முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

அயலி Webseries எப்படி உள்ளது? பெண்கள் படிக்க தடையா! பார்ப்போம் தரமான சம்பவம்😲🛑🙏

அயலி

என்னதான் நல்ல படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தை எப்போது முடித்து அடுத்த சோலியை பார்க்கலாம்  என்று தான் எப்போதும் தோன்றும்.சில படங்கள் தான் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாமே, அடுத்த பாகம் எடுத்தால் நல்லாருக்கும் என தோன்றும்.

அதே போல் தான் அயலியும் மிகவும் பிடித்திருந்தது.முதல் இது படம் அல்ல சீரிஸ் எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் இல்லை சீரிஸ் பார்க்கும் பழக்கமும் இல்லை.

 அயலி மொத்தம் 8 பாகம்,கிட்டததட்ட 4 மணிநேரத்திற்கு மேல். ஆனால் எந்த ஒரு நேரத்திலும் என்னடா எப்படா முடியும், என்ன இந்த காட்சி இப்படி இருக்கு  என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஹீரோ இல்லை,சண்டைக்காட்சி,காதல் ,நம்ம ஊர் திரைப்படங்களில்,நாடங்கங்களில் வருவது போல் தேவையில்லாத ஆணி பாடல்கள் இல்லை.

முழு நேரமும் நம்ம சொந்த ஊர்களில் நாம் இருந்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஒவ்வொரு காட்சியும் நடிப்பாக இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது.

அயலி - அந்த ஊருக்குள் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து ஓடி விட்டார்களாம் அதனால் அந்த ஊர் எரிந்து நாசமாகியது என சொல்கிறார்கள்.அதன்பின் ஊர் மக்கள் அனைவரும் வேறு இடத்திற்கு செல்ல அங்கு அயலிய மக்களை வரவேற்கிறது. இதுதான் நம்ம ஊர் என அங்கேயே மக்கள் வாழ்கின்றனர்.

அங்கு இதுதான் நம்ம கலாச்சாரம் ,பண்பாடு என பெண்களை வைத்தது ஊரையும்,அனைவரையும் ஆட்சி செயகின்றனர். அது என்னெவெனில் " "
பெண்கள் வயது வந்தபின் பள்ளிக்கூடம் செல்லக் கூடாது, உடனே திருமணம் முடித்து விடுவார்கள் ,காலம் காலமாய் இது நடந்துவருகிறது ,இதனால் இதுவரை 9ம் வகுப்பிற்கு மேல் எந்த பெண்ணும் தாண்டியதில்லை".


பள்ளி முதல்வர் தான் இவற்றை கேள்வி கேட்கிறார்,மாற்ற நினைக்கிறார் முடியவில்லை.ஆனாலும் பள்ளியில் கருப்பு பலகை வைத்து பள்ளியில் முதலிடம் வரும் மாணவர்களின் பெயர் இதில் வரும் என கூறினார்.
மற்ற பெண் பிள்ளைகள் ஆசை மட்டும் தான் பட்டார்கள்,ஆனால் தமிழ்ச்செல்வி மட்டும் தான் கனவு கண்டால்,அடைய நினைத்தால் அவள் மட்டும்  கேள்வி கேட்டார்,மாற்ற நினைத்தாள்,10ஆம் வகுப்பு செல்ல துடித்தாள்,மருத்துவர் ஆக கனவு கண்டால்.
அவள் வயது வந்த பின் எப்படி அதை மறைத்தாள்,10ஆம் வகுப்பு எழுதினாலா,ஊரை மாற்றினாலா,அயலி உண்மையா இல்லை ,அயலியின் பெயரில் அவ்வூர் தலைவர்கள் (வில்லன்கள்) அனைத்தையும் செய்து ஆட்டி படைக்கிறார்களா என்பதை விறுவிறுப்பாக ,நகைச்சுவையாக, ,சுவாரஸ்யமாக,சிறப்பான வசனங்கள், இசையின் மூலம் சிறப்பாக கொண்டு சென்றனர்.

தமிழ்ச்செல்வி, அவள் அப்பா,அம்மா,தன் தோழி மைதிலி,இன்னும் சில குடும்பங்கள், ஒரே நபரை மட்டும் பெரிதாக்கி காட்டாமல் அனைவருக்கும் பெரும்பங்கு கொடுத்துள்ளார்கள்.ஒவ்வொருவரின் நடிப்பும் அப்படி இருந்தது. என்ன வில்லனை இன்னும் கொஞ்சம் டெர்ரராக இருந்திருந்தால் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்.

முன்பை விட இப்போது பெண்கள் பருவமடைதல்,மாதவிடாய் பற்றிய புரிதல்கள் அதிகம் உள்ளன,ஆனாலும் நிறைய மூட நம்பாய்க்கிகளும்,தேவையற்ற கட்டுப்பாடுகளும் இருக்கத்தான் செய்கிறது,கொஞ்சம் கொஞ்சமாக நிச்சயம் மாறும். அயலியின் மூலம் அவர்கள் அனுபவிக்கும் வலிகள், இன்னல்களை பலருக்கும் நிச்சயம் அயலி புரிய வைக்கும் ,உணரவும்....!

எனக்கு என்னன்னா தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி என  கூறுகிறார்கள்.வாய்ப்பில்லை ஏனெனில் அவர் வேறு இனத்தை,மொழியை சார்ந்தவர்,இங்கு பிறந்திருக்கலாம் படித்திருக்கலாம்,மருத்துவர் ஆகியிருக்கலாம்,ஆனால் தமிழ் மருத்துவர் இல்லை ,தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் தமிழ் பெண்ணாக தான் இருக்க வேண்டும்!!

மொத்தத்தில் அயலி தரம்!!!




#Ayali #ayaliwebseries #tamilblogger #TamilmovieReview #tamilseries #ayali

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

avatar the way of water எப்படி?❗ ஒரு முறை பார்க்கலாமா - திரை சுமர்சனம்😫

Avatar The Way Of Water  (விமர்சனமாக கூட எடுத்துக்கொள்ளலாம்) ஏதாவது எழுத வேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் என்னத்த எழுதனு விட்டுவிடுவேன் ஆனால் இந்நேரம் ஆகியும் இதை நிச்சயம் எழுதுவதற்கு காரணம் உங்களின் மேல் உள்ள பாசம் நீங்களும் என்னைப் போல் அவஸ்தை பட வேண்டாமென்பதால்...... 2009ல் வெளியான அவதார் 1 எங்கள் மாமா வீட்டில் 3டி டிவியில் பார்த்தோம் நன்றாக தான் இருந்தது.இப்போதும் எனக்கு பெரிதாக இப்படம் செல்வதில் விருப்பமில்லை தம்பியும் ,நண்பனும் கேட்டதால் சென்றேன். அதுவே தாமதமாக தான் சென்றோம் நல்ல வேலை கொஞ்ச நேரம் தப்பித்தேன்😲. படத்தின் கருவே அவதார் தன் குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்,வனவாசியாக இருந்த அவர்கள் தன் குடும்பத்தை காப்பாற்ற கடல்வாசியாக மற்றொரு இனம் வாழும் தீவிற்கு சென்று அடைக்கலம் கேட்டு செல்கின்றனர். அங்கு அவர்களை ஏற்றுக்கொண்டார்களா? வில்லன் எப்படி இவர்களை கொள்ள முயற்சிக்கிறான்,யார் பிழைத்தார்கள்,உயிருடன் இருந்தார்கள் என்பது  க்ளைமாக்ஸ்.   ஆரம்பம் முதல் படம் முடியும் வரை "அய் யய்யோ எப்படா படம் முடியும்" ஏண்டா இப்படி கொல்றீ...