முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மிடில் கிளாஸ் சாமானியனின் வாழ்க்கை இவ்வளவு வலிகள் நிறைந்ததா?

இந்த மிடில் கிளாஸ்,ஹை கிளாஸ்,லோ கிளாஸ் எல்லாமே இச்சமுதாயம் உருவாக்கியது தான் ,அதுவும் பணத்தின் அடிப்படையில் மட்டும் இவை கணக்கிடப்பட்டு இவர்கள் லோ கிளாஸ்,இவர்கள் ஹை க்ளாஸ் என பெரும் பட்டத்தை கொடுக்கிறது இச்சமூகம்.சமூகம் கொடுக்கிறதோ இல்லையோ நாமே நம்மை இப்படி அழைத்துக்கொள்வோம். என்ன வாழ்க்கை டா இது!!!! ஒன்னு பணக்காரராக இருந்திடனும்,இல்ல லோ கிளாஸ்ஸா இருந்திடனும் ,இப்படி மிடில் கிளாசில் பிறந்து ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கிறோமே,ச்சே என்ன வாழ்க்கை டா இது....! ஆசைப்பட்ட பொருளையோ,உணவையோ நினைத்தவுடன் வாங்க முடியாது, வாடகை வீடு,வாங்கிய பொருளுக்கு மாதாமாதம் EMI, குடும்ப கடன்கள்,நெருக்கமானவர்களுக்கு ஒரு பொருளை கூட வாங்கிக்கொடுக்க முடியாத சூழல்,சம்பாதித்த பணம் எல்லாம் கடனுக்கும்,வீட்டிற்கும் போக ஆசைப்பட்ட இடத்திற்கு போகவோ,வேண்டியதை வாங்கவோ பணம் இல்லாமல் அம்மாதத்தை ஓட்டுவது,சரியான உடை கூட அணிய முடியாத அளவிற்கு வறுமை,நம்ம நிலைமை இப்படி ஆகிப்போச்சே,வாழ்க்கைல எப்படியாச்சும் மேல வந்துடனும்,நம்ம தூற்றியவர்கள் முன்பு வாழ்ந்து காட்டணும் ,வேற லெவல் வாழனும்னு வெளியில் கம்பீரமாக சற்றுக் கொண்டும் ஸ்டே...

குறைவான விலையில் இவ்வளவு சுவையான உணவுகளா?

சாயுங்காலம் ஆனால் போதும் ஏதாச்சும் திங்கனும்னு வாய் நமநமன்னும்,வயிறு கபகபன்னு இருக்கும்போது திடிரென இந்த கடை,சாரி சாரி கடையல்ல என் சொர்க்கம் நியாபகம் வர "**த்தா தாம்பரத்துல எறக்குடா என்பது போல க்ரோம்பேட்ல எறக்குடானு இறக்கியாச்சு"... இதுல நகைச்சுவை என்னன்னா காலைல இருந்து கண்டன்ட் கிடைக்காம யோசிச்சிட்டு இருந்தேன்,நாங்க போன கடை கிட்ட ஓரு சண்டை அதை ஒட்டு கேட்டு ஒரு தத்துவத்தை அடிச்சு விடலாம்னு கூட தோணுச்சு நமக்கு எதுக்கு வம்பு "இருக்கிற இடம் தெரியாம இருந்தடனும்" அதனால் தான் இருக்கும் இடமே தெரியாமல் நல்லா தின்னிட்டு, ரசிச்சு ருசிச்சாச்சு.... சரிப்பா இந்த கதையெல்லாம் எனக்கெதுக்கு மூடிட்டு சொல்ல வந்ததை சொல்லிட்டு கிளம்பு அதானே!!!! கூல் மக்கா,கொஞ்சம் இன்ட்ரோ முக்கியம் மாப்பி... நான் கல்லூரி படித்த நாட்களில் ஸ்விகியில் வேலை பார்த்த போது பழக்கமான உடன் பிறவா சகோதரர் ஒருவர் இக்கடையை அறிமுகப்படுத்தினார்,சத்தியமா சொல்றேன் அங்க அந்த விலைக்கு சாப்பிட்ட ஐஸ் க்ரீமின் ருசி பல வருடங்களாக நாக்கில் நாட்டியமாடி இன்னும் வேண்டுமென கேட்டுக்கொண்டே இருந்தது... ஆனால் கடையின் பெயரோ,இடமோ நினைவிலி...

வாகனங்களில் இருக்கும் பாகங்கள் இதற்கு தானா?

இரு சக்கர/கார்/மிதிவண்டி வாகனம், நடை/ஓட்டம் என நாம் அன்றாடம் செய்யும்\ உபயோகிக்கும் நமக்கு தான்  இப்பதிவு...! ● கண்ணாடி (Mirror) வண்டியில் இருபக்கமும் கண்ணாடி ( mirror) வைத்துக்கொள்ளுங்கள், பலர் அதை ஒரு இடையூறாக கருதி எடுத்து விடுகின்றனர், குறிப்பாக இளைஞர்கள் சந்து பொந்துகளில் புகுந்து போக  அதை கழட்டி வீசி விடுகின்றனர், நானே சிறுவயதில் முகம் பார்க்க தான் என நினைத்துள்ளேன் பிறகு தான் புரிந்தது,.. எந்த பக்கம் திரும்பினாலும் அதைப் பார்த்து வேறு  வாகனம் ஏதாவது வருகிறதா என பார்த்து வளைய வேண்டும் இல்லையெனில் பெரும் விபத்து ஏற்பட நேரிடும்.. ஆக கண்ணாடி வச்சிக்கோங்க பா.! ● குறிப்பீடு ( indicator)   ஒவ்வொரு முறை திரும்பும்போதும்/ வளையும்போதும் இந்த இண்டிகேட்டரை எந்தப் பக்கம் திரும்பி வேண்டுமோ அந்த பக்கம் ஆன் செய்து காட்டினாள் பின்னால் வருபவர்கள் உங்கள் வாகத்தில் ஒலிக்கும் ஒளியை/ஒலியை  பார்த்து, கேட்டு கவனமாக நகர்வார்கள்.. இதை  உங்கள் தெருவில் இருந்து முயற்சியுங்கள் அப்போது தான் அது ஒரு பழக்கமாக மாறும்.. மிதிவண்டி ஓட்டுபவர்கள் கையில் சைகை காட்டுங்கள் இல்லையெனில் ...

மனஅழுத்தமாக இருக்கிறதா? தற்கொலை எண்ணம் வருகிறதா?

#மனஅழுத்தம் !!!! இது மற்ற வார்த்தைகளைப் போல் கடந்து விடும் ஓர் சாதாரண  வார்த்தை அல்ல என்பது இதை வாசிக்கும் உங்களுக்குத் தெரிந்திருக்கும், இது ஓர் உணர்ச்சி,உணர்வு..! இந்தப் பதிவைப் முழுமையாக படித்து விட்டு செல்ல உங்களுக்கு ஓர் வேண்டுகோளை விடுக்கிறேன், முழுமையாக படித்து உங்களுக்கு இதயத்திலிருந்து என்ன தோன்றுகிறதோ அதை என்னிடம் அல்லது நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.. மனஅழுத்தம் இந்த வயதில் தான் வரவேண்டும் இப்போ தான் வரவேண்டும் என எந்த வித விதிகளும் இல்லை, யாராவது ஸ்ட்ரெஸ் என் கூறினால் "உனக்கென்ன வயசு ஆச்சு கல்யாணமா? குழந்தையா? குட்டியா? டேய் போடா இதெல்லாம் தாண்டி தான் நான் வந்துருக்கேன் ஓவறா பண்ணாத? ஸ்டேட்டஸ்ல ட்ரெயின் விடாதனு" நம்முடன் இருப்பவர்களுக்கு நாமே பலமுறை சொல்லிருப்போம், ஆனால்  நீ இப்போ எப்படி பீல் பண்ற?உன் மனசுக்குள்ள என்ன ஓடுது?னு மனம் விட்டு கேட்க   தான் பலர் இல்லை ஆனால்..... உங்கள் கருத்தை அவர்களிடம் கூறுவதில் தவறேதும் இல்லை ஆனால் திணிக்க வேண்டாம்,கேளுங்க என்ன சொல்கிறார்களோ அதை கேளுங்க அதுவே மனசு  இலகுவாகினது போல் இருக்கும்.. அவர...

பிள்ளைகள் செய்யும் குற்றத்திற்கு பெற்றோரின் வளர்ப்பா காரணம்?

பிள்ளைகள் ஊதாரித்தனமாக சுற்றிக்கொண்டும்,மது,மாது,பெண்களை பாலியல் தொந்தரவு செய்து கொண்டும், இருக்கும் தீய செயல்களை  எல்லாம் செய்யும் பிள்ளைகளை சமுதாயம் சொல்வது.. பெற்றவர்களின் வளர்ப்பு சரியில்லை! இதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை, ஒரு வயது வரை தான் குழந்தைகளுக்கு நாம் சொல்வது எல்லாம் ஓரளவுக்கு மண்டைக்குள் ஏறும் நீங்க என்ன தான் அருமையான போதனைகளை சொல்லி அற்புதமான வழியில் வளர்த்தாலும் அவர்கள் தடம் மாறி போனால் நாம்  பொறுப்பில்லை.. ஆம், நீங்கள் எப்படி வளர்த்தீர்கள் என்பதில் இல்லை ஒழுக்கம்,அவர்கள் எப்படி வளந்தார்கள் என்பதில் இருக்கிறது, அவர்கள் படிக்கும்,பார்க்கும் விடயங்கள் ,அவர்கள் சிந்தனைகள்,முக்கியமாக அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்கள்,நண்பர்கள் தான் இதற்கு காரணி.என்னதான் நாம் கட்டுக்கோப்பாக இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் என்ன செய்கிறார்களோ எப்படி இருக்கிறார்களோ நம்மை அறியாமலே அப்படி ஆகிவிடுவோம்.. நாமே நமக்கு ஓர் எல்லையை நிர்ணயித்துக் கொள்ளவில்லையெனில் தடம் மாறி போக வாய்ப்புகள் அதிகம், அவர்களை அவ்வளவு எளிதில் திருத்தி விட முடியாது பட்டு திருந்தினால் மட்டுமே ப...

பிராண்டட் பொருட்கள் உபயோகித்தால் தான் மதிப்பா?

சில நாட்களுக்கு முன்பு வார இறுதியென  நண்பன் வீட்டிற்கு புறப்படலாம் என கிளம்பினால் மழை,சரி கொஞ்சம் பொறுமையா ஆகட்டும் என காத்துக்கொண்டிருந்தேன்.. அந்த இடைவேளையில் என் ரெயின் கோட் தேடினேன் எங்கே வைத்தேன் என தெரியவில்லை பிறகு என் கப்போர்டில்  பார்த்தால் swiggy ரெயின் கோட் புதியதாக இருந்தது நான் கல்லூரி படிக்கும் காலத்தில் பகுதி நேரமாக Delivery Executive ஆக வேலை பார்த்தேன் அப்போது சில முறை மட்டுமே பயன்படுத்தியுள்ளேன்.. சரி இதை அணிந்து கொண்டு செல்வோம் என எடுத்தேன் ஆனால் உள்ளுக்குள்  ஒரு வித கூச்சம் இருந்தது, பின் "நான் தான் யார் என்ன பார்க்கிறார்கள் என்பதை    பற்றி கவலை கொள்ள மாட்டேன்"பிறகு இதில் என்ன  இந்த கூச்சமும்,வெட்கமும்.. மிஞ்சிப் போனால் சிலர் சிரிப்பார்கள்,சிலர் கேலி செய்வார்கள், சிரிப்பவர்களோ,கேலி செய்பவர்களோ  சொந்த காசு கொடுத்து நமக்கு எதையும் வாங்கிக்கொடுக்க போவதில்லை, அப்படி கொடுக்கவேண்டிய அவசியமுமில்லை... சரின்னு ரெயின் கோட் அணிந்துகொண்டு கிளம்பினேன் போகும் வழியில் ஒரு swiggy நண்பர் என்ன பிரதர் எத்தனை ஆர்டர்னு கேட்க? எதையோ சொல்லி சமாளிச்சு நேரா ...

செலவுகளை குறைப்பது எப்படி?

பல மாதங்களாகவே தலைக்கவசத்தில் இருக்கும் கண்ணாடியை மாற்றவேண்டுமென்றிருந்தேன் முழுவதும் சேதமாகி கீறளுடன் இருந்ததால் சாலை தெளிவாக தெரிவதில்லை, மழை பெய்யும் வேளையில் முகத்தில் தண்ணீர் அதிகம் அடிக்கிறது,முக்கியமாக தூசிகள் முகத்தில் படாமலும்,பாதுகாப்புக்காகவும் இந்த கண்ணாடி உபயோகமாகிறது... அதனால் இன்று வண்டியின் சீட் தைக்கவேண்டுமென கடைக்கு சென்றேன் அப்படியே இதையும் மாற்றுவோம் என கேட்டேன் ஒரிஜினல் 200 ரூபாய், டூப்ளிகேட் 160 என்கிறார்கள் பணத்தில் பெரிதாக வித்தியாசம் இல்லை என்பதால் 200 ரூபாய் கொடுத்து மாற்றிவிட்டேன் அதில் வெளியே வந்த ரப்பரையும் கடைக்காரர் சரி செய்து கொடுத்துவிட்டார் பயணமும் தெளிவாக அற்புதமாக இருந்தது.. வீட்டிற்கு வந்து "அப்பா இங்க பாரு ஹெல்மெட் கண்ணாடி மாத்திட்டேன்னு சொன்னேன் !!" எதுக்கு டா புதுசே வாங்கி இருக்கலாம்லனு கேட்டார்? இல்லப்பா இதுல இது மட்டும்தான் பிரச்சனை மத்தபடி ஹெல்மெட் அருமையா இருக்குனு சொன்னேன் சரினு சொன்னார்.. Vega பிராண்ட்டில் இந்த மாடல் 1000ரூ ஆகிறது எதற்கு தேவையில்லாமல் புதிய தலைக்கவசம் இதை சரி செய்துவிட்டேன் அருமையாக இருக்கிறது... இதே  கதை தான் சீட...