முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Respect லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

பெற்றோர்களே சேமிப்பு ஏதேனும் வைத்துள்ளீர்களா? பென்ஷன் திட்டம் பற்றி யோசித்தீர்களா?

சேமிப்பு,முதலீடு என்பது சிறுவயது முதல் பெற்றோர்களை பார்த்து நாம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். முன்பெல்லாம் ஒன்று வாங்க வேண்டும் என்று யோசித்தால் கூட ஆயிரம் கேள்விகள் கேட்டு ஆமாம்ல இது இப்போ தேவையில்லைனு அந்த பணத்தை வேறு விழியத்திற்கோ சேமிப்பிற்கோ ஒதுக்கி விடுவார்கள். உண்டியல் பழக்கமும், அரிசியிலும்,அஞ்சறை பெட்டியிலும் பணம் ஒளிந்து கொண்டு தேவைக்கு வெளியே வந்தது இப்போது அந்த பழக்கமும் மறைந்து வருகிறது. பெற்றோரை பார்த்து தான் குழந்தைகள் வளரும் கற்றுக்கொள்ளும், நாம் தான் கற்பிக்கவும் வேண்டும். நூற்றில் முக்கால்வாசி பெற்றோர்கள் இன்னைக்கு என் குழந்தைக்கு தேவையானதை நிறைவேற்றி விட்டேன் என ஆறுதல் அடைந்து கொள்கிறார்கள்.ஆனால் எந்த சேமிப்பும்,முதலீடும் செய்வதில்லை மிஞ்சி மிஞ்சி போனால் தங்கத்தை வாங்கி பீரோவிலும்,இடத்தை வாங்கி போடுவதை முதலீடாக கருதுகின்றனர்.இன்னும் பலர் அதை கூட செய்வதில்லை. கடனை மட்டுமே வாங்கி குடும்பத்தை நடத்தி இறுதியில் அந்த கடனை தன் பிள்ளைகளின்  தலையில் கட்டுவதே இப்போது அதிகம் நடக்கிறது. அவன் சம்பாதிக்கும் பணத்தில் ஆசையாக செலவு செய்ய முடியாது ,சேமிக்க முடியாது, க...

நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார்!!

தலைப்பை பார்த்த உடன் பதற வேண்டாம்,நாம் தொலைபேசியில் அழைக்கும் நபர்  நம் அழைப்பை ஏற்க வில்லையென்றால் இந்த வசனம் தான் ஒலிக்கும்.இதனால் எவ்வளவோ குடும்பத்தில்,உறவில் மோதலும்,பிரிவும் நடந்துள்ளது,ஏன் கொலை வரை கூட சென்றுள்ளது.இப்போது இதை "நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் காத்திருக்கவும் அல்லது பின்னர் அழைக்கவும்" என மாற்றி விட்டார்கள். நாம் ஒருவருக்கு கால் செய்தால் ஏற்க மாட்டார்கள் அல்லது துண்டிப்பார்கள்,நாமோ சரி ஏதோ வேலையில் இருப்பார்கள் அல்லது வாகனம் ஓட்டிக் கொண்டிருப்பார்கள் நம் அழைப்பை பார்த்த பின்  பேசுவார்கள் என காத்திருப்போம்!! ஆனால் அப்படி ஒன்று நடக்கவே நடக்காது.   இதற்கு காரணம் : 1.உங்களிடம் பேச விருப்பம் இல்லாமல் புறக்கணிக்கலாம், 2.பேசும் மனநிலை இல்லாமல் இருக்கலாம் அல்லது பின்பு பேசிக்கொள்ளலாம் என இருக்கும் , எல்லாருக்கும் ஒரே சூழ்நிலை ,ஒரே மனநிலை எப்போதும் இருக்காது அல்லவா!!! ஆனால் ஒருவர் அழைத்தால் திருப்பி அழைப்பது ஒரு அடிப்படை நாகரீகம், சிறந்த பழக்கமும் கூட,சரி  வேலை,சூழ்நிலை ஓகே ஆனால் ஒரு கஷ்டம் (Custom) மெஸ்ஸேஜ்  ...