முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

akwrites லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

avatar the way of water எப்படி?❗ ஒரு முறை பார்க்கலாமா - திரை சுமர்சனம்😫

Avatar The Way Of Water  (விமர்சனமாக கூட எடுத்துக்கொள்ளலாம்) ஏதாவது எழுத வேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் என்னத்த எழுதனு விட்டுவிடுவேன் ஆனால் இந்நேரம் ஆகியும் இதை நிச்சயம் எழுதுவதற்கு காரணம் உங்களின் மேல் உள்ள பாசம் நீங்களும் என்னைப் போல் அவஸ்தை பட வேண்டாமென்பதால்...... 2009ல் வெளியான அவதார் 1 எங்கள் மாமா வீட்டில் 3டி டிவியில் பார்த்தோம் நன்றாக தான் இருந்தது.இப்போதும் எனக்கு பெரிதாக இப்படம் செல்வதில் விருப்பமில்லை தம்பியும் ,நண்பனும் கேட்டதால் சென்றேன். அதுவே தாமதமாக தான் சென்றோம் நல்ல வேலை கொஞ்ச நேரம் தப்பித்தேன்😲. படத்தின் கருவே அவதார் தன் குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்,வனவாசியாக இருந்த அவர்கள் தன் குடும்பத்தை காப்பாற்ற கடல்வாசியாக மற்றொரு இனம் வாழும் தீவிற்கு சென்று அடைக்கலம் கேட்டு செல்கின்றனர். அங்கு அவர்களை ஏற்றுக்கொண்டார்களா? வில்லன் எப்படி இவர்களை கொள்ள முயற்சிக்கிறான்,யார் பிழைத்தார்கள்,உயிருடன் இருந்தார்கள் என்பது  க்ளைமாக்ஸ்.   ஆரம்பம் முதல் படம் முடியும் வரை "அய் யய்யோ எப்படா படம் முடியும்" ஏண்டா இப்படி கொல்றீ...

தமிழ் படத்தில் ஏன் மற்ற மொழிகளை திணிக்கன்றனர்? இதெல்லாம் தேவையில்லாத வேலை!!!

இதை பெரும்பாலும் யாரும் கவனிக்க மாட்டார்கள் ஏனெனில் படத்தை படமாக ,பொழுதுபோக்கு போக்கை பொழுது போக்காக பார்ப்பது தானே நம் பழக்கம் ஆனால் நாம் அதிகம் விரும்பும் சினிமா,நாடகம்,குழந்தைகள் பார்க்கும் கார்டூன்ஸ் போன்றவற்றின் மூலம் தான் நம் மனதில் எதை திணிக்க நினைக்கிறார்களோ அதை சிறு வயது முதலே சிறப்பாக திட்டமிட்டு செய்கின்றனர். நம் தமிழ்நாட்டில்,நம் அக்கம் பக்கத்தில் மற்ற இனத்தினரும் ஒன்றாக தான் நண்பர்களாக வாழ்கிறோம்.ஆனால் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ஏன் தமிழ் படத்திற்குள் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என ஒரு குடும்பத்தை அறிமுகம் செய்து அதிலும் மேலே தமிழ் கூட டப் செய்யாமல் மற்ற மொழியிலையே பேசுகின்றனர். ஏன் கீழே ஆங்கிலத்தில் கூட என்ன பேசுகிறார்கள் என்பதை போடுவதில்லை. இதே போல் மற்ற மாநில திரையுலகில் செய்தால் படக்குழுவினருக்கு செருப்படி விழும். ஒரு படம் என்பது எந்த மொழியில் எந்த மாநிலத்தில் வெளியிடுகிறார்களோ அந்த மொழியில் முழுவதும் இருப்பது தானே சரி. என்ன கூற நினைக்கிறார்கள் என நினைத்தால் தமிழர்களை விட நாங்கள் அதிகம் வசிக்கிறோம்,நாங்கள் பெரும்பாண்மை,வீட்டில் மட்டும் எங்கள் தாய் மொழியை பேசிவிட்ட...

மறைந்த பின்பு அழுவதை விட வாழும்போது நேசியுங்கள் !!!

இங்கே முக்கால்வாசி பேர் ஒருவர் அருகில் இருக்கும் போதோ,உயிருடன் இருக்கும்போதோ கோபம், ஈகோ போன்ற பல்வேறு காரணிகளால் நம் அன்பிற்குரியவரை கண்டுகொள்ளாமல் பேசாமல் கடந்து சென்று கொண்டே இருக்கிறோம். சரி தான் அனைத்தையும் தாண்டி ஏதோ ஒன்று நம்மை தடுக்கிறது ஆனால் அனைத்தையும் தகர்த்தெறிந்து 5 4 3  2 1 என எண்ணிவிட்டு நேராக சென்று  பேசிவிடுங்கள்,அழுது விடுங்கள், அணைத்து விடுங்கள். நன்றாக இருக்கும் போது ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்துவிட்டு ,உடல் நிலையில் சரியில்லாத போது ,எழுந்து நடக்க,பேச முடியாத நிலையில் இருக்கும்போது எங்கிருந்து தான் உணர்ச்சி நமக்கெல்லாம் பெருக்கெடுத்து வருகிறதோ தெரியவில்லை. அப்போதாவது வருகிறதே 😏 அப்போதும் கல் நெஞ்சை சுமந்து நடமாடினால் நாம் நடை பிணம் தான். சில  சூழ்நிலைகள் இதை ஆழமாக உணர வைக்கும். ஒருவர் உயிரோடு இருக்கும்போதே பேசுங்கள்,அவர்கள் பேசுவதை கேளுங்கள்,பாராட்டுங்கள்,கொண்டாடுங்கள் அவர்கள் உங்களோடு இருப்பதை உணருங்கள் எதிரில் இருப்பவர் எவ்வளவு விடாப்பிடியாக இருந்தாலும் நம் மேல் தவறே இல்லையென்றாலும் அவர் நமக்கு வேண்டுமெனில்,அவருக்கு நாம் வ...