முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

லாக்டவுனில் செய்ய வேண்டிய சிறந்த பழக்கங்கள் என்ன?

மறதி மனிதனின் இயல்ப  பலவற்றை படிப்பது மட்டுமல்லாமல் செயல் படுத்தினால் மட்டுமே வாழ்க்கை உயரும் நாமும் உயர்வோம்.

அனைவருக்கும் 24 மணிநேரம் தான் ,நேரம் இல்லை என கூறுபவர்கள் இதிலிருந்து தப்பிக்க கூறிகள் வழிகள் தான் இந்த வெட்டி வார்த்தைகள். நமக்கான நேரத்தை நாம் தான் ஒதுக்க வேண்டும்.

1.உடற்பயிற்சி

எந்தவித சாக்கு போக்கும் இல்லாமல் குறைந்தபட்சம் 20 நிமிடவாது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்யுங்கள் அது ஓட்டம்,ஆட்டம்,நடை எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டும்.

இதனால் உடலும் சரியான எடையில் கச்சிதமாக இருக்கும்,மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்,மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கும்.

2.புத்தகம் வாசிப்பது

இவ்வுலகில் வெற்றியடைந்தவர்கள் அனைவரும் புத்தகம் வாசிப்பது அவர்களின் பழக்கம்,கற்றல் வாழ்க்கை முழுக்க இருந்து கொண்டே இருக்கும்.

புத்தகம் வாசிப்பதினால் புதிய விழியங்களை கற்றுக்கொள்ளலாம்,புத்தகம் நம்மை ஊக்குவிக்கும், புத்தகம் பல சிந்தனைகளை நமக்குள் கொண்டு வரும்,நமக்கென ஒரு உலகத்தை புத்தகத்தில் காணலாம்.

சற்று கடியான காரியம் தான் ஆனால் சரியான காரியங்கள் தொடக்கத்தில் கொஞ்சம் கசக்கவே செய்யும்,பிறகு இனிமும் முயற்சி செய்து பார்க்கலாமே.

முக்கியமாக சுய மேம்பாடு பற்றிய புத்தகங்கள் படிப்பது  வெகு சிறப்பு.

3.உங்கள் திறமைகளை வளர்ந்து கொள்ளுங்கள்

உங்களுக்கென எதில் அதிகம் விருப்பமோ,எது நன்றாக வருமோ ,எதை சிறு வயது முதல் செய்ய வேண்டும் என நினைத்து ஆனால் நேரம் இல்லை என சொல்லி செய்யாமல் இருந்தீர்களோ அதை செய்யுங்கள்,அதில் உங்கள் திறமைகளை வளர்ந்து கொள்ளுங்கள், கற்றுக்கொள்ள நிறைய தளங்கள்,இலவச கோர்ஸ்கள் உள்ளது கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் திறனை வைத்து பணம் சம்பாதிக்க முடியும்.

4.பணம் சம்பாதிக்கும் வழிகளை அறியுங்கள்

இக்காலத்தில் பணம் சம்பாதிக்க வழிகள் குவிந்து கிடக்கிறது அதில் எந்த ஐயமும் இருக்காது என நினைக்கிறேன்,வாழ்க்கை நடத்த ஒரு வருமானம் போதாது, வேறு வழியில் ஆன்லைனில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை கற்று பணம் ஈட்டுங்கள் நிறைய வழி உள்ளது blog, affiliate மார்க்கெட்டிங்,யூ ட்யூப் இன்னும் பல.

5.உங்கள் இலக்கில் அடுத்து சென்ன செய்யலாம் என்பதை எழுதுங்கள்.

எப்போதெல்லாம் போர் அடிக்கிறது என தோன்றினாலும் அப்போது பேப்பர் பென் எடுத்து அடுத்து என்ன செய்யலாம் என்பதை நோட்ஸ் போல் எழுதி இலக்கை நோக்கி சிறு சிறு காரியங்களை செய்யுங்கள்.அதே போல் இந்த வருடத்தின் இலக்கையும் எழுதுங்கள்.

6.தியானம்

சரி சரி நீங்கள் சலித்துக்கொள்வது என்னால் உணர முடிகிறது,தியானம் எப்படி செய்ய வேண்டும் என தெரிய யூ ட்யூபில் பார்த்து பயற்சி செய்து பாருங்கள்,அதுவும் முடியாது என்பவர்க்ள் ஒரு 10 நிமிடம் எதுவும் செய்யயமல் அமைதியாக அமருங்கள் போதும்,மனமோ லேசாகும்,தெளிவு பெரும்.

நேரத்தை ஓட்ட வேண்டுமென்றால் எப்படி எப்படியோ ஓட்டலாம் படம் பார்த்து,கேம் விளையாடுவது,அரட்டை அடிப்பது,ஆனால் வாழ்வில் முன்னேற வேண்டும் உங்கள் இலக்கை அடைய வேண்டும் என்றால் இதையெல்லாம் செய்து தான் ஆக வேண்டும்!!

உங்கள் நேரம் பொன்னானது அதை ஒழுங்காக பயன்படுத்துங்கள்!!!

நன்றி♥️

கருத்துகள்

கருத்துரையிடுக

அன்பும் நன்றியும்♥️

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

அயலி Webseries எப்படி உள்ளது? பெண்கள் படிக்க தடையா! பார்ப்போம் தரமான சம்பவம்😲🛑🙏

அயலி என்னதான் நல்ல படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தை எப்போது முடித்து அடுத்த சோலியை பார்க்கலாம்  என்று தான் எப்போதும் தோன்றும்.சில படங்கள் தான் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாமே, அடுத்த பாகம் எடுத்தால் நல்லாருக்கும் என தோன்றும். அதே போல் தான் அயலியும் மிகவும் பிடித்திருந்தது.முதல் இது படம் அல்ல சீரிஸ் எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் இல்லை சீரிஸ் பார்க்கும் பழக்கமும் இல்லை.  அயலி மொத்தம் 8 பாகம்,கிட்டததட்ட 4 மணிநேரத்திற்கு மேல். ஆனால் எந்த ஒரு நேரத்திலும் என்னடா எப்படா முடியும், என்ன இந்த காட்சி இப்படி இருக்கு  என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஹீரோ இல்லை,சண்டைக்காட்சி,காதல் ,நம்ம ஊர் திரைப்படங்களில்,நாடங்கங்களில் வருவது போல் தேவையில்லாத ஆணி பாடல்கள் இல்லை. முழு நேரமும் நம்ம சொந்த ஊர்களில் நாம் இருந்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஒவ்வொரு காட்சியும் நடிப்பாக இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது. அயலி - அந்த ஊருக்குள் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து ஓடி விட்டார்களாம் அதனால் அந்த ஊர் எரிந்து நாசமாகியது என சொல்கிறார...