முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

ஓரினச்சேர்க்கை❤

பள்ளிப் பருவமா, கல்லூரிப் பருவமா என தெரியவில்லை ஆனால் பல வருடங்களுக்கு முன்பு வீட்டில் ஏதோ ஒரு நிகழ்வு உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி இருந்தனர் எங்க மாமாவிற்க்கு படம்  பார்ப்பது என்றால் அவ்வளவு பிரியம் அதனால் அவர் pendriveல் இருந்து மடிக்கணினிக்கு ஏற்றிக்கொண்டிருந்தார்..

திடீரென ஏதோ பேச்சு சென்றுகொண்டிருக்க அந்த படத்துல வர சீன் பற்றி சொன்னார் எனக்கு புரியவில்லை சரி homosexualனா என்னனு தெரியுமானு கேட்டார் இல்லைனு சொன்னேன் "அட பாவி இது கூட தெரியாதா இவ்வளவு பெருசா வளந்திருக்கேன்னு சொன்னாரு" பிறகு அதைப்பற்றி  எடுத்துரைத்தார் அதாங்க ஓரினச்சேர்க்கை பற்றி...

சில விஷயங்களை சிலர் அவ்வப்போது கற்றுக்கொடுப்பதே நல்லது,மறைத்து மறைத்து பேசினால் அதைப்பற்றி இன்னும் அறிய தானே தோன்றும் ..

பின் அதெல்லாம் மறந்து போக,கடந்த வருடம் ஒரு குழுவில் ஒருவர் மனம் வருத்த நிலையில் இருக்கிறது விருப்பமிருந்தால் சொல்லுங்க நேரில் சந்திக்கலாம்னு போட்டிருந்தாங்க நானும் மற்றொருவரும் பார்க்கலாம் என கூறினோம்..

நான் இருந்த குழு மற்றவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் கொடுக்கும் குழு..

அன்று நான் வேலையில் இருந்தேன், இருந்தாலும் பரவாயில்லை சந்திப்போம் என இருந்தேன் கடைசி நேரத்தில் இன்னொரு சகோ  எஸ் ஆகிவிட நான் அவரும் மட்டும் சந்தித்தோம்..

"முதலில் எப்படி இருக்கீங்க என்ன ஆச்சுன்னு பேசிக்கிட்டு இருந்தோம் ஆனால் அவரின் நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது என் கன்னத்தை கிள்ள வந்தார் தட்டி விட்டேன்" பின்னர் பேச்சு போக போக..

"பின் நான் (gay) ஓரினச்சேர்க்கையாளன் என சொன்னார்"

"ஒரு நிமிடம் பக்குன்னு ஆகிடுச்சு சரி வெளிய காட்டிக்காத அசோக்குன்னு அப்படியே என்ன சொல்ல வர்றார்னு கேட்டுட்டு இருந்தேன்"

"அப்பா அம்மா இல்லை இறந்துவிட்டார்கள் உடல் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் அத்தையை பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றார்"

"ஆனாலும் எனக்கு இருந்த அந்த ஷாக்,இதயத் துடிப்பு வேகம் அன்று முழுக்க அப்படியே இருந்தது...

(இப்போ நினைச்சா  கேவலமா இருக்கு நம்மைப் போல்  ஒரு மனிதர் தான் ஏன் அப்படி இருந்தோம்னு)

நான் இன்னும் அவரை புரிந்துகொள்ள முயற்சி செய்தேன்  அவர் பேச்சை ஆழமாக கேட்டேன் ஆனால் என் மண்டையில் இருந்ததையும் சொல்லிட்டேன் "என்னால் உங்களுக்கு உணர்வு ரீதியாக ஆதரவு கொடுக்க முடியும் மற்றபடி எதிலும் விருப்பம் இல்லை என நிதானமாக கூறினேன் "

இதன் பிறகு அவர் பேசியது

"பள்ளிப் பருவம் முதலே எனக்கு பசங்க மேல ஒரு அளவில்லா அன்பு,ஏக்கம் இதை நான் உணரத் துவங்கிய பிறகு அம்மா கிட்ட சொன்னேன் அவங்க என்னை புரிந்துகொண்டு உனக்கு தோன்றுவதை செய்னு சொன்னாங்க"

"அதன் பிறகு நிறைய பாலியல் இச்சைகள்  (sexual harassment) நடந்தது அப்போதெல்லாம் எனக்கு அதில் விருப்பமில்லை  கொடுமையாக இருக்கும் ஆனால் வெளியில் சொல்ல முடியாத வேதனை"

(பெண்களே சொல்ல முடியாத போது இவரும் அதே நிலை தானே)

"பின் போக போக பழகிடிச்சு நிறைய கத்துக்கிட்டேன் இதைப் பற்றி படிச்சி, ஆராய்ச்சி செஞ்சி தெரிஞ்சிக்கிட்டேன் ஆனா இந்த விஷயம் தெரிந்து பலர் என்னை விட்டு விலகி சென்றார்கள், ஆரம்பத்தில் வலியாக இருந்தாலும் என்னைப்போன்று இருக்கும் நபர்களை கண்டறிந்து எனக்கென ஒரு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டேன்"

"பெண்கள் நிர்வாணமாக இருந்தாலும் (மன்னிக்கவும்)  எனக்கு எதுவுமே தோன்றாது ஆனால் ஓரு ஆணுடன் கை கோர்த்து நடந்தால், அவனோடு இருந்தால் அந்த பீல் வேற லெவல்ல இருக்கும், பொண்ணுங்க இருந்தாலும் பேசவே தோணாது,எந்த வித தவறான எண்ணமும் இருக்காது"

"இதுக்குன்னு நிறைய குழு,அமைப்புலாம் இருக்கு இதை சட்ட ரீதியாக வெற்றியடைய செய்ய பல கூட்டங்களும்,முயற்சிகளும் செய்துகொண்டிருக்கிறோம்,இதைப்பற்றி வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்"

இதெல்லாம் கேட்க கேட்க ஆச்சிர்யம் எனக்கு..

"அது மாதிரி இது உடல் சம்மந்தப்பட்டது மட்டுமில்லை உணர்வு சார்ந்தது உடல் சுகம் எல்லாம் பிறகு தான் , ஆணுக்கு பெண் என்பது மாதிரி ஆணுக்கு ஆண் என நினைக்கிறோம் "

"இதற்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் பற்றி நிறைய கூறினார்"

"விபச்சாரம் போல் இவர்களும் இவ்வளவு நேரத்திற்கு இவ்வளவு கட்டிணம் என செல்கிறார்கள்"

இதை 75ற்கும் மேற்பட்ட நாடுகளில்  எதிர்த்து வருகின்றனர், 5 நாடுகளில் மரண தண்டனை வரை உள்ளது, ஆனாலும் இப்போது பல நாடுகளில் ஏற்றுக்கொண்டு வருகின்றனர், ஆஸ்திரேலியாவில் இதற்கு ஆதரவு அதிகம்  இன்னும் பல நாடுகளில் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்..

இதில் சரி தவறு என  நான் கூறவரவில்லை யாருக்கும் நான் இப்படி ஆக வேண்டுமென்பது ஆசையாக இருந்திருக்க 100 சதவீதம் வாய்ப்பே இல்லை, இது உடல் ,மரபணு,மனம் சார்ந்தது, அரவாணிகள் சமுதாயத்தில்  வெளிப்படையாக இருக்கினறனர் ஆனால் இவர்கள் வெளியே சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர் அதுவே வித்தியாசம், மேல சொன்ன அதே ஓரினச்சேர்க்கை (lesbian ) பெண்களுக்கும் பொருந்தும்..

இதெல்லாம் இருக்கட்டும் அவர்கள் அப்படி இருப்பது அவர்கள் தப்பில்லை ,நாம் நம்மால முடிந்த அளவிற்கு அவர்களுக்கு அன்பையும்,அரவணப்பையும் கொடுக்க வேண்டுமே ஒழிய வெறுத்து,கிண்டல்  செய்து,அடித்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை..

ஒருவர் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொண்டால் கிண்டல் அடிப்போம் இதில் நான் மட்டும் விதிவிலக்கல்ல அவ்வளவு யோக்கியனும் இல்லை ஆனால் கற்று உணர்ந்து செல்ல வேண்டியது தானே உத்தமம்...

வேற ஒன்னுமில்லைங்க சொல்லணும்னு தோணுச்சு உங்களுக்கு இதைப்பற்றி என்ன தோன்றதோ சொல்லுங்க....!!

பயணிப்போம்❤️

கருத்துகள்

கருத்துரையிடுக

அன்பும் நன்றியும்♥️

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...