முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

குறைவான விலைக்கு கிடைக்கும் டுபாக்கூர் பொருட்கள் வேண்டாம் | விழிப்புணர்வு பதிவு

எனக்கு ப்ளூடூத் ஹெட்போன் அவசியமாக இருந்தது,நிறைய அழைப்புகள், அதுமட்டுமில்லாமல் podcast ,பாடல்கள் ,புத்தகங்கள் பற்றி கேட்பது என எப்போதும் உபயோகமாக இருக்கும்.

Realme Wiress  Earphone மேல் ஒரு ஆசை பார்த்தால் விலை 1,800 ஓவா சரி பொறுமையா வாங்கிக்கலாம்னு இருந்தேன் ,நண்பர் ஒருவர் "நான் பாரிஸ்ல தான் இந்த ஹெட்போன் வாங்கினேன் 400 ரூபாய் தான்னு சொன்னார்,யூஸ் பண்ணி பார்த்தேன் நல்லா தான் இருந்துச்சு ஒரிஜினல் மாதிரி. சரி நானும் வாங்கலாம்னு மெனக்கெட்டு பாரிஸ் வரைக்கும் போய்ட்டு பேரம் பேசி வாங்கிட்டு வந்தேன் 800ரூ சொன்னாங்க 600 ரூபாய்க்கு வாங்கினேன்.

ஒரிஜினல் மாதிரி பேக்கிங் (உள்ளுக்குள் 600 ரூபாய்க்கு எப்படின்னு ஒரிஜினல்னு  கேள்வி இருந்தாலும் 600 ரூபாய்க்கு ஓகேனு வந்தாச்சு) 1 வருஷம் வாரண்டினு சொன்னாங்க.

ஓரு 1 வாரம் நல்லா இருந்தது அப்போ கூட சரியா கனெக்ட் ஆகவில்லை,சவுண்ட் சரியாக இல்லை,சார்ஜ் நிக்கல அண்ட் ஒரு சைட் சுத்தமா ஒர்க் ஆகாம போச்சு,ஒரு பக்கம் அறுந்து தொங்கிடிச்சு, சரினு கடைக்காரருக்கு கால் பண்ணி அட்ரஸ் கேட்டா ,கடை அட்ரஸ் கூட தெரியல எப்படி என்கிட்ட வாங்குனிங்கனு கேக்குறாப்ல.

அங்க ஒரு 50,100 கடை ஒரே மாதிரி இருக்கும்,சரி நேரா போவோம்னு முடிவு செஞ்சி கிளம்பினேன், பயணம் ஒரு மணிநேரம், தேடி அளஞ்சி கடைய கண்டுபிடிக்க ஒரு அரை மணிநேரம்,ஓனர் வர ஒரு அரை மணிநேரம்,சரி நமக்கு வேற குடுத்துடுவாஞனு ஆசையோடு போய்ட்டு  கேட்டா,
"600 ரூபாய்க்கு வாங்கிட்டு எப்படி வாரண்ட்டி கேக்குறீங்க,முடியாதுன்னு திமிரா பேச,நானும் அப்புறம் எதுக்கு இந்த ஏமாத்து வேலை,நல்லா நாலு கேள்விய கேட்டு வர,அவருக்கு  சுத்தமா சொரனையே இல்ல,ரொம்ப கேவலமான நடவடிக்கை,வேணும்னா என் கடைக்கு வராதீங்கனு வேற திமிர்ரா பேசுராறு, 
அன்னைக்கு வேற வேலை இருந்துச்சு போகணும் இல்லைனா கிழி கிழினு கிழிச்சிருக்கலாம்,

மொத்ததுல நேரமும்,பணமும் தான் வீண்!!

இதே போல ஸ்மார்ட் வாட்ச்,ப்ளூடூத் ஸ்பீக்கர்னு,டி ஷர்ட்,ஷூஸ்னு நிறைய ஒரிஜினல் மாதிரியே வருது, சில கடைல இதை செகண்ட் காப்பினு சொல்லியே கொடுப்பாங்க,இதுபோன்ற திருட்டு கடை,வாட்சப்களில் விற்கும் நபர்கள் 2,000 பொருளை 400 ரூபாய்க்கு இருக்குனு சொல்லுவாங்க இருக்கு உண்மை தான்.ஆனா ஒரிஜினல் இல்ல,கொஞ்ச நாளில் டமால் ஆகிடும் யாரையும் ஒன்னும் கேக்க முடியாது.

பாரிஸ் போன்ற உலக டுபாக்கூர் கடைகளில் இதுபோன்ற பொருட்களை வாங்க வேண்டாம், வேற காசே இல்லைனா ஆனா அந்த பொருள் வேணும்னா அதே மாடலில் சின்ன சின்ன பிராண்ட் பொருட்களும் வாரண்ட்டியுடன் கிடைக்கும்.அதை வாங்கி உபயோகப்படுத்தலாம்.

இல்ல கொஞ்ச நாள் வெய்ட் பண்ணி,எக்ஸ்ட்ரா பைசா போட்டு  ஒரிஜினல் வாங்குங்க வித் பில்லோட. Festival time offerல் வாங்கினால்  இன்னும் தள்ளுபடி இருக்கும். தரமான பொருள்,ரொம்ப நாள் வரும்,அது கொடுக்கிற பீல் வேற.....!

அட "மாவுக்கு ஏத்தா பணியாரம் தாங்க"

கடின உழைப்புக்கு பின் வரும் பணத்தை,கடினமாக உழைக்கும் பொருளுக்கு செலவிடுவோம்!!

அடுத்த பதிவில் என்ன ஹெடிபோன் வாங்கினேன் +  கொஞ்சம் ரிவியூ பார்க்கலாம்!

உங்களுக்கு இதுபோன்ற அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்,
இதுபோன்ற டுபாக்கூர்களிடம் ஏமாறாலம் இருக்க இப்பதிவை பகிரவும்...!

கருத்துகள்

கருத்துரையிடுக

அன்பும் நன்றியும்♥️

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

avatar the way of water எப்படி?❗ ஒரு முறை பார்க்கலாமா - திரை சுமர்சனம்😫

Avatar The Way Of Water  (விமர்சனமாக கூட எடுத்துக்கொள்ளலாம்) ஏதாவது எழுத வேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் என்னத்த எழுதனு விட்டுவிடுவேன் ஆனால் இந்நேரம் ஆகியும் இதை நிச்சயம் எழுதுவதற்கு காரணம் உங்களின் மேல் உள்ள பாசம் நீங்களும் என்னைப் போல் அவஸ்தை பட வேண்டாமென்பதால்...... 2009ல் வெளியான அவதார் 1 எங்கள் மாமா வீட்டில் 3டி டிவியில் பார்த்தோம் நன்றாக தான் இருந்தது.இப்போதும் எனக்கு பெரிதாக இப்படம் செல்வதில் விருப்பமில்லை தம்பியும் ,நண்பனும் கேட்டதால் சென்றேன். அதுவே தாமதமாக தான் சென்றோம் நல்ல வேலை கொஞ்ச நேரம் தப்பித்தேன்😲. படத்தின் கருவே அவதார் தன் குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்,வனவாசியாக இருந்த அவர்கள் தன் குடும்பத்தை காப்பாற்ற கடல்வாசியாக மற்றொரு இனம் வாழும் தீவிற்கு சென்று அடைக்கலம் கேட்டு செல்கின்றனர். அங்கு அவர்களை ஏற்றுக்கொண்டார்களா? வில்லன் எப்படி இவர்களை கொள்ள முயற்சிக்கிறான்,யார் பிழைத்தார்கள்,உயிருடன் இருந்தார்கள் என்பது  க்ளைமாக்ஸ்.   ஆரம்பம் முதல் படம் முடியும் வரை "அய் யய்யோ எப்படா படம் முடியும்" ஏண்டா இப்படி கொல்றீ...