சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
முன்பெல்லாம் ஒன்று வாங்க வேண்டும் என்று யோசித்தால் கூட ஆயிரம் கேள்விகள் கேட்டு ஆமாம்ல இது இப்போ தேவையில்லைனு அந்த பணத்தை வேறு விழியத்திற்கோ சேமிப்பிற்கோ ஒதுக்கி விடுவார்கள்.
உண்டியல் பழக்கமும், அரிசியிலும்,அஞ்சறை பெட்டியிலும் பணம் ஒளிந்து கொண்டு தேவைக்கு வெளியே வந்தது இப்போது அந்த பழக்கமும் மறைந்து வருகிறது.
பெற்றோரை பார்த்து தான் குழந்தைகள் வளரும் கற்றுக்கொள்ளும், நாம் தான் கற்பிக்கவும் வேண்டும்.
நூற்றில் முக்கால்வாசி பெற்றோர்கள் இன்னைக்கு என் குழந்தைக்கு தேவையானதை நிறைவேற்றி விட்டேன் என ஆறுதல் அடைந்து கொள்கிறார்கள்.ஆனால் எந்த சேமிப்பும்,முதலீடும் செய்வதில்லை மிஞ்சி மிஞ்சி போனால் தங்கத்தை வாங்கி பீரோவிலும்,இடத்தை வாங்கி போடுவதை முதலீடாக கருதுகின்றனர்.இன்னும் பலர் அதை கூட செய்வதில்லை.
கடனை மட்டுமே வாங்கி குடும்பத்தை நடத்தி இறுதியில் அந்த கடனை தன் பிள்ளைகளின் தலையில் கட்டுவதே இப்போது அதிகம் நடக்கிறது.
அவன் சம்பாதிக்கும் பணத்தில் ஆசையாக செலவு செய்ய முடியாது ,சேமிக்க முடியாது, கடன்,மாதத் தவணை (EMI) கட்டியே எல்லாம் ரைந்துபோகும்.
உங்களுக்கு 30,40,50 எந்த வயதானாலும் சரி இப்பொதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை உங்களுக்கு ஏற்ற சிறந்த முதலீடாக பார்த்து பணம் போடவும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பயன்படும்.
ஏற்கனவே உங்களுக்கும் குடும்பத்திற்கும் லைப் இன்சூரன்ஸ், மெடிக்கல் இன்சூரன்ஸ் இருப்பது சிறப்பு.அரசு பணியாளராக இருந்தால் பென்ஷன் வரும், இல்லையெனில் நீங்கள் ஓய்வு பெற்ற பின் மாதா மாதாம் பணம் வருவது போன்ற பென்ஷன் திட்டங்கள் உள்ளது ,அதை தேர்வு செய்யுங்கள்.
இப்போ நன்றாக இருக்கிறீர்கள் 60 வயதிற்கு மேல் உடல் கோளாறு செய்ய ஆரம்பிக்கும்,சரியாக வேலை செய்ய முடியாது,மெல்ல மெல்ல குறையும் மரியாதை என அடுக்கி கொண்டே போகலாம்.
என்ன தான் பிள்ளை ,குட்டினு இருந்தாலும் ,சொத்து இருந்தாலும் உங்களுக்கு என வருமானம் வந்தால் மட்டுமே உங்கள் மேல் மரியாதையும், அக்கறையும் நீடிக்கும். இதுதான் நிதர்சனமும் கூட.
உங்கள் சேமிப்பும் முதலீடும் உங்களுக்கொ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ யாருக்காவது உதவும்,நீங்கள் நினைத்தை எந்த வித குற்ற உணர்வும்,பயமும் இல்லாமல் செய்ய முடியும்.
வாழ்க்கை முழுக்க வேலை செய்து கொண்டிருந்தால் எப்போது வாழ்வீர்கள்,மறுஜெனமம் இருக்கிறதா என தெரியாது, இந்த ஜென்மத்தை வாழுங்கள்!!!!
நம் இறப்பு மகிழ்ச்சியானதாக இருக்கட்டும்!!
யோசிக்க நேரமில்லை,இது தான் சரியான நேரம் ,விழித்துக்கொள்ளுங்கள்!!
சேமிப்போம்!!!
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக
அன்பும் நன்றியும்♥️