முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

2020

பலருக்கு பாரமாக சிலருக்கு பிரமாதமாக கடந்துவிட்டது,இங்கு புலம்புபவர்களில் பலரும் இவ்வருடத்தை தேவையில்லாத ஆணி என்று தானே அழுதுகொண்டிருந்தனர்...

என்ன செய்ய முடியும்?
 எண்ணில் மட்டும் கூடுதலாக ஒன்று சேருமே தவிர வேறேதும் மாற்றம் அடைந்துவிடுவதில்லை நாம் மாறும் வரை ,நாம் மாற்றும் வரை...

ஒரு பக்கம் உலகையே அச்சுறுத்திய கொரோனா லட்சக்கணக்கான மக்களை கொன்றது,பலரை பாதித்தது,மக்கள் ஒரு நாள் உணவு உண்ணவே சிரமம்,வீட்டு வாடகை,மருத்துவரை/மருத்துவமனை போக முடியாமல்,வைத்தியம் பார்க்க முடியாமல் உயிர்கள் பலி, பலருக்கு வேலைகள் பறிபோயின, தொழில்கள் மடிந்தது, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு,க்ளைமாக்ஸில் வெள்ளம் வந்து அடித்தட்டு மக்களை,ஏரியில் வீடுகள் இருக்கும் பகுதிகளை சேதப்படுத்தியது,பலரின் தற்கொலை,மரணம் இன்னும் ஏராளம்...!

மறுபக்கம் பலரின் திறமைகள் வெளிவந்தது, வலைஒலி சேனல்கள் உருவாகின,வேறு வழியில் பணத்தை உருவாக்க பல தொழில்கள் உருவாயின, வேலை கிடைத்துள்ளது,குறைந்த செலவில் லாக்டவுன் திருமணங்கள்,ஊரை விட்டு நகரத்தில் வேலை செய்யும் பலருக்கு ஊரில் பெற்றோர்களுடன் இயற்கையுடன் வாழ, வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது,தன் திறமைகளை மேம்படுத்த ஏராளமான நேரம், அதுமட்டுமில்லாமல் இதுவரை  வாழ்வில் யாருக்கும் கிடைக்காத அளவிற்கு ஒரு பெரும் (space) இடம் கிடைத்ததது...

ஆக இது எதையும் நம்மால் மாற்ற முடியாது, அனைத்து இன்பங்கள்,துன்பங்களை எனும் வாழ்க்கை எனும் வண்டியில் கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும்...

இப்போ new year resolutionனு தொடங்குவார்கள் ஒரு வாரம் மாங்கு மாங்குனு செய்து விட்டு அவர்களின் தன்னிலைக்கே வந்துவிடுவார்கள்..

"நான் இனி ஓடிக்கிட்டே இருப்பேன்னு சொன்னா எப்போயாச்சும் எப்படியாச்சும் நிப்பாட்டிடுவோம் , ஒவ்வொரு நாளும் உறுதிமொழி ஏற்க வேண்டும், இன்று நான் செய்வேன் என ஒவ்வொரு நாளும் சொன்னால் நிச்சயம் செய்வோம் அதற்கு சுயஒழுக்கம் அவசியம்..

கடந்து காலம் கடந்துவிட்டது போகட்டும், ஒவ்வொருவருக்கும் இலக்குகள் இருக்கும்,
அதை எழுதுங்கள்,ஆழ்மனதில் பதிய வையுங்கள்,மற்றதெல்லாம் தானாக நடக்கும், உங்களுக்கு வரும் வாய்ப்புகள் அனைத்தையும் தவறவிடாமல் பயன்படுத்துங்கள் ,வயது என்பது ஒரு எண் மட்டுமே தொடந்து உங்கள் இலக்கில் பயணித்து வெற்றியடைய என் வாழ்த்துக்கள்..

முடித்தளவு யாரையும் காயப்படித்தவேண்டாம்,அவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்துங்கள்,உனக்கு நான் இருக்கேன்னு சொல்லுங்கள், ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள், பணம் சேமிக்கும் பழக்கத்தை தொடர்ந்து செய்யுங்கள்,புத்தகம் படியுங்கள்,உடற்பயிற்சி செய்யுங்கள்,பெற்றோர்களை/குடும்பத்தை/ நண்பர்களை மதியுங்கள்,ஈகோ இல்லாமல், கோபம் கொள்ளமல் வாழப் பழகுங்கள்...

இது அறிவுரை அல்ல  உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமேன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்,உங்கள் மனதிற்கு தெரியும் எதை எடுத்துக்கொள்ளலாம்,எதை தவிர்க்கலாம் என...!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤️

#HappyNewYear2021 #newyear #newyearsresolution #lastppostoftheyear

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

அயலி Webseries எப்படி உள்ளது? பெண்கள் படிக்க தடையா! பார்ப்போம் தரமான சம்பவம்😲🛑🙏

அயலி என்னதான் நல்ல படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தை எப்போது முடித்து அடுத்த சோலியை பார்க்கலாம்  என்று தான் எப்போதும் தோன்றும்.சில படங்கள் தான் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாமே, அடுத்த பாகம் எடுத்தால் நல்லாருக்கும் என தோன்றும். அதே போல் தான் அயலியும் மிகவும் பிடித்திருந்தது.முதல் இது படம் அல்ல சீரிஸ் எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் இல்லை சீரிஸ் பார்க்கும் பழக்கமும் இல்லை.  அயலி மொத்தம் 8 பாகம்,கிட்டததட்ட 4 மணிநேரத்திற்கு மேல். ஆனால் எந்த ஒரு நேரத்திலும் என்னடா எப்படா முடியும், என்ன இந்த காட்சி இப்படி இருக்கு  என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஹீரோ இல்லை,சண்டைக்காட்சி,காதல் ,நம்ம ஊர் திரைப்படங்களில்,நாடங்கங்களில் வருவது போல் தேவையில்லாத ஆணி பாடல்கள் இல்லை. முழு நேரமும் நம்ம சொந்த ஊர்களில் நாம் இருந்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஒவ்வொரு காட்சியும் நடிப்பாக இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது. அயலி - அந்த ஊருக்குள் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து ஓடி விட்டார்களாம் அதனால் அந்த ஊர் எரிந்து நாசமாகியது என சொல்கிறார...