முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார்!!



தலைப்பை பார்த்த உடன் பதற வேண்டாம்,நாம் தொலைபேசியில் அழைக்கும் நபர்  நம் அழைப்பை ஏற்க வில்லையென்றால் இந்த வசனம் தான் ஒலிக்கும்.இதனால் எவ்வளவோ குடும்பத்தில்,உறவில் மோதலும்,பிரிவும் நடந்துள்ளது,ஏன் கொலை வரை கூட சென்றுள்ளது.இப்போது இதை "நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் காத்திருக்கவும் அல்லது பின்னர் அழைக்கவும்" என மாற்றி விட்டார்கள்.

நாம் ஒருவருக்கு கால் செய்தால் ஏற்க மாட்டார்கள் அல்லது துண்டிப்பார்கள்,நாமோ சரி ஏதோ வேலையில் இருப்பார்கள் அல்லது வாகனம் ஓட்டிக் கொண்டிருப்பார்கள் நம் அழைப்பை பார்த்த பின்  பேசுவார்கள் என காத்திருப்போம்!!ஆனால் அப்படி ஒன்று நடக்கவே நடக்காது.

 இதற்கு காரணம் :

1.உங்களிடம் பேச விருப்பம் இல்லாமல் புறக்கணிக்கலாம்,
2.பேசும் மனநிலை இல்லாமல் இருக்கலாம் அல்லது பின்பு பேசிக்கொள்ளலாம் என இருக்கும்,

எல்லாருக்கும் ஒரே சூழ்நிலை ,ஒரே மனநிலை எப்போதும் இருக்காது அல்லவா!!!

ஆனால் ஒருவர் அழைத்தால் திருப்பி அழைப்பது ஒரு அடிப்படை நாகரீகம், சிறந்த பழக்கமும் கூட,சரி  வேலை,சூழ்நிலை ஓகே ஆனால் ஒரு கஷ்டம் (Custom) மெஸ்ஸேஜ்  ( I Will Call You Back Later)  செய்யலாமே,அதற்கு 5 நொடி கூட ஆகாது அல்லது ஹெலோ நான் வேலையா இருக்கேன் அப்புறம் கூப்பிட்றேன்னு சொல்லலாம்.சரி இதுவும் முடியல வேலை எல்லாம் முடிந்து இரவு அல்லது இரண்டு நாள் கழித்து கூட கால் செய்து ஒரு மன்னிப்பு கேட்டு பேச தொடங்கலாம்.

சாதாரணமாகவே மனித நம் உள்ளுக்குள் ஆயிரம் கதை எழுதும் "ஒரு வேளை நம்மை புறக்கணிக்கிறார்களோ,போன முறை பேசும்போது நாம் நகைச்சுவையாக சொன்னது அவருக்கு காயப்பட்டிருக்குமோ,என்னை பிடிக்க வில்லையோ"  போன்றவைகள்.

ஆனால் எதிரில் இருப்பவரோ எதுவுமே  ஆகாதது போல நேரில் சந்திக்கும்போது "வா எப்படி இருக்கனு" கேப்பாங்க.ஆனால், நம் மனதில் உள்ள வடு அவ்வளவு எளிதில் சகஜமாக பேச விடாது,அவர்களுக்கும் ஒரு குற்ற உணர்ச்சியே இருக்காது ஏன் நியாபகம் இருக்கானு கூட தெரியாது.

அட என்னப்பா பா கால் எடுக்காதது ஒரு விடயமான்னு கேட்டா ஆமா முக்கியமான விடயம் தானே!!

இதுபோன்ற சிறு காரணங்களால் தான் உறவில் பெரிய பிளவு உண்டாகும்!!

இதை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை,தட்டி விடுவோம்,வந்தா வரட்டும்,பேசுனா பேசட்டும்,நாம் அவர்களை கேள்வி எதுவும் கேட்க தேவையில்லை ,இதே கதை அவருக்கும் நடந்தால் புரியும்!!

உதாரணமாக VIP (வேலை இல்லா பட்டதாரி) படத்தில் தனுஷிற்கும் அவர் அம்மாவிற்கும் சண்டை என கால் எடுக்காமல் நேரில் போய் பேசிக்கலாம் என அலட்சியமாக இருந்ததினால் ஒரு உயிரே போனது!!  (படத்தில்)😛

நானும் சில நேரத்தில் பேசும் மனநிலையில் இல்லாமல் புறக்கணித்தும் அல்லது தாமதமாக பேசியும் உள்ளேன்,உள்ளுக்குள் உறுத்திக்கொண்டே இருக்கும், நாம் செய்வது தவறு எனும்போது திருத்திக்கொள்ள முயன்றேன்,முயல்கிறேன்.

அழைப்பிற்கு பதில் கொடுக்க  முயற்சிப்போமே !!

தேடி வந்த டேக் கேர்,விலகி போனா டோன்ட் கேர் !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

அயலி Webseries எப்படி உள்ளது? பெண்கள் படிக்க தடையா! பார்ப்போம் தரமான சம்பவம்😲🛑🙏

அயலி என்னதான் நல்ல படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தை எப்போது முடித்து அடுத்த சோலியை பார்க்கலாம்  என்று தான் எப்போதும் தோன்றும்.சில படங்கள் தான் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாமே, அடுத்த பாகம் எடுத்தால் நல்லாருக்கும் என தோன்றும். அதே போல் தான் அயலியும் மிகவும் பிடித்திருந்தது.முதல் இது படம் அல்ல சீரிஸ் எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் இல்லை சீரிஸ் பார்க்கும் பழக்கமும் இல்லை.  அயலி மொத்தம் 8 பாகம்,கிட்டததட்ட 4 மணிநேரத்திற்கு மேல். ஆனால் எந்த ஒரு நேரத்திலும் என்னடா எப்படா முடியும், என்ன இந்த காட்சி இப்படி இருக்கு  என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஹீரோ இல்லை,சண்டைக்காட்சி,காதல் ,நம்ம ஊர் திரைப்படங்களில்,நாடங்கங்களில் வருவது போல் தேவையில்லாத ஆணி பாடல்கள் இல்லை. முழு நேரமும் நம்ம சொந்த ஊர்களில் நாம் இருந்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஒவ்வொரு காட்சியும் நடிப்பாக இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது. அயலி - அந்த ஊருக்குள் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து ஓடி விட்டார்களாம் அதனால் அந்த ஊர் எரிந்து நாசமாகியது என சொல்கிறார...