முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனிதம் மடிந்து கொண்டிருக்கிறதா,மலர்ந்து கொண்டிருக்கிறதா? இப்புவி அனைத்து உயிர்களுக்குமானது தானே!!!

கடந்த வாரம் இரவு 10 மணி இருக்கும்  வீட்டிற்கு அருகே  வண்டியில் அமர்ந்துகொண்டு நானும் என் நட்பும் பேசிக்கொண்டு இருந்தோம்.

திடீர்னு டமால்னு சத்தம் சரி என்னனு மெயின் ரோட்டிற்கு சென்று பார்த்தால் நாய்கள்  குலைத்துக் கொண்டு மாட்டை துரத்திக்கொண்டிருந்தது போல, மாடு சாலை பக்கம் ஓட அந்த நேரம் பார்த்து வேகமா வந்த கார் மாட்டின் வலது பக்கத்தில் ஒரே இடி கார் கண்ணாடி,bonnet எல்லாம் சப்பை ஆகி விட மாடு வலியில் துடித்து நடுரோட்டில் சென்று ஆடி அசைந்து நின்றது.

கார் ட்ரைவர் வந்த வேகமும் அதிகம் தான், சரக்கா என்னனு தெரியல,நாய்கள் துரத்தி மாடு சாலையில் ஓடியதால் இடித்தாரா என தெரியவில்லை  இதில் யாரை குத்தம் சொல்வது!!! அவர் ஒரு நிமிடம் வெளிய வந்து காருக்கு என்ன ஆச்சுன்னு செக் பண்ணிட்டு நாங்க வந்ததை பார்த்துட்டு எஸ்கேப் ஆகிட்டாரு.

மாடு சாலையின் நடுவில் நின்று கொண்டிருந்தது அதனால் சிறிதும் நகர முடியவில்லை திடீரென இரு காவலர்கள் வர என்னாச்சனு கேக்க, நாங்களும் சாலையில் வசிக்கும் ஒரு பெரியவரும் சொல்ல
அவரு தனக்கு தோன்றிய வசனத்தை சொல்லிட்டு டாட்டா காட்டிவிட்டார்..

"ஆமா கண்ட நேரத்துல மாட்டை அவுத்து விட்டுடுவாங்க,ஏன் வீட்டுல கட்டி வச்சா என்னனு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க"!!!

இப்படி சாலை நடுவில் இருக்கே, மறுபடியும் இதனால் ஏதும் விபத்து நடந்துவிடப் போகிறது என சிறு யோசனையும் இல்லாமல் போய்ட்டாங்க, இதில் காவல்துறை உங்கள் நண்பன்ல..! (சிலரே இப்படி)

பல மக்கள் கண்டும் காணாதது போல் சென்றனர் இருவர் மட்டும் மாட்டை சாலை ஓரத்திற்கு நகர்த்தி செல்ல உதவினர், வரும் வண்டிகளையெல்லாம் சைகை காட்டி ஓரமாக போகச் சொல்லி  மிகவும் சிரமப்பட்டு கட்டையை வைத்து பின்னால் வைத்து சிறுஅழுத்தம் கொடுத்து நகர்த்தி விட்டோம்"..

வீட்டில் வளர்க்கும் மாடு தான் காதில் tag இருந்தது, உதவி செய்த நபர் ஒருவர் மாடு வளர்க்கிறார் போல,  இன்னும் 3 மாசத்துல குட்டி போட்டுடும்னு சொன்னார், ஒரு பக்கம் வயிறு உருண்டையா வீங்கிகிட்டே இருக்கு உடலெல்லாம்  சிறு சிறு கீறல்கள் என்ன  செய்வதென்றே தெரியவில்லை.

தண்ணீர் மற்றும் சில செடிகள் கொடுத்தோம் எதுவும் சாப்பிடவில்லை, பின் மாடு வளர்க்கும் நண்பன்  ஒருவருக்கு கால் செய்தொம் ப்ளூ கிராஸிற்கு தகவல் தெரிவிக்க சொன்னார்..

உடனே நெட்ல இருந்து நம்பர் எடுத்து மெஸ்ஸேஜ் பண்ணினோம் எல்லாம் சொன்னேன் என்ன பிரச்சனை? என்ன இடம்?னு ..

"இது 108 சர்விஸ் மாதிரி இல்லை கொஞ்சம் தாமதமாகும் தகவல் தெரிவித்தமைக்கு நன்றினு சொன்னாங்க, காலைல சாரி எங்களால் ரீச் பண்ண முடியலனு சொல்லிட்டாங்க"..

எங்களுக்கோ எண்ணம் முழுக்க அதன் மேல் தான் மறுநாள் காலை மறுபக்க சாலை ஓரமாக நடந்து கொண்டிருந்தை நண்பன் பார்த்து தகவல் தெரிவித்தான் இப்போது எந்த மாட்டைப் பார்த்தாலும்  அதன் நியாபகம் தான் வருகிறது"..

"இப்போ எங்க இருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல, ஆனா நல்லா இருக்கணும்".

மனிதம் சாகவில்லை உயிரோடு தான் ,இருக்கிறது என ஒருபக்கம் சொல்லிக்கொண்டிருக்க மறுபக்கம் இறந்துகொண்டிருக்கிறது என்பதை இதுபோன்ற சம்பவங்கள் சொல்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

இது அனைத்து உயிர்களுக்குமான  புவி, எனக்கென்னனு போகாம முடிந்தளவு நம்மால் செய்ய முடிந்த உதவிகளை செய்துவிட்டு சென்று கொண்டே இருப்போம், இப்புவி அனைத்து உயிர்களுக்கும் தான் மனிதர்களுக்கு மட்டுமல்ல..!..

பயணிப்போம்!!

கருத்துகள்

  1. Manitham saga villain. Sila manithargal than manithathai maranthu vitaargal. Arumaiyana pathivu. Manitham kaapom. Nalla manitharaai vazhvom ❤️

    பதிலளிநீக்கு
  2. Manitham saga villai. Sila manithargal than manithathai maranthu vitaargal. Arumaiyana pathivu. Manitham kaapom. Nalla manitharaai vazhvom ❤️

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

அன்பும் நன்றியும்♥️

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...