முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

பதிவு செய்த பேருந்து தாமதமானால் என்ன செய்யலாம்? | ஓட்டுனர்கள் வாழ்க்கை இப்படிப்பட்டதா?🙏♥️

வெளியூருக்கு செல்லும்போது நாம்  தனிப்பட்ட  இருசக்கர அல்லது மகிழுந்து உபயோகிப்போம், நெடுதூர பயணமென்றால் பெரும்பாலும் ரயில், அது கிடைக்காத பட்சத்தில் தனியார் அல்லது அரசு பேருந்து ல் இன்னும் சொகுசாக வேண்டுமெனில் தனியார் ஆம்னி பேருந்துகள் செமி ஸ்லீப்பர் அல்லது ஸ்லீப்பர் இன்னும் வசதியாக இருக்கும்.என்ன கொஞ்சம் பயணசீட்டின் விலை கொஞ்சம் அதிகம் (மாவுக்கேத்த பணியாரம் ) ஆனால் தலையானி, போர்வை,தொலைக்காட்சி(புதிய படம்),சார்ஜ் போட்டுக்கொள்ளலாம்,நிம்மதியாக உறங்கி நம் இடத்திற்கு சென்றடையலாம்.

ஆனால் ஓட்டுனர் பக்கத்தில் உட்கார்ந்து நாம் கொஞ்ச நேரம் பயணித்தால் உள்ளே சென்று தூங்கவே மனம் வராது  அவ்வளவு பீதி.

இப்பதிவு எதற்கென்றால் ,சில நேரம் நாம் பதிவு செய்த பேருந்து அல்லது மகிழுந்து எதுவானாலும் முக்கால்வாசி சரியான நேரத்திற்கு வந்துவிடும்.சில நேரம் நகரத்தில் வண்டி நகராமல் மணி நேரமாக ஊர்ந்து சென்று உங்கள் இடத்திற்கு வந்தடையும்.லைவ் ட்ராக்கிங் இருந்தால் அதில் பார்த்துக்கொள்ளலாம் இல்லையெனில் 10 முதல் 20 நிமிஷம் வரை காத்திருக்கலாம்.அதற்குள் 50 முறை அழைப்பு விடுத்தால் அவர்கள் நம் அழைப்பை எடுத்து பதில் அளிப்பதா,வண்டியை ஓட்டுவதா,இது இன்னும் தாமதத்திற்கு தான் வழி வகுக்கும்.
கத்தாமல் நிலமையை புரிந்து கொண்டு பயணிக்க துவங்குங்கள்.

அதுமட்டுமின்றி உங்களுக்கு தாமதமான பிறகு அடுத்த நிறுத்தத்தில் இருப்பவருக்கு சரியான நேரத்திற்கு சென்றடயாத போது அவர்கள் அழைப்பு விடுத்துக்கொண்டே இருக்க ஓட்டுனருக்கு  மன உளைச்சல் ஆகும்.

இதில் தாமதமாகும் நேரத்தை தான் அவர்கள் நெடுஞ்சாலையில் கொஞ்சம் வேகம் கூட்டி அந்த நேரத்தை ஈடு கட்டி சரியான நேரத்திற்கு சென்றடைகின்றனர்.காலை ஒரு பயணம் முடித்து மதியம் ஓய்வு,வண்டியை சுத்தம் செய்யுதல்.மாலை இன்னொரு பயணம்.இப்படி தான் செல்கிறது ஓட்டுனர்களின் வாழ்க்கை.

அதே போல் பயணம் செல்லும் வழியில் அவர்கள் சில நிறுத்தத்தில் நிற்பார்கள் அங்கேயே உங்கள் கழிவு நீக்க வேலைகளை முடித்துவிடுங்கள்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை சென்று நிறுத்தச் சொல்லி கேட்டால் ,பயண நேரம் அதிகரிக்கும்,ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்திற்காக பயணம் செய்வார்கள்,அப்படியே முடியவில்லையெனில் கேட்டால் நிச்சயம் நிறுத்துவார்கள்.

ஓட்டுனர் வேலை மிகவும் கவனமாக செய்ய வேண்டியது,கொஞ்சம் கண் அசைந்தாலும் அவ்வளவு உயிரும் புஸ் தான்.சில குறைகள் இருந்தாலும்,அவர்கள் நம்மை பத்திரமாக நம்மை சேர்த்தமைக்கு உங்கள் பயணம் முடியும்போது சிரித்த முகத்துடன் நன்றி கூறுங்கள் அவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்.

#bustravel #omnibus #driverlife #travel #travelling #luxurybus #customer

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

அயலி Webseries எப்படி உள்ளது? பெண்கள் படிக்க தடையா! பார்ப்போம் தரமான சம்பவம்😲🛑🙏

அயலி என்னதான் நல்ல படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தை எப்போது முடித்து அடுத்த சோலியை பார்க்கலாம்  என்று தான் எப்போதும் தோன்றும்.சில படங்கள் தான் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாமே, அடுத்த பாகம் எடுத்தால் நல்லாருக்கும் என தோன்றும். அதே போல் தான் அயலியும் மிகவும் பிடித்திருந்தது.முதல் இது படம் அல்ல சீரிஸ் எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் இல்லை சீரிஸ் பார்க்கும் பழக்கமும் இல்லை.  அயலி மொத்தம் 8 பாகம்,கிட்டததட்ட 4 மணிநேரத்திற்கு மேல். ஆனால் எந்த ஒரு நேரத்திலும் என்னடா எப்படா முடியும், என்ன இந்த காட்சி இப்படி இருக்கு  என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஹீரோ இல்லை,சண்டைக்காட்சி,காதல் ,நம்ம ஊர் திரைப்படங்களில்,நாடங்கங்களில் வருவது போல் தேவையில்லாத ஆணி பாடல்கள் இல்லை. முழு நேரமும் நம்ம சொந்த ஊர்களில் நாம் இருந்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஒவ்வொரு காட்சியும் நடிப்பாக இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது. அயலி - அந்த ஊருக்குள் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து ஓடி விட்டார்களாம் அதனால் அந்த ஊர் எரிந்து நாசமாகியது என சொல்கிறார...