முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

காதல் என்றால்?காதல் முறிவு எப்படி ஆகிறது?Break Up-ன் வலி?கடந்து செல்ல முடியுமா?

காதல் தோற்றுப் போவதில்லை!!
காதலர்கள்  தான் தோற்றுப் போகிறார்கள்!!♥️

இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பல துன்ப செய்திகள் கேட்டாலும் பல காதல் முறிவு செய்திகளையும் கேட்கவும்,பார்க்கவும் முடிகிறது.

காதலை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் பிரிவின் வலியும் வேதனையும்,பார்வையாளராக எளிதில் கடந்து செல்ல முடியும்,ஏளனமாக சிரிக்கவோ ,கேலி செய்யவோ கூட முடியும்,ஏன் ஆறுதல் கூட சொல்ல முடியும் ஆனால் வலியை உணர்வது கடினம், அவ்வுணர்வில் இருந்து நகர்வது நரகம்.

சில ஆய்வுகளின் படி கண்டவுடன் காதல் எல்லாம்  முக்கால் வாசி பிரிவில் தான் முடிந்தள்ளது.பேசி,பழகி,புரிந்து உணர்ந்த காதல் மட்டுமே நிலைத்து நின்றதாக கூறுகிறது.

இப்போது காதல் செய்வது எல்லாம் ட்ரெண்ட் ஆகி விட்டதல்லவா?அதை செய்யவில்லையென்றால் என்னவோ மாதிரி பார்கிறார்களே.

காதல் எவ்வயதிலும் வரும் ஆனால் அது காதல் தானா என்பது தான் இங்கு கேள்வியே?
நாள் முழுக்க கடலை,ஊர் சுற்றுவது,நிறைய பரிசுகள் இது மட்டுமல்ல காதல்.உள்ளத்தால் இணைந்து   உணர்வோடு கலந்து வாழ வேண்டும்.காதலில் புரிதலும் ,விட்டுக்கொடுத்தலும் முக்கியமான ஒன்று.

முறிவின் தொடக்கமே இது தான் ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாது போகப்போக வாழ்க்கை பற்றிய கேள்விகள்  அதிகம் வரும்போது தான் பல குழப்பங்களும் வரும்,

"இவன்/இவள் நல்லா பார்த்துக் கொள்வார்களா?"
"இவர்/ள் நமக்கு செட் ஆகுமா?"
"நாம் நினைத்த  வாழக்கையை இவர்களால் கொடுக்க முடியுமா?"

இப்படி லாங் டேர்ம்மாக யோசிப்பதால் பல குழுப்பங்கள் சேர்ந்து சரி வேறு வழி இல்லை என இது வேண்டாம் என முடிவு எடுக்கிறார்கள்.

சிலரோ என்ன ஆனாலும் சரி என் முடிவு சரி  இவங்க தான் நமக்கு சரியான ஆளுனு நிற்பார்கள்.

காதல் முறிவு எப்போது ஆகிறதோ அன்னோடி முதல்  அழுகை,நினைவுகள்,அவர்களின் குரல், நேரில் அருகில் இருப்பது போன்ற உணர்வு, என்னென்னவோ கற்பனைகள்,தற்கொலை எண்ணம், சாட்ஸ் படித்து அழுவது,இருவருக்கும் பிடித்த பாடல்கள் கேட்பது, மது,தனிமை,லாஸ்ட் ஸீன் பார்ப்பது ,கெஞ்சுவது,புலம்பல்,எப்படியாவது நம்மிடம் வந்துவிட மாட்டார்களா என்ற ஏக்கம்!!!

ஒவ்வொரு நிமிடமும் கடப்பதே பெரும் நரகமாக இருக்கும்,அதுவும் இரவை கடப்பதெல்லாம் பெரும் கொடுமை,அந்நேரத்தில் பேசிய வார்த்தைகள்,ஒன்றாக இருந்த மணித்துளிகள் எல்லாம் வாட்டி வதைக்கும், மொத்தத்தில் நடைப்பினமாகவே வாழ்வார்கள்.

வெளியே யாருக்கும் காட்டிக்கொள்ள மாட்டார்கள் ,சிரிப்பால் கடந்து செல்வார்கள்,அந்த சிரிப்பிற்குள் ஏராளமான கண்ணீரும், வலியும் அடங்கி இருக்கும்.

அதிலிருந்து கடந்தது வர எவ்வளவோ முயற்சித்தும் மனம் கடந்து செல்ல மறுக்கிறது,இதை நினைத்து நான் வாடுவதையே மனம் விரும்புகிறது போலும்.

இதில் இருந்து வெளியே வர பலவற்றை முயற்சிக்கிறார்கள்,பலவற்றில் ஆர்வம் செலுத்துகிறார்கள் கொஞ்சம் பரவியில்லை என்றால் முழுவதுமாக விடுபட முடியவில்லையே.

எப்படி முடியும் ஆழ் மனதில் பதிந்த ஒன்று அவ்வளவு எளிதில் மறக்குமா என்ன? எப்படியாவது நம்மிடம் வந்துவிட மாட்டார்களா என  ஏக்கத்தில் வாழ்பவர்கள் ஏராளம்.

இல்லை,ஆனது ஆகிவிட்டது இதுதான் நிதர்சனம் வாழக்கை எந்த பாதையில் கூட்டி செல்கிறதோ அதில் செல்வோம் என சென்றவர்களும் ஏராளம்.

காதல் எக்காலத்திலும் முறிவதில்லை,காதலர்கள் தான் முறிகிறார்கள்!

இதுவும் கடந்து போகும்!!

மாற்றங்கள் வினா♥️
மாற்றங்களே விடை♥️

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

avatar the way of water எப்படி?❗ ஒரு முறை பார்க்கலாமா - திரை சுமர்சனம்😫

Avatar The Way Of Water  (விமர்சனமாக கூட எடுத்துக்கொள்ளலாம்) ஏதாவது எழுத வேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் என்னத்த எழுதனு விட்டுவிடுவேன் ஆனால் இந்நேரம் ஆகியும் இதை நிச்சயம் எழுதுவதற்கு காரணம் உங்களின் மேல் உள்ள பாசம் நீங்களும் என்னைப் போல் அவஸ்தை பட வேண்டாமென்பதால்...... 2009ல் வெளியான அவதார் 1 எங்கள் மாமா வீட்டில் 3டி டிவியில் பார்த்தோம் நன்றாக தான் இருந்தது.இப்போதும் எனக்கு பெரிதாக இப்படம் செல்வதில் விருப்பமில்லை தம்பியும் ,நண்பனும் கேட்டதால் சென்றேன். அதுவே தாமதமாக தான் சென்றோம் நல்ல வேலை கொஞ்ச நேரம் தப்பித்தேன்😲. படத்தின் கருவே அவதார் தன் குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்,வனவாசியாக இருந்த அவர்கள் தன் குடும்பத்தை காப்பாற்ற கடல்வாசியாக மற்றொரு இனம் வாழும் தீவிற்கு சென்று அடைக்கலம் கேட்டு செல்கின்றனர். அங்கு அவர்களை ஏற்றுக்கொண்டார்களா? வில்லன் எப்படி இவர்களை கொள்ள முயற்சிக்கிறான்,யார் பிழைத்தார்கள்,உயிருடன் இருந்தார்கள் என்பது  க்ளைமாக்ஸ்.   ஆரம்பம் முதல் படம் முடியும் வரை "அய் யய்யோ எப்படா படம் முடியும்" ஏண்டா இப்படி கொல்றீ...