முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

பணம் பறிக்க துடிக்கும் திருநங்கைகளிடம் உஷார்...!

 மூன்றாம் இனமான  திருநங்கைகள் பற்றி தான் இப்பதிவு...❤

ஒரு மாதத்திற்கு முன்பு கடற்கரைக்கு நண்பர்களோடு சென்றிருந்தேன் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டே கடலை ரசித்துக்கொண்டிருந்தோம்..

1 நிமிடம் தொடர்ச்சியாக பேசமுடியவில்லை ஒரு பக்கம் ஜோசியம்,இன்னொரு பக்கம் வேர்க்கடலை, சுண்டல் மறுபக்கம் டீ, காபி இதையெல்லாம் ஒன்றும் சொல்ல முடியாது அது அவர்களின் பிழைப்பு..

இரு அரவாணிகள் வந்தனர் பைசா கேட்டனர் இல்லை என சொன்னோம் குடு ராஜானு சொல்லவே இருப்பதை கொடுத்தோம் கிளம்பி விட்டார்கள் சரி என கிளம்பினோம்..

அதற்குள் இன்னொருவர் 

10 ரூபா குடுனு கேட்டாங்க...!!

இல்லக்கா இப்போதான் கொடுத்தோம் என்கிட்ட பெட்ரோல்க்கு தான் காசு இருக்கு...!

பரவால்ல குடு நான் சில்லறை தரேன்னு சொல்ல...!

இல்லக்கா எனக்கு வேணும் நான் வேற எதுவும் பைசா கொண்டு வரலைனு சொன்னேன்...!

அதற்குள் என் கைய புடிச்சி குடுடானு கேட்க...!

என்னுடன் வந்தவர் எதுக்கு கையெல்லாம் புடிக்கிறீங்க கை எடுங்கனு சொல்ல....!

அட ஏம்மா உன்ன நானும் பொண்ணு தானே கை தானே பிடிச்சேன்னு சொல்லி எவ்வளவு கேவலமான வார்த்தைகளை பயன்படுத்த முடியுமோ அவ்வளவும் பேசினார்கள்...!!!

பார்த்து பேசுங்க எங்களுக்கும் பேச தெரியும்னு சொல்ல....!

நானும் பொண்ணு தான் இப்போ தான் சிகிச்சை முடிஞ்சது காசு குடுன்னு கேவலமா நடந்துகிட்டாங்க...!

என்னுடன் இருந்தவர் போலீஸ் கூப்பிடறேன்னு   சொல்ல....!

கூப்பிடு பாக்கலாம் நானும் எங்க ஆளுங்களை கூட்டிட்டு வரேன்னு வந்து என்ன கூத்து அடிக்கிறேன் பாக்குறியானு சொல்ல...

முடிஞ்சா பண்ணுங்கனு சொல்லி நாங்க கிளம்பிட்டோம் அடுத்த பார்ட்டிய பாக்க கிளம்பியாச்சு அவங்க...

ஒத்த பைசா கொடுக்கவில்லை நாகரிகமாக கேட்டாலும் பரவாயில்லை அன்று வந்த கோபத்திற்கு என்னென்னமோ நடந்ததிருக்கலாம் ஆனால் உடந்திருந்தர்வதிகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அமைதியாக வந்துவிட்டோம்..

ஒரு கூட்டத்தின் மேல் எவ்வளவு தான் மதிப்பு இருந்தாலும் ஒரே சம்பவத்தில் அனைத்தையும் சுக்கு நூறாக்குவிடுகின்றனர்...

இச்சமூகம் இன்னும் அவர்களை முழுமையாக எற்றுக்கொள்ளா விட்டாலும் எவ்வளவோ முன்னேறி கேலி, கிண்டல்கள் குறைத்து ,அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களுக்கென மரியாதை மாலையை அணிவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்...

ஒருவர் செய்த செயலுக்காக ஊரையே குற்றம் கூறவில்லை இப்படியும் சிலர் இருக்கிறார்கள்..

அரசு பதவி,காவல்துறை, வியாபாரம்,அமைப்பு என எவ்வளவோ சாதித்துக்கொண்டும் இருக்கின்றனர் இப்படியும் பலர்...

சிலரிடம் ஜாக்கிரதையாக இருங்கள் இல்லையெனில் உங்கள் மேல் தவறே இல்லையென்றாலும் ஊரே தீயவர் என அழைக்கும் அளவிற்கு வைத்து செய்து விட்டு வீட்டிற்கு சென்று விடுவார்கள்.

#transgender #transgendersuccess #Respect

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

அயலி Webseries எப்படி உள்ளது? பெண்கள் படிக்க தடையா! பார்ப்போம் தரமான சம்பவம்😲🛑🙏

அயலி என்னதான் நல்ல படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தை எப்போது முடித்து அடுத்த சோலியை பார்க்கலாம்  என்று தான் எப்போதும் தோன்றும்.சில படங்கள் தான் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாமே, அடுத்த பாகம் எடுத்தால் நல்லாருக்கும் என தோன்றும். அதே போல் தான் அயலியும் மிகவும் பிடித்திருந்தது.முதல் இது படம் அல்ல சீரிஸ் எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் இல்லை சீரிஸ் பார்க்கும் பழக்கமும் இல்லை.  அயலி மொத்தம் 8 பாகம்,கிட்டததட்ட 4 மணிநேரத்திற்கு மேல். ஆனால் எந்த ஒரு நேரத்திலும் என்னடா எப்படா முடியும், என்ன இந்த காட்சி இப்படி இருக்கு  என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஹீரோ இல்லை,சண்டைக்காட்சி,காதல் ,நம்ம ஊர் திரைப்படங்களில்,நாடங்கங்களில் வருவது போல் தேவையில்லாத ஆணி பாடல்கள் இல்லை. முழு நேரமும் நம்ம சொந்த ஊர்களில் நாம் இருந்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஒவ்வொரு காட்சியும் நடிப்பாக இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது. அயலி - அந்த ஊருக்குள் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து ஓடி விட்டார்களாம் அதனால் அந்த ஊர் எரிந்து நாசமாகியது என சொல்கிறார...