முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

life லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மிடில் கிளாஸ் சாமானியனின் வாழ்க்கை இவ்வளவு வலிகள் நிறைந்ததா?

இந்த மிடில் கிளாஸ்,ஹை கிளாஸ்,லோ கிளாஸ் எல்லாமே இச்சமுதாயம் உருவாக்கியது தான் ,அதுவும் பணத்தின் அடிப்படையில் மட்டும் இவை கணக்கிடப்பட்டு இவர்கள் லோ கிளாஸ்,இவர்கள் ஹை க்ளாஸ் என பெரும் பட்டத்தை கொடுக்கிறது இச்சமூகம்.சமூகம் கொடுக்கிறதோ இல்லையோ நாமே நம்மை இப்படி அழைத்துக்கொள்வோம். என்ன வாழ்க்கை டா இது!!!! ஒன்னு பணக்காரராக இருந்திடனும்,இல்ல லோ கிளாஸ்ஸா இருந்திடனும் ,இப்படி மிடில் கிளாசில் பிறந்து ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கிறோமே,ச்சே என்ன வாழ்க்கை டா இது....! ஆசைப்பட்ட பொருளையோ,உணவையோ நினைத்தவுடன் வாங்க முடியாது, வாடகை வீடு,வாங்கிய பொருளுக்கு மாதாமாதம் EMI, குடும்ப கடன்கள்,நெருக்கமானவர்களுக்கு ஒரு பொருளை கூட வாங்கிக்கொடுக்க முடியாத சூழல்,சம்பாதித்த பணம் எல்லாம் கடனுக்கும்,வீட்டிற்கும் போக ஆசைப்பட்ட இடத்திற்கு போகவோ,வேண்டியதை வாங்கவோ பணம் இல்லாமல் அம்மாதத்தை ஓட்டுவது,சரியான உடை கூட அணிய முடியாத அளவிற்கு வறுமை,நம்ம நிலைமை இப்படி ஆகிப்போச்சே,வாழ்க்கைல எப்படியாச்சும் மேல வந்துடனும்,நம்ம தூற்றியவர்கள் முன்பு வாழ்ந்து காட்டணும் ,வேற லெவல் வாழனும்னு வெளியில் கம்பீரமாக சற்றுக் கொண்டும் ஸ்டே...