சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
பல மாதங்களாகவே தலைக்கவசத்தில் இருக்கும் கண்ணாடியை மாற்றவேண்டுமென்றிருந்தேன் முழுவதும் சேதமாகி கீறளுடன் இருந்ததால் சாலை தெளிவாக தெரிவதில்லை, மழை பெய்யும் வேளையில் முகத்தில் தண்ணீர் அதிகம் அடிக்கிறது,முக்கியமாக தூசிகள் முகத்தில் படாமலும்,பாதுகாப்புக்காகவும் இந்த கண்ணாடி உபயோகமாகிறது... அதனால் இன்று வண்டியின் சீட் தைக்கவேண்டுமென கடைக்கு சென்றேன் அப்படியே இதையும் மாற்றுவோம் என கேட்டேன் ஒரிஜினல் 200 ரூபாய், டூப்ளிகேட் 160 என்கிறார்கள் பணத்தில் பெரிதாக வித்தியாசம் இல்லை என்பதால் 200 ரூபாய் கொடுத்து மாற்றிவிட்டேன் அதில் வெளியே வந்த ரப்பரையும் கடைக்காரர் சரி செய்து கொடுத்துவிட்டார் பயணமும் தெளிவாக அற்புதமாக இருந்தது.. வீட்டிற்கு வந்து "அப்பா இங்க பாரு ஹெல்மெட் கண்ணாடி மாத்திட்டேன்னு சொன்னேன் !!" எதுக்கு டா புதுசே வாங்கி இருக்கலாம்லனு கேட்டார்? இல்லப்பா இதுல இது மட்டும்தான் பிரச்சனை மத்தபடி ஹெல்மெட் அருமையா இருக்குனு சொன்னேன் சரினு சொன்னார்.. Vega பிராண்ட்டில் இந்த மாடல் 1000ரூ ஆகிறது எதற்கு தேவையில்லாமல் புதிய தலைக்கவசம் இதை சரி செய்துவிட்டேன் அருமையாக இருக்கிறது... இதே கதை தான் சீட...