முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

நடிகர் விவேக்கின் வாழ்க்கை நம்முள் விதைத்தது என்ன? எப்படி திடீர் மரணம்?

நடிகர் விவேக்கின் மரணம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவரின் இறப்பை!!!

அப்துல் கலாம் ஐயாவின் ஆசிப்பெற்ற ஆளுமை மனிதர் விவேக்,வாழ்ந்தவரை யார் வெறுப்பையும் சம்பாதிக்காமல் பலரின் அன்பை மட்டுமே பெற்று  சென்றுள்ளார் என நினைக்கிறேன்,திரை வாழ்விலும் ஆரோக்கியமான போட்டியாகவே இருந்தது,அவரின் நகைச்சுவையை சிறுவயதில் பார்த்தால் நகைச்சுவையாக மட்டுமே தெரியும், போக போகத்தான் அதில் உள்ள கருத்துகளும், அர்த்தங்களும் புரிய துவங்கும்,சிந்தக்க தூண்டும்.

மதுரையில் பிறந்து பள்ளிப்படிப்பு,கல்லூரியை முடித்து, டெலிபோன் ஆப்ரேட்டராக வேலை யைத் துவங்கி, சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி, நாடகத்தில் துவங்கி சினிமாவில் முடிந்தது அவர் வாழ்க்கை.

திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றியதற்கு இந்திய அரசு அவருக்கு மிகவும் உயரிய விருதான "பத்ம ஸ்ரீ" விருது கொடுத்து கௌரவித்தது.

அப்துல் கலாம் ஐயாவின் ஆசையை முழு மூச்சாக செயல் படுத்தி வந்தார்,அந்த ஆசை ஒரு கோடி மரங்களை விதைப்பது, விவேக் அவர்கள் லட்சக்கணக்கான மரங்களை விதைத்து இப்பூமியை பசுமை ஆக்கிக் கொண்டிருந்தார். ஆனால் இன்னும் முழுமை அடையவில்லை,அவர் விட்டு சென்ற பணியை உயிர் வாழும் நாம் தான் செய்ய வேண்டும்.

அது மரங்களை நடுவது,இரங்கல் தெரிவித்து ஸ்டேட்டஸ் போட்டு,முகப்புத்தகத்தில் பதிவு போட்டால் மட்டும் போதாது,மரங்களை நட வேண்டும், அதை விட முக்கியமான விடயம் பராமரிக்க வேண்டும்.

அவரின் வாழ்விலும் அவ்வளவு வலியும் வேதனையும் இருக்கவே செயத்தது, அவரும் மனிதன் தானே!!
அவர் தாயின் இறப்பு, தன் மகனின் இறப்பு அவரை அனுதினமும் வாட்டி வதைத்தது, அதை பல நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.

இப்போது அவரின் மனைவி ,மகள் சோகக் கடலில் ஆழ்ந்து கிடக்கின்றனர்.

"நல்லா இருந்த மனுஷன் திடீர்னு போயிட்டாருனு சொல்லி கேள்விப்பட்டிருப்போம்"

உயிரோடு இருக்கும் போதே கோபம்,ஈகோவெல்லாம் தூக்கி வீசி அன்பை விதைப்போம்,இறந்த பின்பு அழுது,புலம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. யாருடனாவாது கோபம் இருந்தால் நீங்களே சென்று பேசுங்கள்,தவறில்லை.நிச்சயமில்லாத வாழ்க்கை, யாருக்கும் தீங்கு விளைவிக்காமல்,நல்லதை விதைத்து செல்லுங்கள், நீங்கள் மறைந்த பின்பும் வாழ்வீர்கள்.

தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்பட்டு மாரடைப்பு வந்ததா என தெரியவில்லை, தனிப்பட்ட முறையில் இந்த vaccine மேல் நம்பிக்கை இல்லை,அவரவர்களின் விருப்பம்,சூதனமா இருந்துகொங்க,இன்னும் பலரை இழக்க வேண்டாம்.

அவரின் வசனத்தோடு முடிப்போம் "இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்".

இவரின் வாழ்க்கை சிறந்த உதாரணம்,நம் வாழ்வின் வெற்றிக்கு.

ஆழ்ந்த இரங்கல்!!!!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

அயலி Webseries எப்படி உள்ளது? பெண்கள் படிக்க தடையா! பார்ப்போம் தரமான சம்பவம்😲🛑🙏

அயலி என்னதான் நல்ல படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தை எப்போது முடித்து அடுத்த சோலியை பார்க்கலாம்  என்று தான் எப்போதும் தோன்றும்.சில படங்கள் தான் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாமே, அடுத்த பாகம் எடுத்தால் நல்லாருக்கும் என தோன்றும். அதே போல் தான் அயலியும் மிகவும் பிடித்திருந்தது.முதல் இது படம் அல்ல சீரிஸ் எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் இல்லை சீரிஸ் பார்க்கும் பழக்கமும் இல்லை.  அயலி மொத்தம் 8 பாகம்,கிட்டததட்ட 4 மணிநேரத்திற்கு மேல். ஆனால் எந்த ஒரு நேரத்திலும் என்னடா எப்படா முடியும், என்ன இந்த காட்சி இப்படி இருக்கு  என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஹீரோ இல்லை,சண்டைக்காட்சி,காதல் ,நம்ம ஊர் திரைப்படங்களில்,நாடங்கங்களில் வருவது போல் தேவையில்லாத ஆணி பாடல்கள் இல்லை. முழு நேரமும் நம்ம சொந்த ஊர்களில் நாம் இருந்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஒவ்வொரு காட்சியும் நடிப்பாக இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது. அயலி - அந்த ஊருக்குள் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து ஓடி விட்டார்களாம் அதனால் அந்த ஊர் எரிந்து நாசமாகியது என சொல்கிறார...