முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

பொங்க வேண்டாம்..!!

நம் அனைவர் வீட்டிலும் பொங்க வேண்டியது நாம்  அல்ல, பொங்கல் மட்டுமே🙂..

சிலரெல்லாம் தன்னைத்தானே பீத்திக்கொள்வதுண்டு நான் பயங்கரமான  கோபக்காரன்,எனக்கும் கோபம் வந்துச்சு அவ்ளோதான் என்னை யாராலயும் கட்டுப்படுத்த முடியாது" இப்படியெல்லாம் வெட்டி வீராப்பு காட்ட வேண்டியது,அவர்கள் சும்மா இருந்தாலும் உடன் இருக்கும் சொம்புகள் அவங்க ரொம்ப அமைதி ஆனா கோபம் வந்துச்சு செத்தோம்னு பயந்து சாவார்கள்...

இதில் கொஞ்சம் உண்மையும் உண்டு கோபமே படாதவர்கள் ஒரு காரணத்திற்காக கோபப் பட்டால் அவர்களை கேட்டு தான் அவ்வுணர்ச்சி  வெளிப்படும் மற்றவர்களுக்கு அப்போது தான் உண்மையான பயம் வரும் இவங்களுக்கு  அவ்வளவு சீக்கிரம் கோபம் வராது அப்படின்னா ஏதோ காரணம் இருக்குனு நினைச்சுக்குவாங்க...

என் கல்லூரி பேராசிரியர் கூறியது இன்னும் நினைவில் உண்டு "கோபம் எனும் உணர்ச்சி உன்னைக்கேட்டு தான் வெளிப்பட வேண்டும், அப்படி இல்லையென்றால் அந்த உணர்ச்சி நம்மை கட்டுப்படுத்தும்...

எளிமையாக கூற வேண்டுமென்றால் எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென கோபத்தை கக்குபவர்கள் ஒரு நகைச்சுவையான மனிதர் இதைக்கூட கையாளத் தெரியாத பக்குவம் இல்லை என்பதே அர்த்தம்...

இன்னைக்கு சாமி கும்பிட்டு பூஜை செய்ய வீட்டில் பொங்கல்,வடை,பாயாசம்லாம் செய்வோம் ராவுகாலம்,எமகண்டம்  அது இதுன்னு ரொம்ப பார்க்காமல் கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் ஆசுவாசமாக செய்யுங்கள் நீங்களும் படபடப்பு ஆகி வீட்டில் இருப்பவரையும் எரிச்சல் ஆக்கி பொங்கல் போல் நீங்கள் போங்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்...

பொறுமையாக செய்யுங்க, கொஞ்சம் நேரம் கூடினாலும் யாரும் எதுவும் நம்மை கேட்கப்போவதில்லை,ஜனவரி (தை மாதம்) அதிகம் விடுமுறை கிடைக்கும் மாதம், குடும்பத்தோடு நேரம் கழித்து மகிழ்வாக வாழுங்கள்...

அக்கம் பக்கத்தில் உணவையும்,அன்பையும் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம்..

பொங்கலை மட்டும் பொங்க வைப்போம்!!😍

பொங்கல் வாழ்த்துக்கள் 😍

இன்று குழுவுடன் மிதிவண்டி பயணம் செல்லலாம் என்றிருந்தேன் இரவு விரைவில் படுத்தாலும் உறக்கம் இல்லை அதனால் எழ சற்று தாமதம் ஆகி விட்டது,நானே தனியாக கிளம்புவோம்னு கிளம்பிட்டேன் ஆனா என்ன வழி போவது என குழப்பம், தாம்பரம் - வானகரம் டோல் - போரூர் - கிண்டி - தாம்பரம்..

பணி,எதிர்காற்று அதிகம் ஆனாலும் தனியாக தனிமையாக அற்புதமாக இருந்தது  

தனிமையில் அதிகம் கற்றலும் மனநிம்மதியும் கிடைத்தது மகிழ்ச்சி...

அசோக் ஹாப்பி அண்ணாச்சி...!

#happypongal2021 #pongalfestival #Pongal #soloride50k #cycling #fitness #nevergiveup #WCCG #tbmchapter #highwayride #peaceful #angry #nonstopride #chennai WCCG (Chennai Cyclists)

கருத்துகள்

கருத்துரையிடுக

அன்பும் நன்றியும்♥️

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...