பலர் சொல்லி கேட்டிருக்கிறேன்,ஏன்? நானே கூட சொல்லி இருக்கிறேன்.
உடற்பயிற்சி செய்ய, நடைப்பயிற்சி செல்ல உடன் யாராவது வந்தால் நல்லாருக்கும்லனு,அப்படியும் சிலர் கிடைப்பார்கள் நாமும் தினமும் அவரை எதிர்பார்த்து,அவரும் நம்மை எதிர்பார்த்து செல்வோம்,திடிரென யாராவது ஒருவர் சொதப்பினால் போதும் இவரும் அதான் அவரே வரலையே இன்னைக்கு போக வேண்டாம் நாளைக்கு போவோம்னு செமையாக தூக்கத்தை தொடர்வார்.
உடன் ஒருவர் வந்தால் நன்றாக தான் இருக்கும், இன்னும் போட்டிபோட்டுக் கொண்டு செய்யலாம்,ஆனால் யார் வந்தாலும் வரா விட்டாலும் உறுதியாக செல்ல வேண்டும என்ற சுயஒழுக்கம் அவசியம் தேவை.
இதனால் மறுபக்கத்தில் இருப்பவர் கோவித்துக் கொண்டாலும் பிரச்சனை இல்லை ஏனென்றால் இதைக் கூட புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு கூட அவருக்கு பக்குவம் இல்லை என்பதை அறிய இது ஓர் வாய்ப்பாக அமைகிறது அல்லவா..!
ஒரு நேரம் வரை காத்திருக்கலாம் இல்லையெனில் கிளம்பிவிடலாம், இன்றும் இது போல் தான் ஆனது சில நிமிடங்கள் காத்திருந்தேன் கிளம்பிட்டேன்.
இன்று மாலை தாம்பரம் டூ போரூர் நெடுஞ்சாலையில் மிதிவண்டி பயணம் எதிர்காற்று கொஞ்சம் அதிகம் தான் ஆனாலும் அருமையாக இருந்தது,கொஞ்சம் கூட அழுத்தம் கொடுக்காமல் மிகவும் ஆசுவாசமாக ஓட்டினேன், பயணத்தின் போது இன்னொருவரை சந்தித்தேன், பெயர் பட்டுராஜா,மேற்கு தாம்பரம் ,வாரத்தில் 5 நாள் தாம்பரம் டூ போரூர் டூ அம்பத்தூர் டூ தாம்பரம் ,கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பொருட்களை செய்யும் வியாபாரம் செயகிறார், அதனால் தொழில் வேலையாக போரூர் செல்கிறார் உடன் உடற்பயிற்சியும் முடிகிறது.
அருமை சகோ,நல்லா பண்ணுங்க சைக்கிளிங் குழு உள்ளது இருக்கிறது விருப்பமிருந்தால் சொல்லுங்க இணைத்து கொள்ளுங்கள் என்று டாட்டா காட்டி விட்டு கிளம்பிட்டேன்..
இங்க வந்தா போக்குவரத்து நெரிசல் எல்லாம் கடந்து வந்தாச்சு ..
நானெல்லாம் ஜட்டி ,பனியன் எடுக்கணும்னா கூட யாரையாவது உடன் கூட்டி செல்வேன், இப்போதெல்லாம் யாரையும் எதிர்பார்ப்பது இல்லை, அது அவசியமற்றதும் கூட..
எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை கொடுக்கும்....!
பயணிப்போம்
#cycling #cyclingride #highwayride #FITNESS
#dontwaitforsomeone #letsgo #relax #WCCG #tbmchapter WCCG (Chennai Cyclists)
நல்ல பதிவு சகோ.. நானும் இதை போன்று தான்.... யாராவது என்ற சொல்லை பயன்படுத்தி கொண்டு இருந்தேன்.... ஆனால் இன்றிலிருந்து.... மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.... Tq for u good advice... 👍👍
பதிலளிநீக்குஅருமை
நீக்குவாழ்த்துக்கள்💐
அருமை பதிவு சகோ.
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்கு