சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
நேற்று குறைவான விலைக்கு கிடைக்கும் டுபாக்கூர் பொருட்கள் பற்றியும் உடன் கொஞ்சம் அதிகம் பணம் போட்டு தரமான பொருளை வாங்கலாம் என்பதை பற்றி பதிவிட்டிருந்தேன், அப்பதிவை படிக்க கீழ உள்ள சுட்டிக்கு செல்லுங்கள்👇🏻>.
https://ashokkumarsudarsanam.blogspot.com/2021/04/blog-post.html
நான் எப்போதுமே ஒரு பொருளை வாங்கும் முன்பு எனக்கு இப்போ இது அவசியம் தானா? நல்ல பிராண்ட்டா? விமர்சனம் எப்படி இருக்கு? நிறைய வசதிகள் இருந்தாலும் எனக்கு ஏற்ற வசதி இருக்கிறதா? என்பதை பார்ப்பது வாடிக்கை அதுமட்டுமில்லாமல் டெக்கிஸ்களிடம் (Techies) ஆலோசனை கேட்பதும் தான்.
● ஹெட்போன் Realme(1,800),Oneplus (2,000)
Oneplus ஹெட்போன் நண்பனிடம் இருந்து வாங்கி உபயோகப்படுத்தினேன் நல்லா தான் இருந்தது ஆனா ரொம்ப bass இல்லாம நார்மலா டீசென்டடா இருந்துச்சு, ஆஃபீஸ் ஒர்க்குக்குலாம் இது ஓகே பட் மியூசிக் லவ்வர்ஸ் இல்ல நிறைய பயணம் செய்கிறவர்களுக்கு இது செட் ஆகாது!!
சரி realme wireless bluetooth headphone வாங்கலாம்னு முடிவு பண்ணேன்,Mi, Boatலாம் நிறைய பார்த்தேன் ஆனால் அனைத்தையும் விட இந்த விலைக்கு இது சரியாக இருக்கும் என தோன்றியது.
ஒரு ஹெட்போன்க்கு 1,800ரூ கொடுத்து வாங்குனுமானு உள்ளுக்குள்ள கேள்வி இருந்துச்சு.ஆனால் எனக்கு இது தேவை என்பதை விட அவசியமாக இருந்தது.
சில நாள் காத்திருந்து தள்ளுபடியில் 1800ல் இருந்து 1,500க்கு வந்தது *த்தா தாம்பரத்துல இறக்குடா (ஆர்டர போட்றா) போட்டாச்சு!!
300 ரூபாய் மிச்சம்,12 மாசம் வாரண்ட்டி இருக்கு இதுக்கு மேல என்ன வேணும்!!
கொஞ்சம் review மாதிரி பார்க்கலாமே!
★ Magnetic Connection
ஏதாவது பாட்டு கேக்குறோம்,திடீர்னு பாஸ் பண்ணணும்னா இரண்டையும் காதில் இருந்து எடுத்து விட்டால் போதும் முனையில் காந்தம் இருப்பதால் ஒட்டிக் கொள்ளும்,பாஸ்(Pause) ஆகிவிடும்.
★ 11.2 MM Bass Driver Boost
சவுண்ட் தரம் வேற லெவல்,அதுவும் பாட்டு கேக்கும்போதும் படம் பாக்கும்போதும் சிறப்பாக இருக்கு,பாதி சத்தம் வைத்தாலே போதும்👌.
★ Bluetooth 5.0
ஹாலில் மொபைல் வைத்துவிட்டு ரூமில் கால் பேசலாம் அந்த அளவுக்கு connectivity பக்கா.
★ Sweatproof IP × 4
வியர்வை,தண்ணீர் பட்டாலும் ஒன்றும் ஆகாது,இதுவும் டெஸ்டெட்.
★ Flexible Necklace
கழுத்தில் இருப்பதே தெரியாது,24 மணிநேரம் இருந்தாலும் இருக்கிற பீலே இருக்காது,என்னையெல்லாம் இது என்னடா உன் தாலியா கழட்டவே மாட்டியானு கேட்டவங்க பல பேர்,இரவு தூங்கும்போது மட்டும் கழட்டுவேன்🤣.
★ 12 Hrs Playback
முழுவதும் சார்ஜ் ஏற ஒரு 1 மணிநேரம் முதல் 1.15 மணிவரை ஆகிறது, ஆனால் சார்ஜ் நின்னு பேசும் எனக்கெல்லாம் 1 நாளைக்கு மேல வருது தொடர்ச்சியாக யூஸ் பண்ணா நிச்சயம் 1 நாள் முழுவதும் வரும்👌
மொத்தம் மூணு நிறம்
மஞ்சம் கருப்பு -நல்லா இருக்கு பட் அழுக்காக நிறைய வாய்ப்பு அதிகம்
ஆரஞ்சு - ஓகே பட் கலர் ரொம்ப அடிக்குது
பச்சை - பக்கவா ஒரு clasic லுக் இருக்கு
எது பிடிக்கிதோ அதை வாங்கிகொங்க,
வேற என்ன சொல்ல கடந்த 3 மாதங்களாக இதை உபயோகித்து வருகிறேன்,கொடுத்த காசுக்கு ஓர்த்,செம பீல்,என்னடா 1500 கொடுத்து வாங்கினோம்னு ஒரு முறை கூட யோசிக்கவே இல்ல,ஏன்னா பொருள் தரம்.
500ரூ கொடுத்து SECOND COPY இதே போல் வாங்கினால் உடனடி மகிழ்ச்சி (Instant Gratification) கிடைக்கும் ஆனால் நிலைக்காது, ஏதாச்சும் பொருள் வாங்கணும்னா உடனே வாங்காம யோசிச்சி, நிதானமாக வாங்குங்க ஏன்னா பின்னால வருப்பட கூடாது,இதை வாங்கினதுக்கு சந்தோஷம் தான் படனும்!
பொருட்கள் குப்பைகள் அல்ல,நமக்கு தேவையான பொருட்கள் நம் வாழ்வில் நம் வேலையை சுலபமாக்குவதாக இருக்கட்டும்!!
இந்த ஹெட்போன் நீங்க வாங்கணும்னா கீழ லிங்க் கொடுக்கிறேன் வாங்கிகொங்க!!
https://www.amazon.in/dp/B081BCWRGX/ref=cm_sw_r_wa_apa_glc_fabc_4EY0HT02V7QQR5HNK4WW?psc=1
கருத்துகள்
கருத்துரையிடுக
அன்பும் நன்றியும்♥️