முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

பாட் லக் போலாம் வாங்க?

பாட்லக்கா அப்படினா என்ன?

சிலருக்கு தெரிந்தும், பலருக்கு தெரியாமலும் இருக்கலாம், பாட்லக் என்றால் கூட்டாஞ்சோறு என கூறலாம்.

 அதாவது ஒரு குழுவாக ஒரு இடத்திலோ அல்லது ஒருவர் வீட்டிலோ ஒன்று கூடுவார்கள், ஒவ்வொருவரும் ஒரு உணவை செய்து கொண்டு வர வேண்டும் ,பலரும் ஒரே இடத்தில் பல வகையான உணவுகளை ருசிக்கவும்,ஒன்றாக மனிதர்களுடன் சிரித்து மகிழவும்,நம் அன்பை பகிரவும் பெறவும் இருக்கும்  ஒரு நிகழ்வு தான் பாட்லக்!!!

சில  நாட்களுக்கு முன்பு நான் இருக்கும் குழுவில் பாட்லக்  செய்ய திட்டம் போட்டு இருந்தார்கள்,விருப்பமுள்ளவர்கள் இணையலாம் என கூற நானும் இணைந்தேன் (கடைசி நேரத்தில்) லிஸ்ட் போட்டோம் ,யார் யார் என்னென்ன உணவுகள் கொண்டு வருகிறோம் என அதற்கு ஒரு லிஸ்ட்...!

எந்த பாட்லாக்காக இருந்தாலும் அதில் சோறு,பொரியல்,பிரியாணி,சப்பாத்தி,ஸ்னாக்ஸ்,இனிப்பு,காரம்,ஜூஸ் என  அனைத்தும் இடம் பெற்றால் சிறப்பு!!

நான் சென்ற பிறகு ஒவ்வொருவராக வந்து இணைந்தார்கள்,அனைவரிடமும் பேசி மகிழ்ந்து கொண்டோம், பிரெட் அலவா செய்யவும்,சப்பாத்தி செய்யவும் உடனிருந்து லைட்டா உதவினோம்.

பின்பு அனைத்தையும் அழகாக வைத்து சுற்றி அமர்ந்தோம் ,அடுத்து என்ன சாப்பிடதொடங்கி இருப்போம் என நினைத்தால் அது தான் தவறு!!

அனைத்தும் சேர்ந்தா மாதிரி ஒரு போட்டோ,ஒவ்வொரு உணவையும் தனித்தனியா அழகாக புகைப்படம் எடுத்தோம்...!

அடுத்து எல்லா உணவையும் ஒரே தட்டில் கொஞ்சம் கொஞ்சம் வைத்து உண்ண தொடங்கினோம் முதலில்
 பிரியாணி,
 ரைத்தா,
 சப்பாத்தி, 
பன்னீர் பட்டர் மசாலா,
சிக்கன் தொக்கு,
வெஜ் புலாவ்
வடை,
போங்கடா,
தர்பூசணி ,
இட்லி,
சட்னி,
பிரேக் ஹல்வா,
ஷாஹி துக்டா (பிரெட் ஸ்வீட்)
பிளாக் கரண்ட் கேக்,

பினிஷிங் டச் ஐஸ் கிரீம்
பன்னீர் சோடா

ஏப்ப்ப் ( ஏப்பம்)அடடா ஒவ்வொன்றும் தனித்துவம்,ஒவ்வொருவரின் பக்குவமும் மெய் சிலிர்க்க வைத்தது,ஒரே இடத்தில் அதனை உணவும் அதுவொரு அன்பு கலந்தது, உள்ளே உணவு செல்ல செல்ல மனமோ குளிர்ந்து கொண்டே இருந்தது.

அடுத்து என்ன எப்பவும் போல தான் கொஞ்சம் நேரம் பேசிட்டு விதவிதமா செல்பி குல்பியேல்லாம் எடுத்துட்டு போக மனத்தில்லாமல் கிளம்பினோம்!!

எந்த வித எதிர்பார்புமில்லாமல் அன்பை மட்டுமே எதிர்பார்த்து இருக்கும் கூட்டம் இது, இதில் உணவும் சேர்ந்தால் அது ஒரு பெருவுணர்வு!!!!!

நீங்களும் இதுபோன்ற பாட்லக் முயற்சிக்கலாம், அதாங்க கூட்டாஞ்சோறு முன்னொரு காலத்துல அத்தை, பெரிம்மானு விடுமுறை நாட்களில் கொண்டு வரும் உணவுகளை ஒன்றாக உண்வோமே அது போல் நீங்கள் உங்கள் நண்பர்கள்,பணிபுரியும் நண்பர்களுடன்,அல்லது நீங்கள் சார்ந்து இருக்கும் குழுவோடு முயற்சிக்கலாம்!!

அன்பு பெருகும், புரிதல் அதிகமாகும்,கற்றல் எப்போதுமே இருக்கும்!!!

ரெடியா??

கருத்துகள்

கருத்துரையிடுக

அன்பும் நன்றியும்♥️

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

avatar the way of water எப்படி?❗ ஒரு முறை பார்க்கலாமா - திரை சுமர்சனம்😫

Avatar The Way Of Water  (விமர்சனமாக கூட எடுத்துக்கொள்ளலாம்) ஏதாவது எழுத வேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் என்னத்த எழுதனு விட்டுவிடுவேன் ஆனால் இந்நேரம் ஆகியும் இதை நிச்சயம் எழுதுவதற்கு காரணம் உங்களின் மேல் உள்ள பாசம் நீங்களும் என்னைப் போல் அவஸ்தை பட வேண்டாமென்பதால்...... 2009ல் வெளியான அவதார் 1 எங்கள் மாமா வீட்டில் 3டி டிவியில் பார்த்தோம் நன்றாக தான் இருந்தது.இப்போதும் எனக்கு பெரிதாக இப்படம் செல்வதில் விருப்பமில்லை தம்பியும் ,நண்பனும் கேட்டதால் சென்றேன். அதுவே தாமதமாக தான் சென்றோம் நல்ல வேலை கொஞ்ச நேரம் தப்பித்தேன்😲. படத்தின் கருவே அவதார் தன் குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்,வனவாசியாக இருந்த அவர்கள் தன் குடும்பத்தை காப்பாற்ற கடல்வாசியாக மற்றொரு இனம் வாழும் தீவிற்கு சென்று அடைக்கலம் கேட்டு செல்கின்றனர். அங்கு அவர்களை ஏற்றுக்கொண்டார்களா? வில்லன் எப்படி இவர்களை கொள்ள முயற்சிக்கிறான்,யார் பிழைத்தார்கள்,உயிருடன் இருந்தார்கள் என்பது  க்ளைமாக்ஸ்.   ஆரம்பம் முதல் படம் முடியும் வரை "அய் யய்யோ எப்படா படம் முடியும்" ஏண்டா இப்படி கொல்றீ...