சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
பலர் சொல்லி கேட்டிருக்கிறேன்,ஏன்? நானே கூட சொல்லி இருக்கிறேன். உடற்பயிற்சி செய்ய, நடைப்பயிற்சி செல்ல உடன் யாராவது வந்தால் நல்லாருக்கும்லனு,அப்படியும் சிலர் கிடைப்பார்கள் நாமும் தினமும் அவரை எதிர்பார்த்து,அவரும் நம்மை எதிர்பார்த்து செல்வோம்,திடிரென யாராவது ஒருவர் சொதப்பினால் போதும் இவரும் அதான் அவரே வரலையே இன்னைக்கு போக வேண்டாம் நாளைக்கு போவோம்னு செமையாக தூக்கத்தை தொடர்வோம். உடன் ஒருவர் வந்தால் நன்றாக தான் இருக்கும், இன்னும் போட்டிபோட்டுக் கொண்டு செய்யலாம்,ஆனால் யார் வந்தாலும் வரா விட்டாலும் உறுதியாக செல்ல வேண்டும என்ற சுயஒழுக்கம் அவசியம் தேவை. இதனால் மறுபக்கத்தில் இருப்பவர் கோபித்துக் கொண்டாலும் பிரச்சனை இல்லை ஏனென்றால் இதைக் கூட புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு கூட அவருக்கு பக்குவம் இல்லை என்பதை அறிய இது ஓர் வாய்ப்பாக அமைகிறது அல்லவா..! ஒரு நேரம் வரை காத்திருக்கலாம் இல்லையெனில் கிளம்பிவிடலாம், இன்றும் இது போல் தான் ஆனது சில நிமிடங்கள் காத்திருந்தேன் கிளம்பிவிட்டேன். இன்று மாலை தாம்பரம் டூ போரூர் நெடுஞ்சாலையில் மிதிவண்டி பயணம் எதிர்காற்று கொஞ்சம் அதிகம் தான் ஆனாலும் அருமையாக இருந்தத...