முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

வாழ்வின் மிகப்பெரும் வலு நெருக்கமாமவரும் இழப்பு,அதுவும் தான் பெற்ற பிள்ளைகளில் மரணம்? இதை கடக்க என்ன செய்யலாம்?

வாழ்வில் மிகப்பெரிய வலி என்றால் அது மரணம் மட்டுமே.

நம் வாழ்வில் ஏராளமான  மரணத்தை கண்டிருப்போம்,ஆனால் அது வெறும் மரணச் செய்தியாகவே வந்து சில மாதங்களில் மறந்துவிடும்.நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் இழப்பு தாங்க முடியாத ஒன்று.அது பிரிந்தாலும் சரி இறந்தாலும் சரி.

தாய்,தந்தை இழப்பை கூட மகனோ மகளோ தாங்கி அவர்கள் நினைவில் வாழ்ந்து கடந்து விடுகின்றனர்.ஏனெனில் அவர்களுக்கு குடும்பம்,குட்டி என வந்துவிடுவதால் அப்படியே வாழ்க்கை சென்று விடுகிறது.

ஆனால் பெற்றோர்கள் தன் குழந்தையின் (என்ன வயதானாலும் குழந்தை தானே) மரணத்தை பார்ப்பது வாழ்வில் மிகப்பெரிய கொடுமை.அந்த வலியை அம்மாவும்,அப்பாவும் வாழ்க்கை முழுக்க சுமப்பார்கள்.மிகவும் கொடுமையானது.வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் உணர்வார்கள். தன் மகன்/ள் உடல் முன்பு அவர்கள் கதறும் கடைசி மரண ஒளங்கள் கேட்க  முடியாது.இருக்கின்ற மொத்த வலியும் கண்ணில் கண்ணீராக தெரியும்.இதுவரை நிகழ்ந்த,அவர்கள் குணங்களை ல்,பிடித்த உணவுகளை நண்பர்களை பற்றியெல்லாம் கூறி எழுந்து வாடா செல்லமே என அழுகும் போது ஆத்மா மொத்தமும் கதறும்.

என் வாழ்வில் தன் மகனை/மகளை இழந்து தினம் தினம் வாடும் எத்தனையோ பெற்றோர்களை கண்டுள்ளேன் எங்கு எப்போது பார்த்தாலும் அவற்றையே பேசுவார்கள், ஏன் வாட்சப் ஸ்டேட்டிஸ் வரை இருக்கும் அவர்களின் அழுகல் குரல்.ஏனெனில் அவர்களின் மொத்த வாழ்க்கையே தன் பிள்ளைகள் தான்.

 இவற்றை மறக்க முடியாது என்பது நிதர்சனம் ,ஆனால் கடக்க முடியும்.முதலில் அவர்/ள் இறந்து விட்டார்கள் இனி திரும்ப வர மாட்டார்கள் என்ற உண்மையை ஆழ்ந்து உணர வேண்டும்.எவ்வளவு அழ முடியுமோ அவர்களை பற்றி பேச முடியுமோ அழுது விடுங்கள்.எப்போது தோன்றினாலும் அழலாம் அவர் படத்தின் முன்பு பேசலாம் ,மற்ற உணர்ச்சிகளை போல அழுகை என்பதும் ஓர் உணர்ச்சி.அதை அடக்க நினைத்தால் மேலும் விபரீதம் தான்.தேவையற்ற மனநோய் உருவாகி உடல் நோய்க்கு வழி வழிவகுத்துவிடும்.இறந்தவரை நினைத்துக்கொண்டே இருப்பவரை பார்க்காமல் விட்டு விடாதீர்கள்.

சில நாட்கள் எங்கு ஆறுதல் கிடைக்குமோ,அன்பு கிடைக்குமோ அங்கு சென்று வாருங்கள்.வேறு விடயத்தில் கவனம் செலுத்துங்கள்.இவற்றையெல்லாம் செய்வது கடினம் தான் ஆனால் முடியாத ஒன்றல்ல.
இதையெல்லாம் மறக்க துவக்கத்தில் மனம் ஒத்துழைக்காது,அது  அப்படியே அழுது கொண்டிருக்கவே விரும்பும்,அவற்றை மாற்ற வேண்டியது நம் கையில் உள்ளது.

உடல் வலி என்றால் மருத்துவரை பார்ப்பது போல் மனதிற்கு உளவியல் மருத்துவரை பார்ப்பது சிறந்தது.

எப்போதும் சொல்வது தான் வாழும்போதே அன்பாய், அரவனைப்பாய் இருந்துவிடுங்கள்,இறந்த பின் அழுது புலம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.

கடைசியாக அசுரன் பட வசனத்தில் முடிக்கிறேன் "புள்ளைகள் முகத்த மறந்து வாழற மாதிரி சாபம்  பெத்தவங்களுக்கு வேற எதுவுமே கிடையாது மச்சான்".

"போனவங்களை நினைச்சி இருக்கவங்களை இழந்திட கூடாது மச்சான்"

பயணிப்போம்!!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

avatar the way of water எப்படி?❗ ஒரு முறை பார்க்கலாமா - திரை சுமர்சனம்😫

Avatar The Way Of Water  (விமர்சனமாக கூட எடுத்துக்கொள்ளலாம்) ஏதாவது எழுத வேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் என்னத்த எழுதனு விட்டுவிடுவேன் ஆனால் இந்நேரம் ஆகியும் இதை நிச்சயம் எழுதுவதற்கு காரணம் உங்களின் மேல் உள்ள பாசம் நீங்களும் என்னைப் போல் அவஸ்தை பட வேண்டாமென்பதால்...... 2009ல் வெளியான அவதார் 1 எங்கள் மாமா வீட்டில் 3டி டிவியில் பார்த்தோம் நன்றாக தான் இருந்தது.இப்போதும் எனக்கு பெரிதாக இப்படம் செல்வதில் விருப்பமில்லை தம்பியும் ,நண்பனும் கேட்டதால் சென்றேன். அதுவே தாமதமாக தான் சென்றோம் நல்ல வேலை கொஞ்ச நேரம் தப்பித்தேன்😲. படத்தின் கருவே அவதார் தன் குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்,வனவாசியாக இருந்த அவர்கள் தன் குடும்பத்தை காப்பாற்ற கடல்வாசியாக மற்றொரு இனம் வாழும் தீவிற்கு சென்று அடைக்கலம் கேட்டு செல்கின்றனர். அங்கு அவர்களை ஏற்றுக்கொண்டார்களா? வில்லன் எப்படி இவர்களை கொள்ள முயற்சிக்கிறான்,யார் பிழைத்தார்கள்,உயிருடன் இருந்தார்கள் என்பது  க்ளைமாக்ஸ்.   ஆரம்பம் முதல் படம் முடியும் வரை "அய் யய்யோ எப்படா படம் முடியும்" ஏண்டா இப்படி கொல்றீ...