முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

parenting லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

குழந்தைகள்களை பள்ளிக்கு கூட்டி செல்லும் பெற்றோர்களின் கவனத்திற்கு📍🔴| இதை பின்பற்றுங்கள்!!!

தினமும்  பிள்ளைகளை பள்ளியில் இறக்கி விடும் நண்பர்களே,அன்பர்களே!! என்னப்பா ஒரு ஸ்கூல்னு இல்லை ஊருக்குள்ள எங்க பார்த்தாலும் தான் பிள்ளையை இறக்கி விட்டுட்டு ஓடிட்டா போதும் டா சாமினு இருக்கீங்க போல.ஏன் அப்படி சொல்றேன்னா பின்னாடி ல்,முன்னாடி,இந்தப் பக்கம்,அந்தப் பக்கம்னு எந்த பக்கமும் பார்ப்பது இல்லை,வண்டி மட்டுமில்ல ஆட்டோ,கார்னு டர்று புர்ருன்னு இஷ்டதுக்கும் போறது.இதுல நீங்க பாதிக்கப்படறது இல்லை ஏன்னா நீங்க தான் யாரையும் பார்ப்பது இல்லையே. ஆனால் அவ்வழியே செல்லும் மக்கள் தான் உங்களையெல்லாம் என்ன செய்வது என்று மனதிற்குள் புலம்பி சிரமப்பட்டு செல்கின்றனர். தயவுசெய்து அவ்வழியே மற்றவர்களும் செல்ல வேண்டும் என உணர்ந்து அக்கம் பக்கம் பார்த்து நீங்களும் சுமுகமாக நின்று மற்றவர்களுக்கும் வழிவிடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்♥️🙏 நன்றி வணக்கம்♥️😀😅 ✍️ அசோக் குமார் சுதர்சனம் #school #Traffic #akwrites

பிள்ளைகள் செய்யும் குற்றத்திற்கு பெற்றோரின் வளர்ப்பா காரணம்?

பிள்ளைகள் ஊதாரித்தனமாக சுற்றிக்கொண்டும்,மது,மாது,பெண்களை பாலியல் தொந்தரவு செய்து கொண்டும், இருக்கும் தீய செயல்களை  எல்லாம் செய்யும் பிள்ளைகளை சமுதாயம் சொல்வது.. பெற்றவர்களின் வளர்ப்பு சரியில்லை! இதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை, ஒரு வயது வரை தான் குழந்தைகளுக்கு நாம் சொல்வது எல்லாம் ஓரளவுக்கு மண்டைக்குள் ஏறும் நீங்க என்ன தான் அருமையான போதனைகளை சொல்லி அற்புதமான வழியில் வளர்த்தாலும் அவர்கள் தடம் மாறி போனால் நாம்  பொறுப்பில்லை.. ஆம், நீங்கள் எப்படி வளர்த்தீர்கள் என்பதில் இல்லை ஒழுக்கம்,அவர்கள் எப்படி வளந்தார்கள் என்பதில் இருக்கிறது, அவர்கள் படிக்கும்,பார்க்கும் விடயங்கள் ,அவர்கள் சிந்தனைகள்,முக்கியமாக அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்கள்,நண்பர்கள் தான் இதற்கு காரணி.என்னதான் நாம் கட்டுக்கோப்பாக இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் என்ன செய்கிறார்களோ எப்படி இருக்கிறார்களோ நம்மை அறியாமலே அப்படி ஆகிவிடுவோம்.. நாமே நமக்கு ஓர் எல்லையை நிர்ணயித்துக் கொள்ளவில்லையெனில் தடம் மாறி போக வாய்ப்புகள் அதிகம், அவர்களை அவ்வளவு எளிதில் திருத்தி விட முடியாது பட்டு திருந்தினால் மட்டுமே ப...

குழந்தைகளுக்கு கேட்டதையெல்லாம் வாங்கி கொடுக்குறீர்களா?

நான் எதையுமே அனுபவிக்கவில்லை,நான் ஆசைப்பட்டது எதுவுமே எனக்கு கிடைத்தது இல்லை,அதே மாதிரி என் குழந்தைகளுக்கும் ஆகிவிடக் கூடாதுன்னு தான் இப்படி ஓடிகிட்டே இருக்கேன்,செருப்பு மாதிரி  தேயுறேன்னு இங்கு பலர் தன் பிள்ளைகளின் அன்றாடத் தேவைகளையும் நிறைவு செய்துவிட்டு ,ஆடம்பரத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேதனைப்பட்டு,துன்பப்பட்டு ,துயரப்பட்டு ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.. எல்லாம் சரி தான் பிள்ளைங்க நல்லா இருக்கணும் ,அவர்களுக்கு தேவையானது எல்லாம் கிடைக்கணும்,அவங்க நினைச்சதை படிக்க வைக்கணும் இன்னும் இதுபோல் பல... ஆனால் பணத்தை பற்றிய ஒரு புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது அல்லவா? முதலில் கேட்பதையெல்லாம் உடனே வாங்கி கொடுப்பதை நிறுத்துங்கள்,இப்படி ஒவ்வொரு பொருளாக வாங்கி கொடுத்துக்கொண்டே இருக்கும்போது அவர்கள் மனதில் தோன்றுவது " நமக்கு எல்லாம் கிடைக்குது அடுத்து இதை கேட்போம் அதை விட இது செமையா இருக்குன்னு மற்றொன்றை கேட்பார்கள்" அதுவும் தேவையற்ற பொருளாக தான் இருக்கும் ,( முக்கால் வாசி) ஆனாலும் அதை வாங்கி கொடுப்பீர்கள்,இல்லையெனில் அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள்,சோர்ந்து வ...