முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

tamilblogger லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

அயலி Webseries எப்படி உள்ளது? பெண்கள் படிக்க தடையா! பார்ப்போம் தரமான சம்பவம்😲🛑🙏

அயலி என்னதான் நல்ல படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தை எப்போது முடித்து அடுத்த சோலியை பார்க்கலாம்  என்று தான் எப்போதும் தோன்றும்.சில படங்கள் தான் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாமே, அடுத்த பாகம் எடுத்தால் நல்லாருக்கும் என தோன்றும். அதே போல் தான் அயலியும் மிகவும் பிடித்திருந்தது.முதல் இது படம் அல்ல சீரிஸ் எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் இல்லை சீரிஸ் பார்க்கும் பழக்கமும் இல்லை.  அயலி மொத்தம் 8 பாகம்,கிட்டததட்ட 4 மணிநேரத்திற்கு மேல். ஆனால் எந்த ஒரு நேரத்திலும் என்னடா எப்படா முடியும், என்ன இந்த காட்சி இப்படி இருக்கு  என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஹீரோ இல்லை,சண்டைக்காட்சி,காதல் ,நம்ம ஊர் திரைப்படங்களில்,நாடங்கங்களில் வருவது போல் தேவையில்லாத ஆணி பாடல்கள் இல்லை. முழு நேரமும் நம்ம சொந்த ஊர்களில் நாம் இருந்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஒவ்வொரு காட்சியும் நடிப்பாக இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது. அயலி - அந்த ஊருக்குள் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து ஓடி விட்டார்களாம் அதனால் அந்த ஊர் எரிந்து நாசமாகியது என சொல்கிறார...

வார்த்தைகள் ஆக்கும், அழிக்கும்!!!

வார்த்தைகள் அழிக்கும்!! வார்த்தைகள் சீரழிக்கும்!! வார்த்தைகள் அவமானப்படுத்தும்!! வார்த்தைகள் அழ வைக்கும்!! வார்த்தைகள் கொள்ளும்!! வார்த்தைகள் சாகத் தூண்டும்!! வார்த்தைகள் காயங்கள் ஏற்படுத்தும்!! அதே வார்த்தைகள்..... வார்த்தைகள் உங்களை வளர்க்கும்!! வார்த்தைகள் உங்களை மகிழ்விக்கும்!! வார்த்தைகள் உங்களை பாராட்டும்!! வார்த்தைகள் உங்களை செழிப்பாக்கும்!! வார்த்தைகள் உங்களை பெருமையாக உணரச் செய்யும்!! வார்த்தைகள் உங்களை கொண்டாடும்!! வார்த்தைகள் உங்களை குளிர்விற்கும்!! வார்த்தைகள் உங்களை மெருகேற்றும்!! வார்த்தைகள் உங்களை அழகாக்கும்!! வார்த்தைகள் உங்களை அறிவாளி ஆக்கும்!! வார்த்தைகள் சாந்தப்படுத்தும்!! வார்த்தைகள் சமாதானம் செய்யும்!! வார்த்தைகள் உங்களை செதுக்கும்!! வார்த்தைகள் காயங்களை ஆற்றும்!! வார்த்தைகள் தன்னம்பிக்கை கொடுக்கும்!! வார்த்தைகள் வாழத் தூண்டும்!! வார்த்தைகள் சாதிக்க தூண்டும்!! அதே வார்த்தைகள்..... என்னென்ன செய்யும் என்பதை நீங்கள் சொல்லுங்கள்!? வார்த்தைக்கு மிகப்பெரும் சக்தி உண்டு அது நாம் மற்றவர்களுக்கு கொடுத்தாலும்,மற்றவர்கள் நமக்கு கொடுத்தாலும்,அவ்வளவு ஏன்...

பெரிசுகள் பரிதாபங்கள் ❗❗ செல்போன்ல டவுட்டு கிளியர் பன்னது குத்தமா😲😫

பெருசுகள் பரிதாபங்கள்😀 போனில் ஏதாவது சந்தேகம்,இவர்களுக்கு கால் செய்ய வேண்டும்,வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும்,படம் தரவிறக்கம் செய்யவேண்டும் அது இதுவென்று எத்தனை சந்தேகம் என்றாலும் நமக்கு தெரியவில்லை என்றாலும் கூகுள் அல்லது யூ டூயூப்பில் அல்லது வேறு யாரிடமோ கேட்டு கூட அவர்கள் கேட்ட விடயத்தை செய்து கொடுப்போம். நான் எப்போதும் செய்து கொடுப்பதைவிட, எப்படி செய்ய வேண்டுமென்பதை சுலபமாக சொல்லி கொடுத்துவிட்டால் அவர்களே அடுத்த முறை ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டிருக்காமல் செய்து விடுவார்கள்.சிலர் கற்றுக்கொள்ள கூட மாட்டார்கள் அது வேற கதை. எல்லாம் செய்து கொடுத்த பின்பு " டேய் தம்பி உன்கிட்ட போனை கொடுத்தது தப்பா போச்சு டா பார்ரா இது ஒர்க் ஆகவே  இல்லை" என நம்மேல் பாய வருவார்கள். எப்பா சாமி உங்களுக்கு செய்துகொடுத்தற்கு நம்மை செய்து விடுவார்கள்😫 எப்புற்ரா.....!  சமீபத்தில் ஒருவருக்கு போனில் டிவி சானல்கள் பார்க்க வேண்டும் என சொல்ல ,செயலியை தரவிறக்கம் செய்து கொடுத்தேன்.சில நிமிடங்களில் டேய் "என்னடா  கால் வருது ஆனா எந்த பெயரும் காட்ட மாட்டேங்குதுனு" சொல்ல அரை மணிநேரம...

avatar the way of water எப்படி?❗ ஒரு முறை பார்க்கலாமா - திரை சுமர்சனம்😫

Avatar The Way Of Water  (விமர்சனமாக கூட எடுத்துக்கொள்ளலாம்) ஏதாவது எழுத வேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் என்னத்த எழுதனு விட்டுவிடுவேன் ஆனால் இந்நேரம் ஆகியும் இதை நிச்சயம் எழுதுவதற்கு காரணம் உங்களின் மேல் உள்ள பாசம் நீங்களும் என்னைப் போல் அவஸ்தை பட வேண்டாமென்பதால்...... 2009ல் வெளியான அவதார் 1 எங்கள் மாமா வீட்டில் 3டி டிவியில் பார்த்தோம் நன்றாக தான் இருந்தது.இப்போதும் எனக்கு பெரிதாக இப்படம் செல்வதில் விருப்பமில்லை தம்பியும் ,நண்பனும் கேட்டதால் சென்றேன். அதுவே தாமதமாக தான் சென்றோம் நல்ல வேலை கொஞ்ச நேரம் தப்பித்தேன்😲. படத்தின் கருவே அவதார் தன் குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்,வனவாசியாக இருந்த அவர்கள் தன் குடும்பத்தை காப்பாற்ற கடல்வாசியாக மற்றொரு இனம் வாழும் தீவிற்கு சென்று அடைக்கலம் கேட்டு செல்கின்றனர். அங்கு அவர்களை ஏற்றுக்கொண்டார்களா? வில்லன் எப்படி இவர்களை கொள்ள முயற்சிக்கிறான்,யார் பிழைத்தார்கள்,உயிருடன் இருந்தார்கள் என்பது  க்ளைமாக்ஸ்.   ஆரம்பம் முதல் படம் முடியும் வரை "அய் யய்யோ எப்படா படம் முடியும்" ஏண்டா இப்படி கொல்றீ...

போனால் வராது பொழுது போனால் கிடைக்காது | உயிராக இருந்தாலும் ,பொருளாக இருந்தாலும்!!!!

சில விடயங்கள் போனால் வராது,பொழுது போனால் கிடைக்காது!! அது ஒரு உறவாக,பொருளாக இருக்கலாம். பொருள் என்றால் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கும்,அதை சரியாக சேவை(service) செய்யாமல் உபயோகப்படுத்திக்கொண்டே இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கர் செய்யும் அடுத்து வேலை செய்யாது அல்லது கவனமாக வைத்திருக்காமல் எங்காவது தவற விட்டுக்குடிப்போம்.  அடுத்து என்ன செய்வோம் "இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்,சோம்பேறித்தனம் பார்க்காமல் ஒழுங்கா சர்வீஸ் செய்திருக்கலாம்" என அழுது, புலம்ப வேண்டியது. ஒரு பொருளுக்கே இப்படினா நமக்கு பிடித்த,நம்மை பிடித்த,நமக்காக வாழும் உயிரை நாம் எப்படி அன்பை பகிர வேண்டும்,பார்த்துக்கொள்ள வேண்டும்,அவர்களுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுடன் நேரத்தை செலவிட்டு நீங்கள் அவர்களுடன் இருக்கிறீர்கள் என உணர்த்த/உணர வேண்டும்.சின்ன சண்டை தான்  யார் மன்னிப்பு கேட்பது என தொடங்கி பெரிய விரிசலாகி விடும். அதோடு வாழ்வில் அதே உறவு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.   ஒரு சின்ன சாரி தான் அதை கேட்பதற்கு நமக்குள் இருக்கும் அத்தனை உணர்வுகளையும் ஒதுக்கிவிட்டு தான் கேட்க வேண்டும்...

தமிழ் படத்தில் ஏன் மற்ற மொழிகளை திணிக்கன்றனர்? இதெல்லாம் தேவையில்லாத வேலை!!!

இதை பெரும்பாலும் யாரும் கவனிக்க மாட்டார்கள் ஏனெனில் படத்தை படமாக ,பொழுதுபோக்கு போக்கை பொழுது போக்காக பார்ப்பது தானே நம் பழக்கம் ஆனால் நாம் அதிகம் விரும்பும் சினிமா,நாடகம்,குழந்தைகள் பார்க்கும் கார்டூன்ஸ் போன்றவற்றின் மூலம் தான் நம் மனதில் எதை திணிக்க நினைக்கிறார்களோ அதை சிறு வயது முதலே சிறப்பாக திட்டமிட்டு செய்கின்றனர். நம் தமிழ்நாட்டில்,நம் அக்கம் பக்கத்தில் மற்ற இனத்தினரும் ஒன்றாக தான் நண்பர்களாக வாழ்கிறோம்.ஆனால் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ஏன் தமிழ் படத்திற்குள் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என ஒரு குடும்பத்தை அறிமுகம் செய்து அதிலும் மேலே தமிழ் கூட டப் செய்யாமல் மற்ற மொழியிலையே பேசுகின்றனர். ஏன் கீழே ஆங்கிலத்தில் கூட என்ன பேசுகிறார்கள் என்பதை போடுவதில்லை. இதே போல் மற்ற மாநில திரையுலகில் செய்தால் படக்குழுவினருக்கு செருப்படி விழும். ஒரு படம் என்பது எந்த மொழியில் எந்த மாநிலத்தில் வெளியிடுகிறார்களோ அந்த மொழியில் முழுவதும் இருப்பது தானே சரி. என்ன கூற நினைக்கிறார்கள் என நினைத்தால் தமிழர்களை விட நாங்கள் அதிகம் வசிக்கிறோம்,நாங்கள் பெரும்பாண்மை,வீட்டில் மட்டும் எங்கள் தாய் மொழியை பேசிவிட்ட...

மறைந்த பின்பு அழுவதை விட வாழும்போது நேசியுங்கள் !!!

இங்கே முக்கால்வாசி பேர் ஒருவர் அருகில் இருக்கும் போதோ,உயிருடன் இருக்கும்போதோ கோபம், ஈகோ போன்ற பல்வேறு காரணிகளால் நம் அன்பிற்குரியவரை கண்டுகொள்ளாமல் பேசாமல் கடந்து சென்று கொண்டே இருக்கிறோம். சரி தான் அனைத்தையும் தாண்டி ஏதோ ஒன்று நம்மை தடுக்கிறது ஆனால் அனைத்தையும் தகர்த்தெறிந்து 5 4 3  2 1 என எண்ணிவிட்டு நேராக சென்று  பேசிவிடுங்கள்,அழுது விடுங்கள், அணைத்து விடுங்கள். நன்றாக இருக்கும் போது ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்துவிட்டு ,உடல் நிலையில் சரியில்லாத போது ,எழுந்து நடக்க,பேச முடியாத நிலையில் இருக்கும்போது எங்கிருந்து தான் உணர்ச்சி நமக்கெல்லாம் பெருக்கெடுத்து வருகிறதோ தெரியவில்லை. அப்போதாவது வருகிறதே 😏 அப்போதும் கல் நெஞ்சை சுமந்து நடமாடினால் நாம் நடை பிணம் தான். சில  சூழ்நிலைகள் இதை ஆழமாக உணர வைக்கும். ஒருவர் உயிரோடு இருக்கும்போதே பேசுங்கள்,அவர்கள் பேசுவதை கேளுங்கள்,பாராட்டுங்கள்,கொண்டாடுங்கள் அவர்கள் உங்களோடு இருப்பதை உணருங்கள் எதிரில் இருப்பவர் எவ்வளவு விடாப்பிடியாக இருந்தாலும் நம் மேல் தவறே இல்லையென்றாலும் அவர் நமக்கு வேண்டுமெனில்,அவருக்கு நாம் வ...

என் 100 நாள் ஓட்ட சவாலின் போது ஓர் நாள் இரவில் ஏற்பட்ட சம்பவங்கள்,சவால்கள்!!!

58/ 100 Days of Running - HDOR |10k❤️🏃🏻‍♂️ இந்த  ஓட்டம் வாழ்வில் மறக்க முடியாதவை!! (27.06.2022) முடிந்த வரை ஞாயிற்றுக்கிழமை காலையில் ஓட்டத்தை முடித்து விடுவேன்.ஏனெனில்,அன்று நெடுதூர ஓட்டம் அதுமட்டுமில்லாமல் காலை முடித்துவிட்டால் அதோடு செவ்வாய்க்கிழமை தான் ஓட்டம்,திங்கள்கிழமை ஓட்டம் இருக்காது ரெஸ்ட் டே.😍 உறவினர் வீட்டிற்கு வந்தேன்.காலை ஓடலாம் என திட்டம் வைத்திருந்தேன் ஆனால் அங்கே காலை ஏலகிரி மலைக்கு செல்லலாம் என சொல்ல.காலை பைக்கிள் சென்றோம், அங்கு @funderapark  வெவேறு நாட்டு பறவைகள், முயல்கள் அதுஇதுவேன்று பார்த்து முடித்துவிட்டு. பின்பு அங்கிருந்து நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப,சென்று சேர மணி 8.30 ஆகி விட்டது சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஓடலாம் என உள்ளுக்குள் தோன்றினாலும் , கொஞ்சம் படுத்துவிட்டால் அசதியில் உறங்கிவிடுவோம் என பிரெஷ் ஆகி ட்ரெட்மில்லை ஆன் செய்து ஓடத்துவங்கினால் அது சரியாக வேலை செய்யவில்லை. ஷப்பா🤧 ஏற்கனவே நாள் முழுக்க பயணம் 300k வண்டி ஓட்டி உடல் அசதி.சரினு வெளியே கிளம்பினேன் அங்கே எனக்கு அவ்வளவாக வழி தெரியாது கேட்டு கேட்ட...