சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
இங்கே முக்கால்வாசி பேர் ஒருவர் அருகில் இருக்கும் போதோ,உயிருடன் இருக்கும்போதோ கோபம், ஈகோ போன்ற பல்வேறு காரணிகளால் நம் அன்பிற்குரியவரை கண்டுகொள்ளாமல் பேசாமல் கடந்து சென்று கொண்டே இருக்கிறோம். சரி தான் அனைத்தையும் தாண்டி ஏதோ ஒன்று நம்மை தடுக்கிறது ஆனால் அனைத்தையும் தகர்த்தெறிந்து 5 4 3 2 1 என எண்ணிவிட்டு நேராக சென்று பேசிவிடுங்கள்,அழுது விடுங்கள், அணைத்து விடுங்கள்.
நன்றாக இருக்கும் போது ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்துவிட்டு ,உடல் நிலையில் சரியில்லாத போது ,எழுந்து நடக்க,பேச முடியாத நிலையில் இருக்கும்போது எங்கிருந்து தான் உணர்ச்சி நமக்கெல்லாம் பெருக்கெடுத்து வருகிறதோ தெரியவில்லை. அப்போதாவது வருகிறதே 😏 அப்போதும் கல் நெஞ்சை சுமந்து நடமாடினால் நாம் நடை பிணம் தான்.
சில சூழ்நிலைகள் இதை ஆழமாக உணர வைக்கும்.
ஒருவர் உயிரோடு இருக்கும்போதே பேசுங்கள்,அவர்கள் பேசுவதை கேளுங்கள்,பாராட்டுங்கள்,கொண்டாடுங்கள் அவர்கள் உங்களோடு இருப்பதை உணருங்கள் எதிரில் இருப்பவர் எவ்வளவு விடாப்பிடியாக இருந்தாலும் நம் மேல் தவறே இல்லையென்றாலும் அவர் நமக்கு வேண்டுமெனில்,அவருக்கு நாம் வேண்டுமெனில் அனைத்தையும் உதறிவிட்டு பேசுங்கள் ஒரே நொடியில் எல்லாம் சுக்கு நூறாக உடைந்துவிடும். ஏன் நாம் இத்தனை நாள் இந்த உறவிடமிருந்து விலகி இருந்தோம் என நம் மனதே நம்மை தண்டிக்க தோன்றும்.
இவ்வுலகில் நீங்கள் நேசிக்கும் நபர் இல்லையெனில் அது நரக வேதனை தான்,நாம் தொடர்பில் இருந்தாலும் பரவாயில்லை,இல்லையெனில் "ச்சே இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டோமே, நாம் இப்படி பேசி இருக்கக் கூடாது,நாம கூட இருந்திருந்தால் இப்படி ஆகிருக்காதுன்னு எவ்வளவு கதறினாலும் பிரயோஜனம் இல்லை "
மறந்த பின்பு அழுவதை விட
வாழும்போது நேசிப்போம் !!
- அசோக் குமார் சுதர்சனம்
#tamilblogger #tamilwriters #TamilArticles #love #sorry #blogger #akwriteஸ்
வுண்மை
பதிலளிநீக்குதான்
நன்றி
பதிலளிநீக்கு