முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

வாகனங்களில் இருக்கும் பாகங்கள் இதற்கு தானா?

இரு சக்கர/கார்/மிதிவண்டி வாகனம், நடை/ஓட்டம் என நாம் அன்றாடம் செய்யும்\ உபயோகிக்கும் நமக்கு தான்  இப்பதிவு...!

கண்ணாடி (Mirror)

வண்டியில் இருபக்கமும் கண்ணாடி ( mirror) வைத்துக்கொள்ளுங்கள், பலர் அதை ஒரு இடையூறாக கருதி எடுத்து விடுகின்றனர், குறிப்பாக இளைஞர்கள் சந்து பொந்துகளில் புகுந்து போக  அதை கழட்டி வீசி விடுகின்றனர்,
நானே சிறுவயதில் முகம் பார்க்க தான் என நினைத்துள்ளேன் பிறகு தான் புரிந்தது,..

எந்த பக்கம் திரும்பினாலும் அதைப் பார்த்து வேறு  வாகனம் ஏதாவது வருகிறதா என பார்த்து வளைய வேண்டும் இல்லையெனில் பெரும் விபத்து ஏற்பட நேரிடும்..

ஆக கண்ணாடி வச்சிக்கோங்க பா.!

குறிப்பீடு ( indicator)  

ஒவ்வொரு முறை திரும்பும்போதும்/ வளையும்போதும் இந்த இண்டிகேட்டரை எந்தப் பக்கம் திரும்பி வேண்டுமோ அந்த பக்கம் ஆன் செய்து காட்டினாள் பின்னால் வருபவர்கள் உங்கள் வாகத்தில் ஒலிக்கும் ஒளியை/ஒலியை  பார்த்து, கேட்டு கவனமாக நகர்வார்கள்..

இதை  உங்கள் தெருவில் இருந்து முயற்சியுங்கள் அப்போது தான் அது ஒரு பழக்கமாக மாறும்..

மிதிவண்டி ஓட்டுபவர்கள் கையில் சைகை காட்டுங்கள் இல்லையெனில் உங்களுக்கும் டமால் டுமீல் தான்...!..

●  தலைக்கவசம் ( Helmet )

பொதுவாகவே தலைக்கவசம் அணிவது கடியான வேலை தான்(எனக்கும் தான்) ஆனால் நம் மண்டை , உடம்பு முழுக்க இருக்கும் அறிவை சேர்த்து வைத்திருக்கும் மூளையை பாதுகாக்க அது அவசியம்..

ஆமாம் தலை பாரமாக தான் இருக்கும், முடி அறிக்கும், வியர்வை வரும் எல்லாம் சரி தான் ஆனா உயிர் முக்கியம் அமைச்சரே..

 உனக்காக பல உயிர்கள் வீட்டிலும்,நாட்டுலும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள், எவ்வளவு கடுப்பாக,கடியாக இருந்தாலும் பரவாயில்லை தலைகவசம் அணிவோம்...

எங்கோ படித்தது : "போலீஸ்க்கு அழனும்னு (பணம்) ஹெல்மெட் போடாத,
உன் பொண்டாட்டி புள்ளைங்க அழுதிடக் கூடாதுனு ஹெல்மெட் போடு"..

இருக்கைப்ட்டை  (seat belt)

சீட் பெல்ட்  போடுவதென்றால் இங்கு பலர் மூக்கால் அழுவார்கள், அதை அணிவது அவசியமும் கூட, ஓட்டுனர் கூட அணிந்துவிடுவார் ஆனால் பக்கத்து இருக்கையில் இருப்பவர் அலும்பல் தாங்க முடியாது, 
இருக்கைப்பட்டை  அணியவில்லையென்றால் நீங்கள் மட்டை..

ஹார்ன் ( horn)

பல நாடுகளில் ஹார்ன் அடிக்க கூடாது குற்றமும் கூட சில வருடங்களுக்கு முன்பு அன்பு சகோதரர் மருத்துவர் Hariharan V அவர்கள்  ஹார்ன் பற்றியும் வெளிநாடுகளில்  இதை எப்படி பின்பற்றுகிறார்கள் என்பதையும் தன்னுடைய பயணம் ஹார்ன் சத்தமில்லாமல் எப்படி இருக்கிறது என்பதையும் எழுதி இருந்தார் அன்று முதல் இன்று வரை தேவையில்லாமல் ஹார்ன் அடிப்பதில்லை...

ஹாரன் அடிப்பது " டேய் தள்ளி போடா நான் வந்துகிட்டு இருக்கேன்ல"னு மிரட்டுவதற்கு சமம், நம் நாட்டில் இதை பின்பற்றுவது சற்று சிரமம்தான் முயற்சித்து பாருங்கள் பயணம் நிம்மதியாக இருக்கும்..

இதைப்பற்றி எழுத இன்னும்  பல உள்ளது நேரம் கிட்டும் போது எழுத முயற்சிக்கிறேன்,

ஆக ஹெல்மெட்,இண்டிகேட்டர்,சீட் பெல்ட்,கண்ணாடி,ஹார்ன் இதெல்லாம் உபகோகப்படுத்தி சூதானமா இருந்துகொங்க.....

#roadsafety #WearHelmet #WearSeatBelt #safetyawareness

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...