முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

பெரிசுகள் பரிதாபங்கள் ❗❗ செல்போன்ல டவுட்டு கிளியர் பன்னது குத்தமா😲😫

பெருசுகள் பரிதாபங்கள்😀

போனில் ஏதாவது சந்தேகம்,இவர்களுக்கு கால் செய்ய வேண்டும்,வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும்,படம் தரவிறக்கம் செய்யவேண்டும் அது இதுவென்று எத்தனை சந்தேகம் என்றாலும் நமக்கு தெரியவில்லை என்றாலும் கூகுள் அல்லது யூ டூயூப்பில் அல்லது வேறு யாரிடமோ கேட்டு கூட அவர்கள் கேட்ட விடயத்தை செய்து கொடுப்போம்.

நான் எப்போதும் செய்து கொடுப்பதைவிட, எப்படி செய்ய வேண்டுமென்பதை சுலபமாக சொல்லி கொடுத்துவிட்டால் அவர்களே அடுத்த முறை ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டிருக்காமல் செய்து விடுவார்கள்.சிலர் கற்றுக்கொள்ள கூட மாட்டார்கள் அது வேற கதை.

எல்லாம் செய்து கொடுத்த பின்பு " டேய் தம்பி உன்கிட்ட போனை கொடுத்தது தப்பா போச்சு டா பார்ரா இது ஒர்க் ஆகவே  இல்லை" என நம்மேல் பாய வருவார்கள். எப்பா சாமி உங்களுக்கு செய்துகொடுத்தற்கு நம்மை செய்து விடுவார்கள்😫 எப்புற்ரா.....!

 சமீபத்தில் ஒருவருக்கு போனில் டிவி சானல்கள் பார்க்க வேண்டும் என சொல்ல ,செயலியை தரவிறக்கம் செய்து கொடுத்தேன்.சில நிமிடங்களில் டேய் "என்னடா  கால் வருது ஆனா எந்த பெயரும் காட்ட மாட்டேங்குதுனு" சொல்ல அரை மணிநேரம் அப்படி இப்படி என் நோண்டி சரி பண்ணியாச்சு....ஷப்பா முடில 😫

இதெல்லாம் ஒரு விடயமானு உள்ளுக்குள் தோன்றி இருக்கும் ,ஒரு டவுட்னா பரவால்ல ஒரு நிமிடத்தில் பத்து டவுட்டு கேட்டால் என்ன நான் செய்வேன் என்ன நான் செய்வேன்🤣🤣

காலக் கொடுமை அசோக்கு😀

✍️ அசோக் குமார் சுதர்சனம்

#tamilblogger #tamilwriteups #techtips #android #smartphone #parithapangal #boomeruncle

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...