பள்ளிப் பருவமா, கல்லூரிப் பருவமா என தெரியவில்லை ஆனால் பல வருடங்களுக்கு முன்பு வீட்டில் ஏதோ ஒரு நிகழ்வு உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி இருந்தனர் எங்க மாமாவிற்க்கு படம் பார்ப்பது என்றால் அவ்வளவு பிரியம் அதனால் அவர் pendriveல் இருந்து மடிக்கணினிக்கு ஏற்றிக்கொண்டிருந்தார்..
திடீரென ஏதோ பேச்சு சென்றுகொண்டிருக்க அந்த படத்துல வர சீன் பற்றி சொன்னார் எனக்கு புரியவில்லை சரி homosexualனா என்னனு தெரியுமானு கேட்டார் இல்லைனு சொன்னேன் "அட பாவி இது கூட தெரியாதா இவ்வளவு பெருசா வளந்திருக்கேன்னு சொன்னாரு" பிறகு அதைப்பற்றி எடுத்துரைத்தார் அதாங்க ஓரினச்சேர்க்கை பற்றி...
சில விஷயங்களை சிலர் அவ்வப்போது கற்றுக்கொடுப்பதே நல்லது,மறைத்து மறைத்து பேசினால் அதைப்பற்றி இன்னும் அறிய தானே தோன்றும் ..
பின் அதெல்லாம் மறந்து போக,கடந்த வருடம் ஒரு குழுவில் ஒருவர் மனம் வருத்த நிலையில் இருக்கிறது விருப்பமிருந்தால் சொல்லுங்க நேரில் சந்திக்கலாம்னு போட்டிருந்தாங்க நானும் மற்றொருவரும் பார்க்கலாம் என கூறினோம்..
நான் இருந்த குழு மற்றவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் கொடுக்கும் குழு..
அன்று நான் வேலையில் இருந்தேன், இருந்தாலும் பரவாயில்லை சந்திப்போம் என இருந்தேன் கடைசி நேரத்தில் இன்னொரு சகோ எஸ் ஆகிவிட நான் அவரும் மட்டும் சந்தித்தோம்..
"முதலில் எப்படி இருக்கீங்க என்ன ஆச்சுன்னு பேசிக்கிட்டு இருந்தோம் ஆனால் அவரின் நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது என் கன்னத்தை கிள்ள வந்தார் தட்டி விட்டேன்" பின்னர் பேச்சு போக போக..
"பின் நான் (gay) ஓரினச்சேர்க்கையாளன் என சொன்னார்"
"ஒரு நிமிடம் பக்குன்னு ஆகிடுச்சு சரி வெளிய காட்டிக்காத அசோக்குன்னு அப்படியே என்ன சொல்ல வர்றார்னு கேட்டுட்டு இருந்தேன்"
"அப்பா அம்மா இல்லை இறந்துவிட்டார்கள் உடல் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் அத்தையை பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றார்"
"ஆனாலும் எனக்கு இருந்த அந்த ஷாக்,இதயத் துடிப்பு வேகம் அன்று முழுக்க அப்படியே இருந்தது...
(இப்போ நினைச்சா கேவலமா இருக்கு நம்மைப் போல் ஒரு மனிதர் தான் ஏன் அப்படி இருந்தோம்னு)
நான் இன்னும் அவரை புரிந்துகொள்ள முயற்சி செய்தேன் அவர் பேச்சை ஆழமாக கேட்டேன் ஆனால் என் மண்டையில் இருந்ததையும் சொல்லிட்டேன் "என்னால் உங்களுக்கு உணர்வு ரீதியாக ஆதரவு கொடுக்க முடியும் மற்றபடி எதிலும் விருப்பம் இல்லை என நிதானமாக கூறினேன் "
இதன் பிறகு அவர் பேசியது
"பள்ளிப் பருவம் முதலே எனக்கு பசங்க மேல ஒரு அளவில்லா அன்பு,ஏக்கம் இதை நான் உணரத் துவங்கிய பிறகு அம்மா கிட்ட சொன்னேன் அவங்க என்னை புரிந்துகொண்டு உனக்கு தோன்றுவதை செய்னு சொன்னாங்க"
"அதன் பிறகு நிறைய பாலியல் இச்சைகள் (sexual harassment) நடந்தது அப்போதெல்லாம் எனக்கு அதில் விருப்பமில்லை கொடுமையாக இருக்கும் ஆனால் வெளியில் சொல்ல முடியாத வேதனை"
(பெண்களே சொல்ல முடியாத போது இவரும் அதே நிலை தானே)
"பின் போக போக பழகிடிச்சு நிறைய கத்துக்கிட்டேன் இதைப் பற்றி படிச்சி, ஆராய்ச்சி செஞ்சி தெரிஞ்சிக்கிட்டேன் ஆனா இந்த விஷயம் தெரிந்து பலர் என்னை விட்டு விலகி சென்றார்கள், ஆரம்பத்தில் வலியாக இருந்தாலும் என்னைப்போன்று இருக்கும் நபர்களை கண்டறிந்து எனக்கென ஒரு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டேன்"
"பெண்கள் நிர்வாணமாக இருந்தாலும் (மன்னிக்கவும்) எனக்கு எதுவுமே தோன்றாது ஆனால் ஓரு ஆணுடன் கை கோர்த்து நடந்தால், அவனோடு இருந்தால் அந்த பீல் வேற லெவல்ல இருக்கும், பொண்ணுங்க இருந்தாலும் பேசவே தோணாது,எந்த வித தவறான எண்ணமும் இருக்காது"
"இதுக்குன்னு நிறைய குழு,அமைப்புலாம் இருக்கு இதை சட்ட ரீதியாக வெற்றியடைய செய்ய பல கூட்டங்களும்,முயற்சிகளும் செய்துகொண்டிருக்கிறோம்,இதைப்பற்றி வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்"
இதெல்லாம் கேட்க கேட்க ஆச்சிர்யம் எனக்கு..
"அது மாதிரி இது உடல் சம்மந்தப்பட்டது மட்டுமில்லை உணர்வு சார்ந்தது உடல் சுகம் எல்லாம் பிறகு தான் , ஆணுக்கு பெண் என்பது மாதிரி ஆணுக்கு ஆண் என நினைக்கிறோம் "
"இதற்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் பற்றி நிறைய கூறினார்"
"விபச்சாரம் போல் இவர்களும் இவ்வளவு நேரத்திற்கு இவ்வளவு கட்டிணம் என செல்கிறார்கள்"
இதை 75ற்கும் மேற்பட்ட நாடுகளில் எதிர்த்து வருகின்றனர், 5 நாடுகளில் மரண தண்டனை வரை உள்ளது, ஆனாலும் இப்போது பல நாடுகளில் ஏற்றுக்கொண்டு வருகின்றனர், ஆஸ்திரேலியாவில் இதற்கு ஆதரவு அதிகம் இன்னும் பல நாடுகளில் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்..
இதில் சரி தவறு என நான் கூறவரவில்லை யாருக்கும் நான் இப்படி ஆக வேண்டுமென்பது ஆசையாக இருந்திருக்க 100 சதவீதம் வாய்ப்பே இல்லை, இது உடல் ,மரபணு,மனம் சார்ந்தது, அரவாணிகள் சமுதாயத்தில் வெளிப்படையாக இருக்கினறனர் ஆனால் இவர்கள் வெளியே சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர் அதுவே வித்தியாசம், மேல சொன்ன அதே ஓரினச்சேர்க்கை (lesbian ) பெண்களுக்கும் பொருந்தும்..
இதெல்லாம் இருக்கட்டும் அவர்கள் அப்படி இருப்பது அவர்கள் தப்பில்லை ,நாம் நம்மால முடிந்த அளவிற்கு அவர்களுக்கு அன்பையும்,அரவணப்பையும் கொடுக்க வேண்டுமே ஒழிய வெறுத்து,கிண்டல் செய்து,அடித்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை..
ஒருவர் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொண்டால் கிண்டல் அடிப்போம் இதில் நான் மட்டும் விதிவிலக்கல்ல அவ்வளவு யோக்கியனும் இல்லை ஆனால் கற்று உணர்ந்து செல்ல வேண்டியது தானே உத்தமம்...
பயணிப்போம்❤️
அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று
பதிலளிநீக்குநன்றி