சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
சமீபத்தில் ட்ரெண்டில் இருக்கும் குட்டி வடிவேலு எனும் சஞ்சய்♥️சோபியை ஓட்டாத ஆளே இல்லை.
வாட்சப்,முகப்புத்தகம், யூ ட்யூப்னு எங்கு பார்த்தாலும் ட்ரோல்ஸ் தான் அவர்களின் எண்ணமும் ட்ரெண்டிங் ஆவது தான், அவர்கள் மட்டுமல்ல ரீல்ஸ்,டிக் டாக் செய்பவர்கள் அனைவருக்கும் தான் ட்ரெண்ட்ஆக வேண்டும் என்பது தானே விருப்பம்,அனைவருக்கும் தன்னை பலருக்கும் தெரிய வேண்டும்,பாராட்ட வேண்டும் என்பது தானே ஆசையும் கூட.
மற்றவர்கள் போல் இவ்விடயத்தை சிரித்து விட்டு கடந்து செல்ல முடியவில்லை, ஒரு விதமான கோபவும்,கேள்விகளும் எழுகிறது!
என் பார்வை சரியானதா என தெரியவில்லை,அதுமட்டுமில்லாமல் முக்கால்வாசி பேருக்கு எதிரான,முரணான கருத்தாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
17 வயது சிறுவன் 2k கிட் சஞ்சய்,சோபி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு பாராட்டி பேசி வந்து தன் காதலை அப்பெண்ணிடம் சோபியிடம் வெளிப்படுத்தியுள்ளார் ,அவருக்கும் பிடித்து போகவே ஓகேசொல்லியுள்ளார். பெற்றோர்களிடம் இதை தெரிவிக்க அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.இக்கால பெற்றோர் என்பதால் சாதாரணமாக எடுத்து கொண்டுள்ளனர் என நினைக்கிறேன்.
சஞ்சய்யின் இன்ஸ்டா ஐடி ஹேக் செய்துவிட்டார்கள் அதனால் சோபியிடம் அழுவுகிறார் "எவ்ளோ கஷ்ட பட்டு அவ்ளோ followers கொண்டு வந்தேன் தெரியுமா"னு அழுக, அவரோ விடு பேபி எச்சைங்க இன்னொன்னு கிரேட் பண்ணி இதை விட செமையா பண்ணலாம்னு அழுத்துகிட்டே ஊக்கப்படுத்த ,சஞ்சய்யின் அம்மாவோ மருமகளேனு ஒரு வார்த்தையை சொல்ல கப்புன்னு புடிச்சிக்கிட்டாங்க நம்ம மீம் கிரேட்டர்ஸ்.
அதுமட்டுமில்லாமல் சோபியின் பெயரை தன் நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார் சஞ்சய், சோபியுடைய நண்பி சஞ்சையை மோடிவெட் செய்வதேல்லாம் சற்று வேடிக்கையாக இருந்தாலும் அந்த வயதில் இருக்கும் பக்குவத்திற்கு ஏற்றார் போல் நடந்து கொள்கின்றனர்.இதில் ஒன்றும் தவறில்லை நாம் அனைவரும் அப்படி இருந்தவர்கள் தான்!!
★ இது காதலோ இல்லை, அவ்வயதில் ஏற்பட்ட எதிர்பாலினத்தில் மேல் இருக்கும் மோகமாக கூட இருக்கட்டுமே ,இதை இவ்வளவு கலாய்த்து காயப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
★ வளரும் பிள்ளைகளுக்கு இது ஒரு உதாரணமாக இருந்தாலும் இது ஒன்றும் கொலை குத்தம் இல்லை தானே?
அவர்களுக்கு தன் பெற்றோர்கள் புரிய வைத்திருந்தாலே போதும்!!
★ 90ஸ் கிட்ஸ் ஒன்றும் உத்தமர்கள் இல்லை காதல் முதல் அப்பா அம்மா விளையாட்டு விளையாடியவர்கள் இங்கு எத்தனை பேர்?
★ அப்போது அவ்வளவு டெக்னாலஜி இல்லை நேரில் சென்று பேசவே பயம்,இப்போது சாட்டில் எளிமையாக பேசிவிட்டு செல்லலாம்!!
★ முன்பெல்லாம் பெண்களிடம் பேசினாலே சந்தேக கண்ணுடன் பார்ப்பார்கள்,இப்போது அதெல்லாம் மாறி புரிந்துகொள்ள முயல்கிறார்கள்!!
★ ஒருவரின் உருவத்தை வைத்து கிண்டல் செய்வது பாடி ஷேமிங் (Body Shaming) அனைவரையும் சிரிக்க வைக்கும் மீம் கிரேட்டர்ஸ் தெரிந்தோ தெரியாமலோ யாருக்கு என்ன காயம் ஏற்படும்?ட்ரோல் செய்வோரின் மனம் எவ்வளவு வலிக்கும்? அவர்களின் குடும்பத்தில் என்ன பிரச்சனை நிகழும்? இதனால் சமுதாயத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? என்றெல்லாம் சிறிதும் யோசனை இல்லை,உங்களுக்கு தேவை content தானே?
★ இவர்கள் செய்யும் லவ் டிக் டாக் செய்வது தவறு என்றால் வாலிப வாலிபன் செய்யும் டிக் டாக்கும் தவறு தான்!!!
இந்த வயதில் தான் காதல் வரவேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை,இருந்தாலும் அது அப்படி வராது? அது ஒரு உணர்வு கண்டவுடன் காதல் எல்லாம் நிறைய பிரிவில் தான் முடிந்துள்ளது,பேசி,பழகி,புரிந்து வருவதே நிலைக்கும் காதல்!!
இதை கிரேட் செய்வது மட்டுமில்லாமல் ஷேர் செய்து சிரிக்கும் உங்களுக்கும் இதே கேள்விகள் பொருந்தும்!!
கடைசியில் ஏதேதோ அமைப்பின் மூலம் அவர்களை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.நிஜமான பிரச்சனைகளுக்கெல்லாம் குரல் கொடுக்காத இவர்கள் இதற்கு வருவார்கள்.
கேவலம்!!!
யார் என்ன செய்தால் என்ன? நாம் செய்ய வேண்டிய வேலையே அதிகம் உள்ளது, இந்த ட்ரெண்டிங் எல்லாம் பின்பற்றி சிரித்து கொண்டிருக்கும் எவரும் தன் வாழ்க்கையை முன்னேற்ற ஏதாவது செய்திருப்பாரா என பார்த்தால் ஒன்றும் இருக்காது!!!!
♥️♥️
பதிலளிநீக்குSuper da
பதிலளிநீக்குநன்றி♥️
நீக்கு♥️😀 மகிழ்ச்சி
பதிலளிநீக்கு