சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
#மனஅழுத்தம் !!!! இது மற்ற வார்த்தைகளைப் போல் கடந்து விடும் ஓர் சாதாரண வார்த்தை அல்ல என்பது இதை வாசிக்கும் உங்களுக்குத் தெரிந்திருக்கும், இது ஓர் உணர்ச்சி,உணர்வு..! இந்தப் பதிவைப் முழுமையாக படித்து விட்டு செல்ல உங்களுக்கு ஓர் வேண்டுகோளை விடுக்கிறேன், முழுமையாக படித்து உங்களுக்கு இதயத்திலிருந்து என்ன தோன்றுகிறதோ அதை என்னிடம் அல்லது நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.. மனஅழுத்தம் இந்த வயதில் தான் வரவேண்டும் இப்போ தான் வரவேண்டும் என எந்த வித விதிகளும் இல்லை, யாராவது ஸ்ட்ரெஸ் என் கூறினால் "உனக்கென்ன வயசு ஆச்சு கல்யாணமா? குழந்தையா? குட்டியா? டேய் போடா இதெல்லாம் தாண்டி தான் நான் வந்துருக்கேன் ஓவறா பண்ணாத? ஸ்டேட்டஸ்ல ட்ரெயின் விடாதனு" நம்முடன் இருப்பவர்களுக்கு நாமே பலமுறை சொல்லிருப்போம், ஆனால் நீ இப்போ எப்படி பீல் பண்ற?உன் மனசுக்குள்ள என்ன ஓடுது?னு மனம் விட்டு கேட்க தான் பலர் இல்லை ஆனால்..... உங்கள் கருத்தை அவர்களிடம் கூறுவதில் தவறேதும் இல்லை ஆனால் திணிக்க வேண்டாம்,கேளுங்க என்ன சொல்கிறார்களோ அதை கேளுங்க அதுவே மனசு இலகுவாகினது போல் இருக்கும்.. அவர...