முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

செலவுகளை குறைப்பது எப்படி?

பல மாதங்களாகவே தலைக்கவசத்தில் இருக்கும் கண்ணாடியை மாற்றவேண்டுமென்றிருந்தேன் முழுவதும் சேதமாகி கீறளுடன் இருந்ததால் சாலை தெளிவாக தெரிவதில்லை, மழை பெய்யும் வேளையில் முகத்தில் தண்ணீர் அதிகம் அடிக்கிறது,முக்கியமாக தூசிகள் முகத்தில் படாமலும்,பாதுகாப்புக்காகவும் இந்த கண்ணாடி உபயோகமாகிறது...

அதனால் இன்று வண்டியின் சீட் தைக்கவேண்டுமென கடைக்கு சென்றேன் அப்படியே இதையும் மாற்றுவோம் என கேட்டேன் ஒரிஜினல் 200 ரூபாய், டூப்ளிகேட் 160 என்கிறார்கள் பணத்தில் பெரிதாக வித்தியாசம் இல்லை என்பதால் 200 ரூபாய் கொடுத்து மாற்றிவிட்டேன் அதில் வெளியே வந்த ரப்பரையும் கடைக்காரர் சரி செய்து கொடுத்துவிட்டார் பயணமும் தெளிவாக அற்புதமாக இருந்தது..

வீட்டிற்கு வந்து "அப்பா இங்க பாரு ஹெல்மெட் கண்ணாடி மாத்திட்டேன்னு சொன்னேன் !!"
எதுக்கு டா புதுசே வாங்கி இருக்கலாம்லனு கேட்டார்?
இல்லப்பா இதுல இது மட்டும்தான் பிரச்சனை மத்தபடி ஹெல்மெட் அருமையா இருக்குனு சொன்னேன் சரினு சொன்னார்..

Vega பிராண்ட்டில் இந்த மாடல் 1000ரூ ஆகிறது எதற்கு தேவையில்லாமல் புதிய தலைக்கவசம் இதை சரி செய்துவிட்டேன் அருமையாக இருக்கிறது...

இதே  கதை தான் சீட் புதியது மாற்றுவதற்கு பதில்
அதில் இருக்கும் கவர் மட்டும் மாற்றுகிறார்கள்..

புதுசா போட்டா நல்லா உழைக்கும்லனு கேட்டா இதுவும் புதுசு தானே....!!😀

நம்மிடம் இருக்கும் பொருட்கள் சிறு கோளாறு கொடுத்தால் அப்போதே சரி செய்துவிட்டால் நல்லது இல்லையெனில் பெரும் செலவு ஆகிவிடும்..

தேவையற்ற செலவுகளை செய்தால் பணமும் நட்டம்
பழைய பொருள் வீணாகிறது
புதியது தேவையில்லாமல் உள்ளெ நுழைகிறது....

#finicialfreedom #investment மினிமலிசம் #minimalismtamil #minimalist

கருத்துகள்

கருத்துரையிடுக

அன்பும் நன்றியும்♥️

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...