முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

என் 100 நாள் ஓட்ட சவாலின் போது ஓர் நாள் இரவில் ஏற்பட்ட சம்பவங்கள்,சவால்கள்!!!

58/ 100 Days of Running - HDOR |10k❤️🏃🏻‍♂️

இந்த  ஓட்டம் வாழ்வில் மறக்க முடியாதவை!! (27.06.2022)

முடிந்த வரை ஞாயிற்றுக்கிழமை காலையில் ஓட்டத்தை முடித்து விடுவேன்.ஏனெனில்,அன்று நெடுதூர ஓட்டம் அதுமட்டுமில்லாமல் காலை முடித்துவிட்டால் அதோடு செவ்வாய்க்கிழமை தான் ஓட்டம்,திங்கள்கிழமை ஓட்டம் இருக்காது ரெஸ்ட் டே.😍

உறவினர் வீட்டிற்கு வந்தேன்.காலை ஓடலாம் என திட்டம் வைத்திருந்தேன் ஆனால் அங்கே காலை ஏலகிரி மலைக்கு செல்லலாம் என சொல்ல.காலை பைக்கிள் சென்றோம், அங்கு @funderapark  வெவேறு நாட்டு பறவைகள், முயல்கள் அதுஇதுவேன்று பார்த்து முடித்துவிட்டு. பின்பு அங்கிருந்து நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப,சென்று சேர மணி 8.30 ஆகி விட்டது சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஓடலாம் என உள்ளுக்குள் தோன்றினாலும் , கொஞ்சம் படுத்துவிட்டால் அசதியில் உறங்கிவிடுவோம் என பிரெஷ் ஆகி ட்ரெட்மில்லை ஆன் செய்து ஓடத்துவங்கினால் அது சரியாக வேலை செய்யவில்லை. ஷப்பா🤧

ஏற்கனவே நாள் முழுக்க பயணம் 300k வண்டி ஓட்டி உடல் அசதி.சரினு வெளியே கிளம்பினேன் அங்கே எனக்கு அவ்வளவாக வழி தெரியாது கேட்டு கேட்டு மெயின் சாலைக்கு சென்று ஓட்டம் துவங்க.

நெடுஞ்சாலையில் சிறிது தூரம் நன்றாக சென்றது போகப்போக  இருட்டு இதுல ராங் ரூட்டில் 2 வீலர்கள் வர போகப்போக எது சாலை எது மண் எந்த பக்கம் பள்ளம் என தெரியாமல் சாலையில் போகும் வாகனத்தின் வெளிச்சத்தினால் சென்று கொண்டிருந்தேன். (கடந்த முறை வேறு திசையில் சென்றேன் இந்த முறை இந்த பக்கம் சென்று தவறு செய்துவிட்டேன் )😬

ஒரு 4k தாண்டி சாலை பணி நடைப்பெற சாலை மிகவும் குறுகளாகப்படிருந்தது நான் நடைமேடையில் சென்று கொண்டிருந்தேன் (மிகவும் கவனமாக ) திடீர்னு தடுக்கி ஒரு பக்கமாக விழுந்தேன்,ஒரு நிமிடம் எழ முடியாமல் எழுந்தேன்,அங்கு முதலில் பார்க்கவும் யாரும் இல்லை 🥹🤣 கால் முட்டியில் சிறு கீரல்கள் உடலில் சில (வீரனுக்கு இதெல்லாம் சங்கம் பா )🤭

ஓட்டத்தை நிறுத்தி விடலாமா என்ன செய்யலாம் யோசித்துக்கொண்டே நடந்தேன் சரி வீடு வரைக்கும் ஓடி விடுவோம் என சாலை நன்றாக தெரிந்த பின்பு ஓட்டத்தை துவங்கினேன் நன்றாக சென்று கொண்டிருக்கும்போது அடுத்த சம்பவம்.

நாய் குலைக்க  சு என சத்தம் போட்டு நின்றேன். அங்கு ஒருவர் "எங்கப்பா போற ட்ராப் பண்ணவா,எந்த ஊரு இங்க என்ன வந்துருக்க,ரன்னிங்லாம் காலைல பண்ணனும்பானு" கேட்டவற்றுக்கெல்லாம் சிறு விளக்கம் கொடுத்துவிட்டு கிளம்ப முயன்றேன். "டைம் இருக்கா ஒரு 5 நிமிஷம் இருடானு சொல்ல நானோ இல்ல ப்ரோ டைம் ஆகிடுச்சு கிளம்பறேன்னு சொல்ல ஒரு நிமிஷம் டானு" கேக்க (ரைட்டு புரிஞ்சி  போச்சு என்ன மேட்டர்னு ).

"நான்  ஒன்னு கேப்பேன் எஸ் நோனு மட்டும் சொல்லணும்,திட்டக்கூடாது கோபப்பட கூடாதுனு, அடிக்க கூடாது ஒரே முறை ****** டா  ப்ளீஸ் டா சொல்ல" சாரி நாட் இன்டெரெஸ்ட்டேட்னு சொல்ல, ஒரே முறை தொட்டு பாத்துக்கிறேன்  டானு சொல்ல படபடனு ஆக எட்றா ஓட்டத்தை ஓடிட்டேன்,எதோ வண்டிலாம் பின்னாடி வருது நான் அவர் தானோனு பயந்து பயந்து ஓடினேன். என்ன தான் தைரியம் இருந்தாலும் அந்த இடம், முழுக்க இருட்டு ஒரு மாதிரி தான் இருந்தது.(அட பாவிகளா பயபுள்ளயவே பயம் காட்டிட்டீங்களே டா )

8k டன் அதன்பின் சில நாய்களை சமாளித்து (நிஜமா நாய் தாங்க) 10k முடிச்சாச்சு,வீட்டை தேடி கண்டுபிடிச்சி போயாச்சு, வீட்டுல லேட் ஆகிடுச்சுனு கொதிச்சாலும் வெளியே காட்டிக்கல!!!

எல்லாம் ஒரு அனுபவம், பாடம் தான், இரவு நேரத்தில் அதுவும்  தெரியாத இடத்தில் நெடுஞ்சாலையில் ஓடுவதை தவிர்ப்பது நலம், ஓடினாலும் ஊருக்குள்ள ஓடலாம் பகலென்றால் கவலை இல்லை.ஆனால் இரவில் ஆணுக்கே பாத்துகாப்பில்லைஎன்ன கொடுமை!!!

தெரியாதவர்களிடம் பேச்சு கொடுக்காமல் எஸ் ஆவது சிறப்பு.

ஆனா என்ன ஆனாலும், என்ன அசதியாக இருந்தாலும், என்ன சூழ்நிலை ஆனாலும் ஓட்டத்தை முடித்தது பெரும் மகிழ்ச்சி தான்!!

பார்க்கவும் படிக்கவும் கேட்கவும் சிலருக்கு வேடிக்கையாக, பைத்தியக்காரதனமாக தெரியலாம்.ஆனால் அனுபவத்தால் மட்டுமே இவற்றையெல்லாம் உணரவும்,புரிந்து கொள்ளவும் முடியும்.

படிப்பறிவு மட்டும் பத்தாது பட்டறிவும் வேண்டும்!!!

இப்பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல, இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். நான் முன்பே ஓரினசேர்க்கை பற்றி பதிவிட்டுள்ளேன் : https://akmagiclife.blogspot.com/2021/01/blog-post_17.html

 #hardwork #runningtips  #rforrunning  #tamilblogger  #injuryfree  #learning #marathon  #running  #passionate #chennairunners  #tamilyoutubers  #runningintamil #training  #sundaylsd #longrun #gays  #lgbtqcommunity #falldown #nevergiveup  #yelagirihills  #funderapark #waterfalls

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...