நான் பொதுவாகவே என்ன சவால்கள் இருந்தாலும் அவ்வளவு எளிதில் யாரிடமும் கடன் வாங்க மாட்டேன்.ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நன்றாக தெரிந்த நண்பர்களிடம் வாங்கினால் சில நாட்கள் அல்லது வாரத்தில் சொன்ன தேதியில் கொடுத்து விடுவேன்.
AC வாங்கலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன்.ஆனால் அந்த நேரத்தில் முழு பணம் இல்லை அப்படி இருந்தாலும் முழு பணத்தை அதில் போட்டால் லாக் ஆகி விடுவேன்.சரி zero cost EMIனு இருக்கே முயற்சி பண்ணுவோம்னு முயற்சித்தேன்.ஏற்கனவே தெரியும் Bajaj கார்டு வாங்கினால் கார்டுக்கு ஒரு பணம் processingக்கு பணம்னு. எல்லாம் தெரிஞ்சி வாங்கிவிட்டோம்.
ஆரம்பத்தில் டவுன் பேமெண்ட் கட்டி விட்டேன், எங்களுக்கு ஆட்டோ டெபிட் ஆப்ஷன் வேண்டாம் வேறு வங்கியில் இருந்து கட்டி விடுவோம் என்று சொல்லிவிட்டோம்.ஆனால் அடுத்த மாதம் என் வங்கியில் இருந்து கட்டினேன் auto debit செய்யும்போது அதில் பணம் இல்லையென ஒரு பெனால்டி ,எப்போதுமே முதல் மாதம் கூடுதலாக 200 ரூபாய் புடிப்பார்களாம் அதை கடைக்காரர்கள் சொல்லவில்லை.
இன்னொரு திருட்டு தனம் என்னவென்றால் அதில் தானாகவே அவர்கள் பக்கத்தில் இருந்து insurance இணைந்து கொள்கிறார்கள் ஆக கூடுதலாக 300 ரூபாய் சேர்ந்து கொண்டே இருந்ததால் EMI எடுத்த நிறுவனத்திற்கு அழைத்தால் Customer Support கேவலமாக இருந்தது ஒரு முறை அழைப்பில் பேச முடியவில்லை.சரி என கடையில் சென்று கேட்டால், இது அவங்க சைடுல பண்ணிடுவங்க பா உங்க கிட்ட மொபைல் இருக்கு பார்த்தீங்க நிறைய பேரு குட்டி போன் வச்சிக்கிட்டு என்னென்ன தெரியாம கட்டிடுவாங்க பாவம்னு சொல்றாப்ல.பின்பு ஆப்பில் அதை கேன்சல் செய்து கொடுத்தார்கள்.
என்னடா இப்படி பண்றாங்க ஏண்டா வாங்கினோம்னு ஆகிடுச்சு,இவங்க செய்யுற அட்டூழியத்தில் நிம்மதியாக தூங்க AC வாங்கினால் அதில் துளியும் நிம்மதி இல்லை.சரி எப்படியாவது கட்டி இதை ஒழித்துவிடுவோம் என கோபத்தோடு பஜாஜ் சென்றால் அங்கு ஒரு தாளில் பிரிண்ட் அவுட் எடுத்து சார் இந்த இது இதுக்கு எடுத்திருக்கங்கஸ்அது மவ்
மெயின்டெனன்ஸ் இது எப்போதும் அப்பப்போ எடுப்பார்கள் இதை கடைக்காரர்கள் உங்க கிட்ட சொல்லவில்லையா என சொல்லி,என் த்ரிப்திக்கு திரும்ப திரும்ப டவுட் கேட்டு எல்லாத்துக்கும் பதில் சொல்லி வாயை அடித்தார்கள் அட போங்கடா என்ன எழவோ கட்டுவிடுவோம் என்ற நிலை வந்துவிட்டேன்.
உங்களுக்கு ஏதாவது பொருள் வாங்க வேண்டுமென்றால் முடிந்தளவு சேமித்து வாங்குங்கள், முடியாத பட்சத்தில் கடைசியில் நண்பர்களிடம் கொஞ்சம் பணம் வாங்கி சில காலத்தில் கொடுத்து விடுங்கள்.தயவு இது போன்று EMI என்று பண்ணும் டுபாக்கூர் கம்பெனிகளிடம் சிக்க வேண்டாம்.ஆனால் நடுத்தர குடும்பத்தினர் பலருக்கு இப்படி செய்தால் தான் வீட்டிற்கு ஒவ்வொரு பொருளாக வாங்க முடியும்.அப்படி வாங்கும் பட்சத்தில் Debit/Credit ஆஃபர் இருந்தால் உபயோகித்து கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் EMI என்றால் அனைத்தையும் தெளிவாக கேட்டு நல்ல கம்பெனியாகி பார்த்து வாங்குங்கள் இல்லையெனில் அவர்களில் சரகிற்கு நாம தான் சைட்டிஷ்...!
✍️ அசோக் குமார் சுதர்சனம்
#EMI #emiscam #ZeroCostEMI #tamilblogger #tamil #BajajFinserv #bajajscam
கருத்துகள்
கருத்துரையிடுக
அன்பும் நன்றியும்♥️