முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

சாலையை கடப்பவர்களுக்கு விபத்து நடப்பது எப்படி? யாருக்கு பாதிப்பு? எப்படி தவிர்க்கலாம்!! | சாலை விபத்து

காலை வேலைக்கு செல்லும்வழியில் சிக்னல் இல்லாத இடத்தில் இரு பெண்கள் (இளைஞ்சிகள்)  சாலையை கடக்க குடுகுடுவென ஓடியிருக்கிறார்கள்.சிக்னல் பச்சை விழுந்தவுடன் வண்டியெல்லாம் பறக்கும்(பறக்க தானே வேண்டும்) அவரவர்க்கு அவரவர் வேலை. இரு பெண்களையும் மோதியுள்ளார்,மோதிவிட்டு ஓடவில்லை அங்கேயே தான் இருந்தார் எனக்கு தெரிந்து அவர்மேல் தவறில்லை, திடீரென வண்டியை மெதுவாக்கி நிறுத்துவது கடினமான செயல் தான்!!

இடத்த இடியில்  ஒருவருக்கு கால்,முட்டி கையெல்லாம் அடி, இன்னொரு சகோதரிக்கு கை, கால்,நெற்றி, கண்ணத்திலிருந்து ரத்தம் வந்துகொண்டே இருந்தது,எல்லாம் தண்ணீர் கொடுத்து கொண்டு,ஆம்புலன்ஸிற்கு கால் செய்து கொண்டிருந்தார்கள்,அங்கு வந்த அக்காவிடம் ஒரு துணியை வாங்கி நெற்றியில் மெல்ல கட்டி விட்டோம். ஆம்புலன்ஸ் வர ஏற்றி அனுப்பினோம்.இடித்த நண்பருக்கு இன்று செமஸ்டர் தேர்வு நீங்கள் கிளம்புங்க என சொன்னால் எப்படி ஜி போறது.

வண்டியை  திருப்ப முடியவில்லை,சாவி வேறு எடுத்துவிட்டார்கள் அடுத்து போலீஸ் வண்டியை தள்ளி சென்று அவரை கொண்டு கூட்டி சென்றனர் என்னாச்சோ தெரியவில்லை,வழியில் கோவிலில் நின்று கும்பிட்டு சென்றேன்!!♥️🙏
இவற்றை பற்றி எப்போதோ பகிர வேண்டுமென்று நினைத்தேன்.இளைஞர்கள் மட்டுமில்லாமல் தாத்தா ,பாட்டி, ஆண்ட்டி, அங்கில்ஸ் (குட்டீஸ்ங்க கூட ஒழுங்கா பயந்து பார்த்து பார்த்து தான் சாலையை கடக்கிறார்கள்) யார் போனா என்ன,மெயின் ரோடோ,குறுக்கு சந்தோ அதெல்லாம் எனக்கும் தெரியாது நான் ஓம்பாட்டுக்கு தான் போவேன்னு சொன்னா அடித்து தூக்கி விடுவார்கள்.நமக்கும் கஷ்டம் ,இடிப்பவருக்கும் கஷ்டம்,நம்மை நம்பி இருக்கும் குடும்பத்திற்கும் கஷ்டம்.
ஆக தயவுசெய்து வண்டி ஓட்டுபவர்களும் சரி,சாலையில் நடப்பவர்களும், கடப்பவர்களும் பார்த்து சாலையை கடக்கவும்.சிக்னலில் நின்று கடப்பவர்களும் வண்டி வரவில்லையென பச்சையில் இருக்கும்போதே ஓடுகின்றனர். மற்ற சட்டம், கிட்டம்,நியாயம்,நேர்மையெல்லாம் வக்கனையா பேசவேண்டியது ஒரு சாலை விதியை பின்பற்ற முடியவில்லை அப்படி என்ன வேலையோ!

சில மாதங்களுக்கு முன்பு என் மாமா சிக்னல் சிவப்பில் இருக்கும்போது சாலையை கடக்க முயலும்போது ஒரு வேகத்திற்கு பிறந்த எமன் என்மாமா மேல் ஏற்றி (ஓடிவிட்டான்) காலெல்லாம் கூழாக நொறுங்கி ராடு வைத்து மருத்துவமனையில் இருக்கும்போது என்னிடம் சொன்னார் " என்னால இந்த வலி தாங்க முடியலடா இதுக்கு நான் செத்துட்டா நிம்மதியா இருப்பேன்னு சொன்னார்" அவர் ஆசை போல் வலியுடன் தன்னை நம்பி வாழும் தன் குடும்பத்தை விட்டு சென்றார்,அவருக்கு நீரிழிவு நோய் வேறு இருந்தது உடல் ஒத்துழைக்கவில்லை மேலே சென்றார்!!

பார்த்து சூதானமா இருங்கள் மக்களே!!

♥️ அசோக் குமார் சுதர்சனம்

#Accident #Roadaccident #roadcrossing #tamilblogger #blogger #AK #magiclife #pedestrian

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...