முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

EMIயில் பொருட்கள் வாங்கலாமா? இவர்கள் செய்யும் டுபாக்கூர் தனங்கள் என்ன? #emi

நான் பொதுவாகவே என்ன சவால்கள் இருந்தாலும் அவ்வளவு எளிதில் யாரிடமும் கடன் வாங்க மாட்டேன்.ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நன்றாக தெரிந்த நண்பர்களிடம் வாங்கினால் சில நாட்கள் அல்லது வாரத்தில் சொன்ன தேதியில் கொடுத்து விடுவேன். AC வாங்கலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன்.ஆனால் அந்த நேரத்தில் முழு பணம் இல்லை அப்படி இருந்தாலும் முழு பணத்தை அதில் போட்டால் லாக் ஆகி விடுவேன்.சரி zero cost EMIனு இருக்கே முயற்சி பண்ணுவோம்னு முயற்சித்தேன்.ஏற்கனவே தெரியும் Bajaj கார்டு வாங்கினால் கார்டுக்கு ஒரு பணம் processingக்கு பணம்னு. எல்லாம் தெரிஞ்சி வாங்கிவிட்டோம். ஆரம்பத்தில் டவுன் பேமெண்ட் கட்டி விட்டேன், எங்களுக்கு ஆட்டோ டெபிட் ஆப்ஷன் வேண்டாம் வேறு வங்கியில் இருந்து கட்டி விடுவோம் என்று சொல்லிவிட்டோம்.ஆனால் அடுத்த மாதம் என் வங்கியில் இருந்து கட்டினேன் auto debit செய்யும்போது அதில் பணம் இல்லையென ஒரு பெனால்டி ,எப்போதுமே முதல் மாதம் கூடுதலாக 200 ரூபாய் புடிப்பார்களாம் அதை கடைக்காரர்கள் சொல்லவில்லை. இன்னொரு திருட்டு தனம் என்னவென்றால் அதில் தானாகவே அவர்கள் பக்கத்தில் இருந்து insurance இணைந...