கள்,சிலர் கேலி செய்வார்கள், சிரிப்பவர்களோ,கேலி செய்பவர்களோ  சொந்த காசு கொடுத்து நமக்கு எதையும் வாங்கிக்கொடுக்க போவதில்லை, அப்படி கொடுக்கவேண்டிய அவசியமுமில்லை... சரின்னு ரெயின் கோட் அணிந்துகொண்டு கிளம்பினேன் போகும் வழியில் ஒரு swiggy நண்பர் என்ன பிரதர் எத்தனை ஆர்டர்னு கேட்க? எதையோ சொல்லி சமாளிச்சு நேரா ...

செலவுகளை குறைப்பது எப்படி?

பல மாதங்களாகவே தலைக்கவசத்தில் இருக்கும் கண்ணாடியை மாற்றவேண்டுமென்றிருந்தேன் முழுவதும் சேதமாகி கீறளுடன் இருந்ததால் சாலை தெளிவாக தெரிவதில்லை, மழை பெய்யும் வேளையில் முகத்தில் தண்ணீர் அதிகம் அடிக்கிறது,முக்கியமாக தூசிகள் முகத்தில் படாமலும்,பாதுகாப்புக்காகவும் இந்த கண்ணாடி உபயோகமாகிறது... அதனால் இன்று வண்டியின் சீட் தைக்கவேண்டுமென கடைக்கு சென்றேன் அப்படியே இதையும் மாற்றுவோம் என கேட்டேன் ஒரிஜினல் 200 ரூபாய், டூப்ளிகேட் 160 என்கிறார்கள் பணத்தில் பெரிதாக வித்தியாசம் இல்லை என்பதால் 200 ரூபாய் கொடுத்து மாற்றிவிட்டேன் அதில் வெளியே வந்த ரப்பரையும் கடைக்காரர் சரி செய்து கொடுத்துவிட்டார் பயணமும் தெளிவாக அற்புதமாக இருந்தது.. வீட்டிற்கு வந்து "அப்பா இங்க பாரு ஹெல்மெட் கண்ணாடி மாத்திட்டேன்னு சொன்னேன் !!" எதுக்கு டா புதுசே வாங்கி இருக்கலாம்லனு கேட்டார்? இல்லப்பா இதுல இது மட்டும்தான் பிரச்சனை மத்தபடி ஹெல்மெட் அருமையா இருக்குனு சொன்னேன் சரினு சொன்னார்.. Vega பிராண்ட்டில் இந்த மாடல் 1000ரூ ஆகிறது எதற்கு தேவையில்லாமல் புதிய தலைக்கவசம் இதை சரி செய்துவிட்டேன் அருமையாக இருக்கிறது... இதே  கதை தான் சீட...

குழந்தைகளுக்கு கேட்டதையெல்லாம் வாங்கி கொடுக்குறீர்களா?

நான் எதையுமே அனுபவிக்கவில்லை,நான் ஆசைப்பட்டது எதுவுமே எனக்கு கிடைத்தது இல்லை,அதே மாதிரி என் குழந்தைகளுக்கும் ஆகிவிடக் கூடாதுன்னு தான் இப்படி ஓடிகிட்டே இருக்கேன்,செருப்பு மாதிரி  தேயுறேன்னு இங்கு பலர் தன் பிள்ளைகளின் அன்றாடத் தேவைகளையும் நிறைவு செய்துவிட்டு ,ஆடம்பரத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேதனைப்பட்டு,துன்பப்பட்டு ,துயரப்பட்டு ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.. எல்லாம் சரி தான் பிள்ளைங்க நல்லா இருக்கணும் ,அவர்களுக்கு தேவையானது எல்லாம் கிடைக்கணும்,அவங்க நினைச்சதை படிக்க வைக்கணும் இன்னும் இதுபோல் பல... ஆனால் பணத்தை பற்றிய ஒரு புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது அல்லவா? முதலில் கேட்பதையெல்லாம் உடனே வாங்கி கொடுப்பதை நிறுத்துங்கள்,இப்படி ஒவ்வொரு பொருளாக வாங்கி கொடுத்துக்கொண்டே இருக்கும்போது அவர்கள் மனதில் தோன்றுவது " நமக்கு எல்லாம் கிடைக்குது அடுத்து இதை கேட்போம் அதை விட இது செமையா இருக்குன்னு மற்றொன்றை கேட்பார்கள்" அதுவும் தேவையற்ற பொருளாக தான் இருக்கும் ,( முக்கால் வாசி) ஆனாலும் அதை வாங்கி கொடுப்பீர்கள்,இல்லையெனில் அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள்,சோர்ந்து வ...

பணம் பறிக்க துடிக்கும் திருநங்கைகளிடம் உஷார்...!

 மூன்றாம் இனமான  திருநங்கைகள் பற்றி தான் இப்பதிவு...❤ ஒரு மாதத்திற்கு முன்பு கடற்கரைக்கு நண்பர்களோடு சென்றிருந்தேன் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டே கடலை ரசித்துக்கொண்டிருந்தோம்.. 1 நிமிடம் தொடர்ச்சியாக பேசமுடியவில்லை ஒரு பக்கம் ஜோசியம்,இன்னொரு பக்கம் வேர்க்கடலை, சுண்டல் மறுபக்கம் டீ, காபி இதையெல்லாம் ஒன்றும் சொல்ல முடியாது அது அவர்களின் பிழைப்பு.. இரு அரவாணிகள் வந்தனர் பைசா கேட்டனர் இல்லை என சொன்னோம் குடு ராஜானு சொல்லவே இருப்பதை கொடுத்தோம் கிளம்பி விட்டார்கள் சரி என கிளம்பினோம்.. அதற்குள் இன்னொருவர்  10 ரூபா குடுனு கேட்டாங்க...!! இல்லக்கா இப்போதான் கொடுத்தோம் என்கிட்ட பெட்ரோல்க்கு தான் காசு இருக்கு...! பரவால்ல குடு நான் சில்லறை தரேன்னு சொல்ல...! இல்லக்கா எனக்கு வேணும் நான் வேற எதுவும் பைசா கொண்டு வரலைனு சொன்னேன்...! அதற்குள் என் கைய புடிச்சி குடுடானு கேட்க...! என்னுடன் வந்தவர் எதுக்கு கையெல்லாம் புடிக்கிறீங்க கை எடுங்கனு சொல்ல....! அட ஏம்மா உன்ன நானும் பொண்ணு தானே கை தானே பிடிச்சேன்னு சொல்லி எவ்வளவு கேவலமான வார்த்தைகளை பயன்படுத்த முடியுமோ அவ்வளவும் பேசினார்கள்...!!! பார்த்த...

காத்திருக்க வேண்டாம்...!

பலர் சொல்லி கேட்டிருக்கிறேன்,ஏன்? நானே கூட சொல்லி இருக்கிறேன். உடற்பயிற்சி செய்ய, நடைப்பயிற்சி செல்ல உடன் யாராவது வந்தால் நல்லாருக்கும்லனு,அப்படியும் சிலர் கிடைப்பார்கள் நாமும் தினமும் அவரை எதிர்பார்த்து,அவரும் நம்மை எதிர்பார்த்து செல்வோம்,திடிரென யாராவது ஒருவர்  சொதப்பினால் போதும் இவரும் அதான் அவரே வரலையே இன்னைக்கு போக வேண்டாம் நாளைக்கு போவோம்னு செமையாக தூக்கத்தை தொடர்வார். உடன் ஒருவர் வந்தால் நன்றாக தான் இருக்கும், இன்னும் போட்டிபோட்டுக் கொண்டு செய்யலாம்,ஆனால் யார் வந்தாலும் வரா விட்டாலும் உறுதியாக செல்ல வேண்டும என்ற சுயஒழுக்கம் அவசியம் தேவை. இதனால் மறுபக்கத்தில் இருப்பவர் கோவித்துக் கொண்டாலும் பிரச்சனை இல்லை ஏனென்றால் இதைக் கூட புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு கூட அவருக்கு பக்குவம் இல்லை என்பதை அறிய இது ஓர் வாய்ப்பாக அமைகிறது அல்லவா..! ஒரு நேரம் வரை காத்திருக்கலாம் இல்லையெனில் கிளம்பிவிடலாம், இன்றும் இது போல் தான் ஆனது சில நிமிடங்கள் காத்திருந்தேன் கிளம்பிட்டேன். இன்று மாலை தாம்பரம் டூ போரூர் நெடுஞ்சாலையில் மிதிவண்டி பயணம் எதிர்காற்று கொஞ்சம் அதிகம் தான் ஆனாலும் அருமையாக இருந்தது,...

2020

பலருக்கு பாரமாக சிலருக்கு பிரமாதமாக கடந்துவிட்டது,இங்கு புலம்புபவர்களில் பலரும் இவ்வருடத்தை தேவையில்லாத ஆணி என்று தானே அழுதுகொண்டிருந்தனர்... என்ன செய்ய முடியும்?  எண்ணில் மட்டும் கூடுதலாக ஒன்று சேருமே தவிர வேறேதும் மாற்றம் அடைந்துவிடுவதில்லை நாம் மாறும் வரை ,நாம் மாற்றும் வரை... ஒரு பக்கம் உலகையே அச்சுறுத்திய கொரோனா லட்சக்கணக்கான மக்களை கொன்றது,பலரை பாதித்தது,மக்கள் ஒரு நாள் உணவு உண்ணவே சிரமம்,வீட்டு வாடகை,மருத்துவரை/மருத்துவமனை போக முடியாமல்,வைத்தியம் பார்க்க முடியாமல் உயிர்கள் பலி, பலருக்கு வேலைகள் பறிபோயின, தொழில்கள் மடிந்தது, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு,க்ளைமாக்ஸில் வெள்ளம் வந்து அடித்தட்டு மக்களை,ஏரியில் வீடுகள் இருக்கும் பகுதிகளை சேதப்படுத்தியது,பலரின் தற்கொலை,மரணம் இன்னும் ஏராளம்...! மறுபக்கம் பலரின் திறமைகள் வெளிவந்தது, வலைஒலி சேனல்கள் உருவாகின,வேறு வழியில் பணத்தை உருவாக்க பல தொழில்கள் உருவாயின, வேலை கிடைத்துள்ளது,குறைந்த செலவில் லாக்டவுன் திருமணங்கள்,ஊரை விட்டு நகரத்தில் வேலை செய்யும் பலருக்கு ஊரில் பெற்றோர்களுடன் இயற்கையுடன் வாழ, வேலை பார்க்க வாய்ப்பு கி...

இடியாப்பம்,புட்டை கொஞ்சம் வெட்டு..!

க்ரோம்பேட்டைகு ஒரு வேலையாக சகோவுடன் சென்றிருந்தேன் வாய் நமநமமென்றது சரி ஏதாச்சும் கொஞ்சமா உள்ள தள்ளுவோம்னு அங்கு இருக்கும் பேக்கரியை பார்த்தால் பொங்கலுக்கு பொங்கிட்டு போய்ட்டாங்க போல அதாங்க லீவு..🤪 சரின்னு வண்டியை நகர்த்திக்கொண்டே சென்றோம் பார்த்தால் புட்டு கடை ,புட்டு சாப்பிட்டு பல மாதங்கள் ஆனது சரி முயற்சி பண்ணுவோம்னு ஒரு கம்பு புட்டு, கடலை கறி சொன்னோம் ஒரு 5 நிமிஷம் சூடா தர்றோம்னு அமர சொன்னாங்க, கடையில் அவ்வளவு கூட்டம் இருக்காதா பின்ன?... மிகவும் ஆரோக்கியமான உணவுகள் சூடாக,சுவையாக அரிசியில் தயாரிக்கப்பட்ட கம்பு,சிவப்பு அரிசி,கேழ்வரகு,நெய்,தேன் மற்றும் சைட் டிஷ் ருசியான கடலை கறி, தேங்காய் பால்......உடன் நாட்டு சக்கரையும்... சூடாக பரிமாற  கம்பு புட்டு, தேங்காய் துருவல்கள் உடன் கடலை கறி அடடா....!!! பல வருடங்கள் கழித்து ஊரில் அத்தை செய்து கொடுக்கும் சுவையை கொடுத்ததுஅவ்வுணவு, அடுத்து நாட்டு சர்க்கரை, நெய் கலந்து புட்டிற்கு தொட்டு உண்டோம் தேவாமிர்தம் தான்... உடன் இருந்தவர் சொர்க்கத்தில் மூழ்கினார், இவ்வளவு வருடங்களில் இதுபோல் உண்டதில்லை அதுவும் நாட்டு சர்க்கரைக்கும் புட்டிற்கும் காம்ப...

பொங்கல் பயணம்

நேற்று இரவு வரை எந்த திட்டமும் இல்லை,வழக்கம்போல் ஓட்டம் முடித்து,கொஞ்சம் உடற்பயிற்சி செய்துவிட்டு வழக்கம் போல் என் வேலையை தொடரலாம் என்றிருந்தேன், ஆனால் நேற்று இரவு தான் நான் இருக்கும் சைக்ளிங் குழுவை பார்த்தேன் 100k காஞ்சிபுரம் பயணமென போட்டிருந்தார்கள்.. ஒரு பக்கம் முறையான பயிற்சி இல்லை,மறுபக்கம் என் மிதிவண்டி சரியான நிலையில் இல்லை,ஆனால் ஓட்டலாம் என்ற நிலையில் இருந்தது,ஆனால் ஒன்று மட்டுமே உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தது,  என் சொந்த ஊர் காஞ்சிபுரத்திற்கு மிதிவண்டி பயணம் செல்ல வேண்டுமென நெடுநாள் ஆசை,அதற்கு வாய்ப்பாக இன்றைய பயணத்தை பயன்படுத்திக்கொண்டேன். தேவையானவற்றை இரவே தயார் செய்துவிட்டு உறங்கினேன்,காலை 4.30க்கு எழுந்து 5 மணிக்கு தாம்பரம் பாலத்தை அடைந்தேன், அங்கிருந்து குழுவாக கிளம்பினோம், வானிலை அற்புதமாக இருந்தது,எல்லாம் பறக்க நான் மட்டும்  சுலபமான வேகத்தில் பயணித்தேன்,ஒரகடத்தில் ஓரு டீ ஸ்டாப், அங்கு கூடுவாஞ்சேரி சாப்டரில் மூன்று பேரை சந்தித்து ஸ்லாகித்து விட்டு பயணம் தொடர்ந்தோம், சரியாக 25வது கி.மீல் நிக்கி சகோவின் டயர் பஞ்சர்,ஓரமாக நின்று ஓட்டையை கண்டுபிடித...

யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம் | Don't Wait For Someone,

பலர் சொல்லி கேட்டிருக்கிறேன்,ஏன்? நானே கூட சொல்லி இருக்கிறேன். உடற்பயிற்சி செய்ய, நடைப்பயிற்சி செல்ல உடன் யாராவது வந்தால் நல்லாருக்கும்லனு,அப்படியும் சிலர் கிடைப்பார்கள் நாமும் தினமும் அவரை எதிர்பார்த்து,அவரும் நம்மை எதிர்பார்த்து செல்வோம்,திடிரென யாராவது ஒருவர்  சொதப்பினால் போதும் இவரும் அதான் அவரே வரலையே இன்னைக்கு போக வேண்டாம் நாளைக்கு போவோம்னு செமையாக தூக்கத்தை தொடர்வோம். உடன் ஒருவர் வந்தால் நன்றாக தான் இருக்கும், இன்னும் போட்டிபோட்டுக் கொண்டு செய்யலாம்,ஆனால் யார் வந்தாலும் வரா விட்டாலும் உறுதியாக செல்ல வேண்டும என்ற சுயஒழுக்கம் அவசியம் தேவை. இதனால் மறுபக்கத்தில் இருப்பவர் கோபித்துக் கொண்டாலும் பிரச்சனை இல்லை ஏனென்றால் இதைக் கூட புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு கூட அவருக்கு பக்குவம் இல்லை என்பதை அறிய இது ஓர் வாய்ப்பாக அமைகிறது அல்லவா..! ஒரு நேரம் வரை காத்திருக்கலாம் இல்லையெனில் கிளம்பிவிடலாம், இன்றும் இது போல் தான் ஆனது சில நிமிடங்கள் காத்திருந்தேன் கிளம்பிவிட்டேன். இன்று மாலை தாம்பரம் டூ போரூர் நெடுஞ்சாலையில் மிதிவண்டி பயணம் எதிர்காற்று கொஞ்சம் அதிகம் தான் ஆனாலும் அருமையாக இருந்தத...

ஓரினச்சேர்க்கை❤

பள்ளிப் பருவமா, கல்லூரிப் பருவமா என தெரியவில்லை ஆனால் பல வருடங்களுக்கு முன்பு வீட்டில் ஏதோ ஒரு நிகழ்வு உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி இருந்தனர் எங்க மாமாவிற்க்கு படம்  பார்ப்பது என்றால் அவ்வளவு பிரியம் அதனால் அவர் pendriveல் இருந்து மடிக்கணினிக்கு ஏற்றிக்கொண்டிருந்தார்.. திடீரென ஏதோ பேச்சு சென்றுகொண்டிருக்க அந்த படத்துல வர சீன் பற்றி சொன்னார் எனக்கு புரியவில்லை சரி homosexualனா என்னனு தெரியுமானு கேட்டார் இல்லைனு சொன்னேன் "அட பாவி இது கூட தெரியாதா இவ்வளவு பெருசா வளந்திருக்கேன்னு சொன்னாரு" பிறகு அதைப்பற்றி  எடுத்துரைத்தார் அதாங்க ஓரினச்சேர்க்கை பற்றி... சில விஷயங்களை சிலர் அவ்வப்போது கற்றுக்கொடுப்பதே நல்லது,மறைத்து மறைத்து பேசினால் அதைப்பற்றி இன்னும் அறிய தானே தோன்றும் .. பின் அதெல்லாம் மறந்து போக,கடந்த வருடம் ஒரு குழுவில் ஒருவர் மனம் வருத்த நிலையில் இருக்கிறது விருப்பமிருந்தால் சொல்லுங்க நேரில் சந்திக்கலாம்னு போட்டிருந்தாங்க நானும் மற்றொருவரும் பார்க்கலாம் என கூறினோம்.. நான் இருந்த குழு மற்றவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் கொடுக்கும் குழு.. அன்று நான் வேலையில் இருந்த...

விபச்சாரம்

விபச்சாரம் என்றால் என்ன? இந்த வார்த்தையைப் பார்த்தப் பிறகு உடனே ஓட வேண்டாம் கொஞ்சம் பொறுமையா படிக்கலாம் வாங்க!!! இப்பதிவின் நோக்கம் விபச்சாரத்திற்கு ஆதரவு அளிப்பது இல்லை , அனைவருக்கும் இவற்றை பற்றி தெரிய வேண்டுமென பதிவிட்டேன் முக்கியாக குழந்தைகளுக்கு கற்பிக்க.... உங்களை மாதிரி தான் எனக்கும் தெரியாது,கண்ணா மூச்சி விளையாடுன வயதில்... எனக்கு எப்போ இது நிகழ்ததுன்னு சரியா நினைவில்லை,ஆனா என்ன நிகழ் ததுன்னு நல்லாவே நினைவிருக்கு, சிறு வயதில்  பள்ளி விடுமுறைன்னா தாத்தா,பாட்டி வீட்டுக்கு போவோம், ஒரு நாள் இரவு தொலைக்காட்சியில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருக்க அதில் விபச்சாரம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி ஏதோ வசனம் வந்தது எனக்கு ஒன்னுமே புரியல.. "தாத்தா விபச்சாரம்னா  என்னனு கேட்டேன்!!" "அதுவா,ஒன்னுமில்லனு சொல்ல" "அட சொல்லு தாத்தா" "நீ சின்ன பையன் உன்கிட்ட சொல்ல கூடாதுனு" சொல்லிட்டு தூங்கிட்டாரு.. "எனக்கோ என்னனு தெரியல,ஆனா அதுல ஏதோ ஒன்னு இருக்குனு மட்டும் தோணுச்சு,மத்தவங்க கிட்ட கேட்கவும் ஒரு விதமான பயம்,பதட்டம்" சிலரிடம் கேட்டேன் யாருமே பதில் கொடுத்தப் ...

பொங்க வேண்டாம்..!!

நம் அனைவர் வீட்டிலும் பொங்க வேண்டியது நாம்  அல்ல, பொங்கல் மட்டுமே🙂.. சிலரெல்லாம் தன்னைத்தானே பீத்திக்கொள்வதுண்டு நான் பயங்கரமான  கோபக்காரன்,எனக்கும் கோபம் வந்துச்சு அவ்ளோதான் என்னை யாராலயும் கட்டுப்படுத்த முடியாது" இப்படியெல்லாம் வெட்டி வீராப்பு காட்ட வேண்டியது,அவர்கள் சும்மா இருந்தாலும் உடன் இருக்கும் சொம்புகள் அவங்க ரொம்ப அமைதி ஆனா கோபம் வந்துச்சு செத்தோம்னு பயந்து சாவார்கள்... இதில் கொஞ்சம் உண்மையும் உண்டு கோபமே படாதவர்கள் ஒரு காரணத்திற்காக கோபப் பட்டால் அவர்களை கேட்டு தான் அவ்வுணர்ச்சி  வெளிப்படும் மற்றவர்களுக்கு அப்போது தான் உண்மையான பயம் வரும் இவங்களுக்கு  அவ்வளவு சீக்கிரம் கோபம் வராது அப்படின்னா ஏதோ காரணம் இருக்குனு நினைச்சுக்குவாங்க... என் கல்லூரி பேராசிரியர் கூறியது இன்னும் நினைவில் உண்டு "கோபம் எனும் உணர்ச்சி உன்னைக்கேட்டு தான் வெளிப்பட வேண்டும், அப்படி இல்லையென்றால் அந்த உணர்ச்சி நம்மை கட்டுப்படுத்தும்... எளிமையாக கூற வேண்டுமென்றால் எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென கோபத்தை கக்குபவர்கள் ஒரு நகைச்சுவையான மனிதர் இதைக்கூட கையாளத் தெரியாத பக்குவம் இல்ல...