முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

விபச்சாரம்

விபச்சாரம் என்றால் என்ன?

இந்த வார்த்தையைப் பார்த்தப் பிறகு உடனே ஓட வேண்டாம் கொஞ்சம் பொறுமையா படிக்கலாம் வாங்க!!!

இப்பதிவின் நோக்கம் விபச்சாரத்திற்கு ஆதரவு அளிப்பது இல்லை , அனைவருக்கும் இவற்றை பற்றி தெரிய வேண்டுமென பதிவிட்டேன் முக்கியாக குழந்தைகளுக்கு கற்பிக்க....

உங்களை மாதிரி தான் எனக்கும் தெரியாது,கண்ணா மூச்சி விளையாடுன வயதில்...

எனக்கு எப்போ இது நிகழ்ததுன்னு சரியா நினைவில்லை,ஆனா என்ன நிகழ் ததுன்னு நல்லாவே நினைவிருக்கு, சிறு வயதில்  பள்ளி விடுமுறைன்னா தாத்தா,பாட்டி வீட்டுக்கு போவோம், ஒரு நாள் இரவு தொலைக்காட்சியில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருக்க அதில் விபச்சாரம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி ஏதோ வசனம் வந்தது எனக்கு ஒன்னுமே புரியல..

"தாத்தா விபச்சாரம்னா  என்னனு கேட்டேன்!!"

"அதுவா,ஒன்னுமில்லனு சொல்ல"

"அட சொல்லு தாத்தா"

"நீ சின்ன பையன் உன்கிட்ட சொல்ல கூடாதுனு" சொல்லிட்டு தூங்கிட்டாரு..

"எனக்கோ என்னனு தெரியல,ஆனா அதுல ஏதோ ஒன்னு இருக்குனு மட்டும் தோணுச்சு,மத்தவங்க கிட்ட கேட்கவும் ஒரு விதமான பயம்,பதட்டம்"

சிலரிடம் கேட்டேன் யாருமே பதில் கொடுத்தப் பாடில்லை சரினு காலப்போக்கில் காளான் போல் மாங்குமாங்குன்னு நல்லா வளர வளர தான் படத்துல வர வசனம்,பெரியவங்க பேசுகிற விஷயத்துக்கெல்லாம் அர்த்தம் புரிய தொடங்கியது"

ஒன்னு மட்டும் புரிஞ்சது இது பேச/கற்பிக்க கூடாத தலைப்புன்னு எழுதப்படாத விதினு ஒதுக்கி வச்சிட்டங்க,
கொலை ,கொள்ளை,கற்பழிப்பு,வெட்டு ,குத்துன்னு பேசிக்கிற/காட்டிக்கிற மக்களோ,ஊடகமோ இதை ஓர் அறிவாக தெரியப்படுத்த முயற்சிகள் எடுத்ததா இல்லையா என்று கூட தெரியவில்லை, சிலர் மட்டுமே இதை ஓர் பாடமாக மாற்ற வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்,

விபச்சாரம்??
தன்னுடைய உடல் தேவை/உயிர் வாழ/ குடும்பத்திற்கு உணவளிக்க/வசதியில்லாதவர்கள் இத்தொழிலுக்கு வந்து தன் உடலை விற்று பணத்தை பெற்றுக்கொள்கின்றனர், ஈஸியா சொல்லிட்டு போயிடலாம் அவ ஒரு ஐ***ம் ஜாலியா இருக்கா இந்த தொழில்ல இருக்கானு..

அதில் படும் வலியும்,வேதனையும் கொஞ்ச நஞ்சமல்ல, பெண் தான் என்றல்ல....! இப்போது ஆண்களும் இந்தத் தொழிலில் இருக்கின்றனர் என்பது சிலருக்கு தெரிந்திருந்தாலும் பலருக்கு தெரியாத உண்மை..

ஆண் என்றால் playboyனு கெத்தா சொல்லுற இதே நாற வாய்கள் தான் பெண்ணை ஐ***ம்னு சொல்லுறாங்க....

இதைப் பற்றி பேசும்போது இன்னொரு கேள்வியும் முன்வருது ? ஏன் இப்படி உடம்பை விற்றுதான் பிழைக்கணுமா வேற வழியே இல்லையா..?

நல்ல கேள்வி..!!!!!

பண்ணலாம் இவங்களுக்கு சந்தர்ப்ப,சூழ்நிலை இந்த தொழில்ல கொண்டு வந்து விட்டுடிச்சு, பிச்சை எடுக்குறவங்க எப்படி வேலை செய்து சம்பாதிக்கலாம், ஆனால் அவர்கள் பிச்சை தானே எடுக்கின்றனர் ,அதே போல் தான் இவர்களும்.......!

கற்பழிப்புக்கெல்லாம் காரணம், சரியான வளர்ப்பு இருந்தாலும் அவன் சேர்க்கை மற்றும் அவன் புத்தி எவ்வழியில் செல்கிறதோ அதுவே காரணி இதற்கு பெற்றவர்கள் மட்டுமே பொறுப்பாகி விட முடியாது, இன்னொரு காரணம் sex பற்றிய போதிய அறிவில்லாததும் தான்..!

இப்படி பேசவே கூடாதுனு கூச்சப்படும் மாதவிடாய்,gay, lesbian, அரவாணி பற்றியெல்லாம் குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைப்பது நம் பொறுப்பே ,பல காலம் முடங்கிக் கொண்டே இருந்த இடம் மறைந்து,,இப்போது இத்தலைமுறையில்  சற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது..

இதென்ன பிஞ்சிலயே பழுத்துடுச்சுன்னு தோன்றினாலும் எனக்கு கவலையில்லை தோன்றியது எழுதினேன், ஏதாவது தவறு இருந்தாலும் மன்னிக்கவும்!

இப்பதிவைப் படித்தால் உங்களின் கருத்துகளையும் பகிருங்கள் ,நன்றி

- அசோக் குமார் சுதர்சனம்

#PROSTUTION
#SEXEDUCATION
#RANDOMSHARES


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...