முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

வாழ்வின் மிகப்பெரும் வலு நெருக்கமாமவரும் இழப்பு,அதுவும் தான் பெற்ற பிள்ளைகளில் மரணம்? இதை கடக்க என்ன செய்யலாம்?

வாழ்வில் மிகப்பெரிய வலி என்றால் அது மரணம் மட்டுமே. நம் வாழ்வில் ஏராளமான  மரணத்தை கண்டிருப்போம்,ஆனால் அது வெறும் மரணச் செய்தியாகவே வந்து சில மாதங்களில் மறந்துவிடும்.நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் இழப்பு தாங்க முடியாத ஒன்று.அது பிரிந்தாலும் சரி இறந்தாலும் சரி. தாய்,தந்தை இழப்பை கூட மகனோ மகளோ தாங்கி அவர்கள் நினைவில் வாழ்ந்து கடந்து விடுகின்றனர்.ஏனெனில் அவர்களுக்கு குடும்பம்,குட்டி என வந்துவிடுவதால் அப்படியே வாழ்க்கை சென்று விடுகிறது. ஆனால் பெற்றோர்கள் தன் குழந்தையின் (என்ன வயதானாலும் குழந்தை தானே) மரணத்தை பார்ப்பது வாழ்வில் மிகப்பெரிய கொடுமை.அந்த வலியை அம்மாவும்,அப்பாவும் வாழ்க்கை முழுக்க சுமப்பார்கள்.மிகவும் கொடுமையானது.வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் உணர்வார்கள். தன் மகன்/ள் உடல் முன்பு அவர்கள் கதறும் கடைசி மரண ஒளங்கள் கேட்க  முடியாது.இருக்கின்ற மொத்த வலியும் கண்ணில் கண்ணீராக தெரியும்.இதுவரை நிகழ்ந்த,அவர்கள் குணங்களை ல்,பிடித்த உணவுகளை நண்பர்களை பற்றியெல்லாம் கூறி எழுந்து வாடா செல்லமே என அழுகும் போது ஆத்மா மொத்தமும் கதறும். என் வாழ்வில் தன் மகனை/மகளை இழந்து தினம்...

Club House பரிதாபங்கள் - படிக்க வேண்டிய பதிவு!!!!

Club house எனும் செயலி சமீபத்தில் ட்ரெண்டில் இருப்பது,மற்ற சமூக வலைதளங்கள் போல இதுவும் ஒன்று,என்ன? இதில் வெறும் ஆடியோ வடிவில் மட்டுமே பேச முடியும்,இப்போது மெஸ்ஸேஜ் செய்யும் வசதியும் கொண்டு வந்துள்ளனர். இவைப்பற்றி கேள்விப் பட்டும் தள்ளியே இருந்தேன்,சரி என்ன தான் இருக்குனு உள்ளே சென்றேன். ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை ஆனால் போகப் போக புரிந்தது. பலருக்கு இப்போது இதுவே பொழுது போக்காக இருப்பது தெரிடவந்தது. என் நண்பர்கள் சிலரும் ஒரு ரூமில் இணைந்து பாட்டு கேட்டுக் கொண்டே தன் வேலையை செய்வதினால் மனஅழுத்தம் குறைவது போல் ஒர் உணர்வு என பகிர்கின்றனர். நிறைய தலைப்புகள்,புதிய மனிதர்கள்,நிறைய பொழுபோக்கு ,சிறிதளவு கற்றல் எது வேண்டுமோ அதை தேர்வு செய்வது நம் கையில் உள்ளது. எனக்கு சேமிப்பு,முதலீடு,இலக்கு பற்றி சில கிளப்பில் இணைந்தேன்,பின்பு தெரியாமல் ஏதோ ஒரு ரூமில் இணைந்துவிட்டேன் யாரோ ஒருவர் ஒரு பெண்ணை ஆடை அணிந்தது  பற்றி சொல்லி விட்டு ஓடி விட்டார் போல,அதன் பிறகு ஒரே கத்தல்,கதறல்,கோபம்,அழுகை அந்த இடமே ரத்த பூமியாக இருந்தது.பின்பு தான் தெரிந்தது எல்லா ரூமில் இதே போன்ற ஏதாவது கொளாறு செய்...

ஹெல்மெட் அணிவதில் ஏன் அவ்வளவு சோம்பேறித்தனம்? விபத்து - விழிப்புணர்வு பதிவு

நேற்று அடையாரில் இருந்து வரும்போது வேளச்சேரி மேம்பாலத்தில் ஒரே போக்குவரத்து நெரிசல், ரைட்டு ஏதோ சம்பவம் ஆகி இருக்குன்னு கிட்ட போய்ட்டு பார்த்தா, சம்பவமே தான். முதியவர் வண்டி ஓட்டிகொண்டே பின்னால் பார்க்காமல் indicator போடாமல் ,சமிக்கை எதுவும் காட்டாமல் இடது பக்கம் திரும்பியுள்ளார்,வண்டியில் வேகமாக வந்த வாலிபர் இடித்ததில் இரண்டு பேரும் கீழே விழுந்தனர், இளைஞனுக்கு முகம்,கை காலலேலாம் பலத்த அடி அவர்க்கு அவரச ஊர்தியில் முதலுதவி செய்தார்கள்,பின் மருத்துவமனை சென்றார்கள். பெரியவருக்கு கை,கால்,முட்டி,பின் மண்டையில் தோல் பிரிந்து சதை தெரியும் அளவுக்கு அடி, சிறிது நேரம் சுய நினைவே இல்லை பிறகு பேசினார்.ஆனால் விழுந்த அதிர்ச்சியில் இருந்து மீள கொஞ்சம் நேரம் எடுத்தது.வண்டியில் வந்த 108ல் முதலுதவி செய்தார்கள்.பின் அவர் வீட்டிற்கு அழைத்து ஆள் வந்தவுடன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பினோம்.போகும்போது ஐயா ஒன்னும் இல்ல,சரி ஆகிடும் சொன்னேன்.ஆறுதலான வார்த்தை தான் அப்போது தேவை. அவ்வளவு பேர் நின்று உதவி செய்து வழி அனுப்பியது மனிதம் உயிரோடு இருப்பதை உணர்த்தியது.ஒரு சகோதரியும் கடைசி வரை...

மேதகு - ஒரு சிறிய விமர்சனம்

தமிழனத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் இளமைப் பருவ வாழ்க்கை வரலாற்றை பல்வேறு நெருக்கடிகள்,அரசியல் அழுத்தத்தைக் கடந்து மாபெரும் வரலாறு வெளிவந்துள்ளது. இதுவரை தலைவர் பிரபாகரனைப் பற்றி தெரியாதவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் நாம் தலைவரை நேரில் பார்ப்பது போல் தத்ரூபமாக எடுத்திருக்கிறார்கள். ஏன் இலங்கை பிரிந்தது,ஏன் நம்மை ஆள துடித்தார்கள்,அடித்து நொறுக்கினார்கள் என்பதை தலைவர் "நாம் ஏன் திருப்பி அடிக்கயில்ல" எனும் கேள்வியில் அனைத்திற்கும் பதில் அடங்கியுள்ளது. அடங்கி ஓடியுங்கியது போதும் இனியும் எம்மக்கள் அடிமையாக இருக்க வேண்டாம் தமிழனை அடித்தால் திருப்பி அடி விழும்னு பயம் வரணும்னு தலைவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அவ்வளவு கம்பீரம். தமிழ் ஈழ சொந்தங்களின் விடுதலை போராட்டத்தை கொச்சைப் படுத்தி எடுக்கும் பிறமொழியாளர்கள் இருக்கும் இடத்தில் தற்போது இயக்குனர் கிட்டு அவர்கள் சமரசமில்லாத வரலாற்றை கொடுத்திருக்கிறார். உலகில் உள்ள அனைவரும் காண வேண்டிய படம் முக்கியமான எம் மக்களை கொச்சைப் படுத்தும் பிற மொழியாளர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் எம் வரலாற்றை. குறைவான பண செலவு திர...

பெற்றோர்களே சேமிப்பு ஏதேனும் வைத்துள்ளீர்களா? பென்ஷன் திட்டம் பற்றி யோசித்தீர்களா?

சேமிப்பு,முதலீடு என்பது சிறுவயது முதல் பெற்றோர்களை பார்த்து நாம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். முன்பெல்லாம் ஒன்று வாங்க வேண்டும் என்று யோசித்தால் கூட ஆயிரம் கேள்விகள் கேட்டு ஆமாம்ல இது இப்போ தேவையில்லைனு அந்த பணத்தை வேறு விழியத்திற்கோ சேமிப்பிற்கோ ஒதுக்கி விடுவார்கள். உண்டியல் பழக்கமும், அரிசியிலும்,அஞ்சறை பெட்டியிலும் பணம் ஒளிந்து கொண்டு தேவைக்கு வெளியே வந்தது இப்போது அந்த பழக்கமும் மறைந்து வருகிறது. பெற்றோரை பார்த்து தான் குழந்தைகள் வளரும் கற்றுக்கொள்ளும், நாம் தான் கற்பிக்கவும் வேண்டும். நூற்றில் முக்கால்வாசி பெற்றோர்கள் இன்னைக்கு என் குழந்தைக்கு தேவையானதை நிறைவேற்றி விட்டேன் என ஆறுதல் அடைந்து கொள்கிறார்கள்.ஆனால் எந்த சேமிப்பும்,முதலீடும் செய்வதில்லை மிஞ்சி மிஞ்சி போனால் தங்கத்தை வாங்கி பீரோவிலும்,இடத்தை வாங்கி போடுவதை முதலீடாக கருதுகின்றனர்.இன்னும் பலர் அதை கூட செய்வதில்லை. கடனை மட்டுமே வாங்கி குடும்பத்தை நடத்தி இறுதியில் அந்த கடனை தன் பிள்ளைகளின்  தலையில் கட்டுவதே இப்போது அதிகம் நடக்கிறது. அவன் சம்பாதிக்கும் பணத்தில் ஆசையாக செலவு செய்ய முடியாது ,சேமிக்க முடியாது, க...

இளைஞர்களே இப்போதே சேமிப்பை துவங்குங்கள் இல்லையெனில் வாழ்க்கை முழுக்க பணத்திற்காக போராட வேண்டி வரும்? செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?

உயிர் வாழ மூச்சுக் காத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பணம் . இளைஞர்கள் பணம் சம்பாதிப்பதிலும் செலவு செய்வதிலும்  காட்டுகின்ற ஆர்வத்தை சேமிப்பில் துளியும் காட்டுவதில்லை. பலரிடம் சேமிப்பை பற்றி பேசினாலோ கேட்டாலோ " அட போயா சம்பாதிக்கிறது எதுக்கு செலவு பண்ண தானே, எடுத்துட்டு போகும்போது ஒரு ரூபா கூட கொண்டு போக போறது இல்ல,இருக்கிறத வச்சிக்கிட்டு ஜாலியா வாழ்ந்துடனும்"னு கம்பி கட்டுகிற கதையெல்லாம் விடுவாங்க. இன்றைய மகிழ்வு எவ்வளவு முக்கியமோ அதை விட எதிர்காலத்தின் மகிழ்ச்சி நிறைந்த நிம்மதி அதை விட முக்கியம். சேமிப்பும் முதலீடும் செய்தால் மட்டுமே பிற்காலத்தில் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும், எந்த ஒரு அவசர ஆபத்திற்கு கூட நம் பணம் தான் உதவும்,இப்போது தெரியாது அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது அய்யொ பணம் கொஞ்சம் சேர்த்து வைத்திருந்தால் யூஸ் ஆகி இருக்கும்னு தோணும்". யாருக்கு எப்போ என்ன ஆகும்,திடீர்னு என்ன செலவு வரும்,எப்போ பொருளாதாரம் சரியும், வேலை போகும்னு தெரியாது". அதனால் இப்போதைக்கு "அவசரகால நிதி ( Emergency Fund) குறைந்தபட்சம் 3 மாதம் அதிகபட்சம் 6 ம...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

லாக்டவுனில் செய்ய வேண்டிய சிறந்த பழக்கங்கள் என்ன?

மறதி மனிதனின் இயல்ப  பலவற்றை படிப்பது மட்டுமல்லாமல் செயல் படுத்தினால் மட்டுமே வாழ்க்கை உயரும் நாமும் உயர்வோம். அனைவருக்கும் 24 மணிநேரம் தான் ,நேரம் இல்லை என கூறுபவர்கள் இதிலிருந்து தப்பிக்க கூறிகள் வழிகள் தான் இந்த வெட்டி வார்த்தைகள். நமக்கான நேரத்தை நாம் தான் ஒதுக்க வேண்டும். 1.உடற்பயிற்சி எந்தவித சாக்கு போக்கும் இல்லாமல் குறைந்தபட்சம் 20 நிமிடவாது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்யுங்கள் அது ஓட்டம்,ஆட்டம்,நடை எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டும். இதனால் உடலும் சரியான எடையில் கச்சிதமாக இருக்கும்,மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்,மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கும். 2.புத்தகம் வாசிப்பது இவ்வுலகில் வெற்றியடைந்தவர்கள் அனைவரும் புத்தகம் வாசிப்பது அவர்களின் பழக்கம்,கற்றல் வாழ்க்கை முழுக்க இருந்து கொண்டே இருக்கும். புத்தகம் வாசிப்பதினால் புதிய விழியங்களை கற்றுக்கொள்ளலாம்,புத்தகம் நம்மை ஊக்குவிக்கும், புத்தகம் பல சிந்தனைகளை நமக்குள் கொண்டு வரும்,நமக்கென ஒரு உலகத்தை புத்தகத்தில் காணலாம். சற்று கடியான காரியம் தான் ஆனால் சரியான காரியங்கள் தொடக்கத்தில் கொஞ்சம் கசக்கவே செய்யும்,பிறகு இனிமும் முயற்...

லாக்டவுனில் போர் அடிக்குதா? ஏன் இப்படி? என்ன பண்ணலாம்?

எங்கு எந்த உரையாடல் கேட்டாலும் சரி,சமூக வலைதளத்தில் பார்த்தாலும் சரி "ஐயோ ஒரே போர் அடிக்குது" " என்ன பண்றதுனே தெரியல,எவ்ளோ நேரம் தான் தூங்குறது"னு புலம்பல்கள் தான் அதிகம். புலம்புபவர்கள் யாரென்று பார்த்தால்  வாழ்க்கையை/குடும்பத்தை  எப்படி ஓட்டுவது என்ற பொறுப்பு/கடமை இல்லாதவர்களின் புலம்பல்கள் தான் இவையெல்லாம். சரி அது இருக்கட்டும் நேரம்  ஏன் பொறுமையாக செல்கிறது? இவ்வளவு காலம் வேலைக்கு செல்வது,ஊர் சுற்றுவது,பயணம் செய்வது ,உறக்கம்,குடும்பம்னு ஏதோ செய்து கொண்டே இருந்தோம்,இப்போ இவை ஏதும் பெரிதாக இல்லை,வீட்டிலே இருப்பதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை! மகளிருக்கு மட்டும் இதில் விதிவிலக்கு எந்நேரமும் குழந்தை, கணவன் ,சமையல் என இருப்பதால் அவர்களுக்கு இது புதிதல்ல. இலக்கு இருக்கும் மனிதன் பெரும்பாலும் இது போன்ற வார்த்தையெல்லாம் பயன்படுத்த மாட்டான் ,ஏனேன்றால் தன் இலக்கை நோக்கி செல்ல என்னெவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கான நேரமாய் பயன்படுத்திக் கொள்வார்கள்.ஒவ்வொரு நாளும் உருப்படியாக ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். சரி என்ன செய்யலாம்? முதலில் நீங்கள் பல நாட்கள் செய்ய நின...

காதல் என்றால்?காதல் முறிவு எப்படி ஆகிறது?Break Up-ன் வலி?கடந்து செல்ல முடியுமா?

காதல் தோற்றுப் போவதில்லை!! காதலர்கள்  தான் தோற்றுப் போகிறார்கள்!!♥️ இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பல துன்ப செய்திகள் கேட்டாலும் பல காதல் முறிவு செய்திகளையும் கேட்கவும்,பார்க்கவும் முடிகிறது. காதலை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் பிரிவின் வலியும் வேதனையும்,பார்வையாளராக எளிதில் கடந்து செல்ல முடியும்,ஏளனமாக சிரிக்கவோ ,கேலி செய்யவோ கூட முடியும்,ஏன் ஆறுதல் கூட சொல்ல முடியும் ஆனால் வலியை உணர்வது கடினம், அவ்வுணர்வில் இருந்து நகர்வது நரகம். சில ஆய்வுகளின் படி கண்டவுடன் காதல் எல்லாம்  முக்கால் வாசி பிரிவில் தான் முடிந்தள்ளது.பேசி,பழகி,புரிந்து உணர்ந்த காதல் மட்டுமே நிலைத்து நின்றதாக கூறுகிறது. இப்போது காதல் செய்வது எல்லாம் ட்ரெண்ட் ஆகி விட்டதல்லவா?அதை செய்யவில்லையென்றால் என்னவோ மாதிரி பார்கிறார்களே. காதல் எவ்வயதிலும் வரும் ஆனால் அது காதல் தானா என்பது தான் இங்கு கேள்வியே? நாள் முழுக்க கடலை,ஊர் சுற்றுவது,நிறைய பரிசுகள் இது மட்டுமல்ல காதல்.உள்ளத்தால் இணைந்து   உணர்வோடு கலந்து வாழ வேண்டும்.காதலில் புரிதலும் ,விட்டுக்கொடுத்தலும் முக்கியமான ஒன்று. முறிவின் தொடக்கமே இது தான் ...

2k கிட்ஸ் குட்டி வடிவேலு,சோபி கதை என்ன? ஏன் ட்ரெண்ட் ஆனது ?இதை கலாய்ப்பவர்களுக்கு சில கேள்விகள்?

சமீபத்தில் ட்ரெண்டில் இருக்கும் குட்டி வடிவேலு எனும் சஞ்சய்♥️சோபியை  ஓட்டாத ஆளே இல்லை. வாட்சப்,முகப்புத்தகம், யூ ட்யூப்னு எங்கு பார்த்தாலும் ட்ரோல்ஸ் தான் அவர்களின் எண்ணமும் ட்ரெண்டிங் ஆவது தான், அவர்கள் மட்டுமல்ல  ரீல்ஸ்,டிக் டாக் செய்பவர்கள் அனைவருக்கும் தான் ட்ரெண்ட்ஆக வேண்டும் என்பது  தானே விருப்பம்,அனைவருக்கும் தன்னை பலருக்கும் தெரிய வேண்டும்,பாராட்ட வேண்டும் என்பது தானே ஆசையும் கூட. மற்றவர்கள்  போல் இவ்விடயத்தை சிரித்து விட்டு கடந்து செல்ல முடியவில்லை, ஒரு விதமான கோபவும்,கேள்விகளும் எழுகிறது! என் பார்வை சரியானதா என தெரியவில்லை,அதுமட்டுமில்லாமல் முக்கால்வாசி பேருக்கு எதிரான,முரணான கருத்தாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். 17 வயது சிறுவன் 2k கிட் சஞ்சய்,சோபி  சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு பாராட்டி பேசி வந்து தன் காதலை அப்பெண்ணிடம் சோபியிடம் வெளிப்படுத்தியுள்ளார் ,அவருக்கும் பிடித்து போகவே ஓகேசொல்லியுள்ளார். பெற்றோர்களிடம் இதை தெரிவிக்க அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.இக்கால பெற்றோர் என்பதால் சாதாரணமாக எடுத்து கொண்டுள்ளனர் என நினைக்கிறேன். சஞ...

வாழ்வில் பல சாதனைகள் செய்ய துடிப்பவரா நீங்கள்? இப்பதிவு உங்களுக்கு தான்!!

சாதிக்க துடிக்கும் பலரின்  வாழ்வைப் பற்றி சில வரிகள்!!! இவர்களுக்கு தீராத வெறி சாதிக்க வேண்டும், நாம் நினைத்த வெற்றியை அடைய வேண்டும், உலகமே திரும்பி பார்க்கும் அளவுற்கு சாதிக்க வேண்டும் .நான் வீழ்வேன் என்று நினைத்த உறவினர்கள் மற்றும் சமூகத்துக்கு முன் எழுந்து நின்று வாழ வேண்டும் என  இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்,இவர்களின் இலக்கு தெளிவாக உள்ளது,அதற்காக தான் அனுநொடியும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்....! ஆனால் ............. வெறி இருக்கும் அளவுற்கு இவர்களிடம் பணம் இல்லை ல்.ஆம் ,தேவையான  பொருட்கள் வாங்க ,மருத்துவ செலவு, 3 வேலை சரியான உணவு உண்ண,பயணம் செய்ய என பல காரணிகள் உண்டு பலர் திறமை இருந்தும் பணம் என்னும் மதிப்புமிக்க காகிதம் இல்லாததால் அவர்கள் இலக்கை எட்ட முடியாமல் போய் விடுகிறது!  இதை மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!! உன்னை வழிநடத்த , உனக்கு உதவி செய்ய,உனக்கு தோள் கொடுத்து தூக்கி விட யாராவது வருவார்கள் என எதிர்பார்க்காதே இது அவசியம் இல்லாதது,உனக்கு நீ மட்டுமே ஆசான், உன் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இரு மேலே குறிப்பிட்டவை  எல்லாம் த...

நடிகர் விவேக்கின் வாழ்க்கை நம்முள் விதைத்தது என்ன? எப்படி திடீர் மரணம்?

நடிகர் விவேக்கின் மரணம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவரின் இறப்பை!!! அப்துல் கலாம் ஐயாவின் ஆசிப்பெற்ற ஆளுமை மனிதர் விவேக்,வாழ்ந்தவரை யார் வெறுப்பையும் சம்பாதிக்காமல் பலரின் அன்பை மட்டுமே பெற்று  சென்றுள்ளார் என நினைக்கிறேன்,திரை வாழ்விலும் ஆரோக்கியமான போட்டியாகவே இருந்தது,அவரின் நகைச்சுவையை சிறுவயதில் பார்த்தால் நகைச்சுவையாக மட்டுமே தெரியும், போக போகத்தான் அதில் உள்ள கருத்துகளும், அர்த்தங்களும் புரிய துவங்கும்,சிந்தக்க தூண்டும். மதுரையில் பிறந்து பள்ளிப்படிப்பு,கல்லூரியை முடித்து, டெலிபோன் ஆப்ரேட்டராக வேலை யைத் துவங்கி, சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி, நாடகத்தில் துவங்கி சினிமாவில் முடிந்தது அவர் வாழ்க்கை. திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றியதற்கு இந்திய அரசு அவருக்கு மிகவும் உயரிய விருதான "பத்ம ஸ்ரீ" விருது கொடுத்து கௌரவித்தது. அப்துல் கலாம் ஐயாவின் ஆசையை முழு மூச்சாக செயல் படுத்தி வந்தார்,அந்த ஆசை ஒரு கோடி மரங்களை விதைப்பது, விவேக் அவர்கள் லட்சக்கணக்கான மரங்களை விதைத்து இப்பூமியை பசுமை ஆக்கிக் கொண்டிருந்தார். ஆனால் இன்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...

தரமான பொருள் வாங்குவது எப்படி? Realme Wireless Bluetooth Headphone விமர்சனம்!!!

நேற்று குறைவான விலைக்கு கிடைக்கும் டுபாக்கூர் பொருட்கள் பற்றியும் உடன் கொஞ்சம் அதிகம் பணம் போட்டு தரமான பொருளை வாங்கலாம் என்பதை பற்றி பதிவிட்டிருந்தேன், அப்பதிவை படிக்க கீழ உள்ள சுட்டிக்கு செல்லுங்கள்👇🏻>. https://ashokkumarsudarsanam.blogspot.com/2021/04/blog-post.html நான் எப்போதுமே ஒரு பொருளை வாங்கும் முன்பு எனக்கு இப்போ இது  அவசியம் தானா? நல்ல பிராண்ட்டா? விமர்சனம் எப்படி இருக்கு? நிறைய வசதிகள் இருந்தாலும் எனக்கு ஏற்ற வசதி இருக்கிறதா? என்பதை பார்ப்பது வாடிக்கை அதுமட்டுமில்லாமல் டெக்கிஸ்களிடம் (Techies) ஆலோசனை கேட்பதும் தான். ● ஹெட்போன் Realme(1,800),Oneplus (2,000) Oneplus ஹெட்போன் நண்பனிடம் இருந்து வாங்கி உபயோகப்படுத்தினேன் நல்லா தான் இருந்தது ஆனா ரொம்ப bass இல்லாம நார்மலா டீசென்டடா இருந்துச்சு, ஆஃபீஸ் ஒர்க்குக்குலாம் இது ஓகே பட் மியூசிக் லவ்வர்ஸ் இல்ல நிறைய பயணம் செய்கிறவர்களுக்கு  இது செட் ஆகாது!! சரி realme wireless bluetooth headphone வாங்கலாம்னு முடிவு பண்ணேன்,Mi, Boatலாம் நிறைய பார்த்தேன் ஆனால் அனைத்தையும் விட இந்த விலைக்கு இது சரியாக இருக்கும் என தோன்றியது. ஒரு...

குறைவான விலைக்கு கிடைக்கும் டுபாக்கூர் பொருட்கள் வேண்டாம் | விழிப்புணர்வு பதிவு

எனக்கு ப்ளூடூத் ஹெட்போன் அவசியமாக இருந்தது,நிறைய அழைப்புகள், அதுமட்டுமில்லாமல் podcast ,பாடல்கள் ,புத்தகங்கள் பற்றி கேட்பது என எப்போதும் உபயோகமாக இருக்கும். Realme Wiress  Earphone மேல் ஒரு ஆசை பார்த்தால் விலை 1,800 ஓவா சரி பொறுமையா வாங்கிக்கலாம்னு இருந்தேன் ,நண்பர் ஒருவர் "நான் பாரிஸ்ல தான் இந்த ஹெட்போன் வாங்கினேன் 400 ரூபாய் தான்னு சொன்னார்,யூஸ் பண்ணி பார்த்தேன் நல்லா தான் இருந்துச்சு ஒரிஜினல் மாதிரி. சரி நானும் வாங்கலாம்னு மெனக்கெட்டு பாரிஸ் வரைக்கும் போய்ட்டு பேரம் பேசி வாங்கிட்டு வந்தேன் 800ரூ சொன்னாங்க 600 ரூபாய்க்கு வாங்கினேன். ஒரிஜினல் மாதிரி பேக்கிங் (உள்ளுக்குள் 600 ரூபாய்க்கு எப்படின்னு ஒரிஜினல்னு  கேள்வி இருந்தாலும் 600 ரூபாய்க்கு ஓகேனு வந்தாச்சு) 1 வருஷம் வாரண்டினு சொன்னாங்க. ஓரு 1 வாரம் நல்லா இருந்தது அப்போ கூட சரியா கனெக்ட் ஆகவில்லை,சவுண்ட் சரியாக இல்லை,சார்ஜ் நிக்கல அண்ட் ஒரு சைட் சுத்தமா ஒர்க் ஆகாம போச்சு,ஒரு பக்கம் அறுந்து தொங்கிடிச்சு, சரினு கடைக்காரருக்கு கால் பண்ணி அட்ரஸ் கேட்டா ,கடை அட்ரஸ் கூட தெரியல எப்படி என்கிட்ட வாங்குனிங்கனு கேக்குறாப்ல. அங்க ஒரு 50,...

நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார்!!

தலைப்பை பார்த்த உடன் பதற வேண்டாம்,நாம் தொலைபேசியில் அழைக்கும் நபர்  நம் அழைப்பை ஏற்க வில்லையென்றால் இந்த வசனம் தான் ஒலிக்கும்.இதனால் எவ்வளவோ குடும்பத்தில்,உறவில் மோதலும்,பிரிவும் நடந்துள்ளது,ஏன் கொலை வரை கூட சென்றுள்ளது.இப்போது இதை "நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் காத்திருக்கவும் அல்லது பின்னர் அழைக்கவும்" என மாற்றி விட்டார்கள். நாம் ஒருவருக்கு கால் செய்தால் ஏற்க மாட்டார்கள் அல்லது துண்டிப்பார்கள்,நாமோ சரி ஏதோ வேலையில் இருப்பார்கள் அல்லது வாகனம் ஓட்டிக் கொண்டிருப்பார்கள் நம் அழைப்பை பார்த்த பின்  பேசுவார்கள் என காத்திருப்போம்!! ஆனால் அப்படி ஒன்று நடக்கவே நடக்காது.   இதற்கு காரணம் : 1.உங்களிடம் பேச விருப்பம் இல்லாமல் புறக்கணிக்கலாம், 2.பேசும் மனநிலை இல்லாமல் இருக்கலாம் அல்லது பின்பு பேசிக்கொள்ளலாம் என இருக்கும் , எல்லாருக்கும் ஒரே சூழ்நிலை ,ஒரே மனநிலை எப்போதும் இருக்காது அல்லவா!!! ஆனால் ஒருவர் அழைத்தால் திருப்பி அழைப்பது ஒரு அடிப்படை நாகரீகம், சிறந்த பழக்கமும் கூட,சரி  வேலை,சூழ்நிலை ஓகே ஆனால் ஒரு கஷ்டம் (Custom) மெஸ்ஸேஜ்  ...

Gpay போன்ற செயலியில் பணம் அனுப்பும்போது இதை கவனிக்கவும்!!

Gpay போன்ற செயலியில்  பணம் அனுப்பும்போது கவனம் !!! சில நாட்களுக்கு எங்கள் பகுதியில் புதியதாக புட் ட்ரக் கடை வறுத்த சாதம் (fried rice )  துவங்கி இருந்தார்கள்,சரி ருசித்து பார்ப்போமே என சென்றோம், அங்கு ஒருவர் ஏதோ பார்சல் கட்டுங்கனு சொல்லிட்டு,வண்டியில் இருக்கும் Gpay ஸ்கேன் பார்த்து  அவரு பாட்டுக்கு டக்குனு UPI Barcode ஸ்கேன் செய்து பணம் அனுப்பி விட்டு கடைக்காரரிடம் காட்ட, அவரே ஒரே ஷாக்...! அட என்னப்பா கைல பணம் இல்ல அதனால் Gpay செய்துள்ளார் இதுல என்ன ஷாக் ஆக வேண்டி இருக்கு அதானே!!! அதான் ஆனா அந்த வாகனத்தில் ஒட்டி இருந்த UPI ஸ்கேன் கடைக்காரருடையது கிடையாது,இதுக்கு முன்ன இந்த வண்டி வைத்திருந்தவரின் ஸ்கேன் ,இப்போ பணம் கடைக்காரருக்கு போகலை யாருக்கோ போயிருக்கு ,இதுக்கு தான் அந்த ஷாக்க்க்க்.... பின் முகம் எல்லாம் மாறி,இன்னொரு முறை கடைக்காரரிடம் Gpay எண் கேட்டு பணம் அனுப்பினார். உரிமையாளர் மேலும் தவறு உள்ளது, கடை வைத்துள்ளார் இதைக் கூட கவனிக்காமல் வியாபாரம் செய்கிறார்,வாடிக்கையாளரோ ஸ்கேன் செய்து இந்த பெயர் தானா என உறுதி செய்துவிட்டு பணம் அனுப்பி இருந்தால் சிறப்பாக இருந...

பாட் லக் போலாம் வாங்க?

பாட்லக்கா அப்படினா என்ன? சிலருக்கு தெரிந்தும், பலருக்கு தெரியாமலும் இருக்கலாம், பாட்லக் என்றால் கூட்டாஞ்சோறு என கூறலாம்.  அதாவது ஒரு குழுவாக ஒரு இடத்திலோ அல்லது ஒருவர் வீட்டிலோ ஒன்று கூடுவார்கள், ஒவ்வொருவரும் ஒரு உணவை செய்து கொண்டு வர வேண்டும் ,பலரும் ஒரே இடத்தில் பல வகையான உணவுகளை ருசிக்கவும்,ஒன்றாக மனிதர்களுடன் சிரித்து மகிழவும்,நம் அன்பை பகிரவும் பெறவும் இருக்கும்  ஒரு நிகழ்வு தான் பாட்லக்!!! சில  நாட்களுக்கு முன்பு நான் இருக்கும் குழுவில் பாட்லக்  செய்ய திட்டம் போட்டு இருந்தார்கள்,விருப்பமுள்ளவர்கள் இணையலாம் என கூற நானும் இணைந்தேன் (கடைசி நேரத்தில்) லிஸ்ட் போட்டோம் ,யார் யார் என்னென்ன உணவுகள் கொண்டு வருகிறோம் என அதற்கு ஒரு லிஸ்ட்...! எந்த பாட்லாக்காக இருந்தாலும் அதில் சோறு,பொரியல்,பிரியாணி,சப்பாத்தி,ஸ்னாக்ஸ்,இனிப்பு,காரம்,ஜூஸ் என  அனைத்தும் இடம் பெற்றால் சிறப்பு!! நான் சென்ற பிறகு ஒவ்வொருவராக வந்து இணைந்தார்கள்,அனைவரிடமும் பேசி மகிழ்ந்து கொண்டோம், பிரெட் அலவா செய்யவும்,சப்பாத்தி செய்யவும் உடனிருந்து லைட்டா உதவினோம். பின்பு...