முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

greatful லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

2020

பலருக்கு பாரமாக சிலருக்கு பிரமாதமாக கடந்துவிட்டது,இங்கு புலம்புபவர்களில் பலரும் இவ்வருடத்தை தேவையில்லாத ஆணி என்று தானே அழுதுகொண்டிருந்தனர்... என்ன செய்ய முடியும்?  எண்ணில் மட்டும் கூடுதலாக ஒன்று சேருமே தவிர வேறேதும் மாற்றம் அடைந்துவிடுவதில்லை நாம் மாறும் வரை ,நாம் மாற்றும் வரை... ஒரு பக்கம் உலகையே அச்சுறுத்திய கொரோனா லட்சக்கணக்கான மக்களை கொன்றது,பலரை பாதித்தது,மக்கள் ஒரு நாள் உணவு உண்ணவே சிரமம்,வீட்டு வாடகை,மருத்துவரை/மருத்துவமனை போக முடியாமல்,வைத்தியம் பார்க்க முடியாமல் உயிர்கள் பலி, பலருக்கு வேலைகள் பறிபோயின, தொழில்கள் மடிந்தது, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு,க்ளைமாக்ஸில் வெள்ளம் வந்து அடித்தட்டு மக்களை,ஏரியில் வீடுகள் இருக்கும் பகுதிகளை சேதப்படுத்தியது,பலரின் தற்கொலை,மரணம் இன்னும் ஏராளம்...! மறுபக்கம் பலரின் திறமைகள் வெளிவந்தது, வலைஒலி சேனல்கள் உருவாகின,வேறு வழியில் பணத்தை உருவாக்க பல தொழில்கள் உருவாயின, வேலை கிடைத்துள்ளது,குறைந்த செலவில் லாக்டவுன் திருமணங்கள்,ஊரை விட்டு நகரத்தில் வேலை செய்யும் பலருக்கு ஊரில் பெற்றோர்களுடன் இயற்கையுடன் வாழ, வேலை பார்க்க வாய்ப்பு கி...